Published:Updated:

``இந்த புத்தகம் உங்கள் வீட்டிலிருந்தால், திருச்சியே உங்களிடமிருப்பதாக அர்த்தம்"- கவிஞர்.நந்தலாலா

கவிஞர். நந்தலாலா

இமயமலையை விட வயதான திருச்சி மலைக்கோட்டை பற்றி எழுதியிருக்கிறேன். இலக்கியம், ஆன்மிகம் போன்ற திருச்சியை பற்றிய பலவகை செய்திகளும் இதில் அடங்கியிருக்கிறது.

``இந்த புத்தகம் உங்கள் வீட்டிலிருந்தால், திருச்சியே உங்களிடமிருப்பதாக அர்த்தம்"- கவிஞர்.நந்தலாலா

இமயமலையை விட வயதான திருச்சி மலைக்கோட்டை பற்றி எழுதியிருக்கிறேன். இலக்கியம், ஆன்மிகம் போன்ற திருச்சியை பற்றிய பலவகை செய்திகளும் இதில் அடங்கியிருக்கிறது.

Published:Updated:
கவிஞர். நந்தலாலா
விகடன் டிஜிட்டல் தளத்தில் வெளிவந்த கவனம் ஈர்த்த `திருச்சி ஊறும் வரலாறு' என்கிற தொடர் இன்று மாலை புத்தகமாக வெளியாகிறது.

திருச்சியில், இன்று புத்தக திருவிழா கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. அந்த புத்தக திருவிழாவில் வைத்து ,`திருச்சி ஊறும் வரலாறு' புத்தகம் வெளியாகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக கவிஞர் நந்தலாலாவிடம் பேசினோம்.
 
இந்த நூல் தொடர்பாக பேசிய அவர் "ஊறும் வரலாறு என்னும் நூல் குறிப்பாக திருச்சியை பற்றியது, அந்த புத்தகத்தின் முன்னுரையில் 'திருச்சியில் கால் ஊன்றி, தமிழ்நாட்டைக் கழுவிய வரலாறு' என எழுதியிருகிறேன். இந்தப் புத்தகம் திருச்சியைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கிடையாது என்பதை கூறவே இந்த பதிவு. உதரணமாக, இந்த புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை எழுதியிருக்கிறேன். சுஜாதா ஸ்ரீ ரங்கத்தில் பிறந்ததால் இதில் எழுதியுள்ளோம். ஆனால், சுஜாதா திருச்சியோடு அடைகின்ற நபர் அல்ல.

ஊறும் வரலாறு
ஊறும் வரலாறு

சமயபுரம் மாரியம்மன் பற்றிய அற்புதமான கட்டுரை இதில் இருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் திருச்சியிலிருந்தாலும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாரியம்மன் கோயில் திருவிழாவும் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குப் பின்பு தான் நடைபெறும். பி.எச்.இ.எல் தற்போது திருச்சியில் தான் இருக்கிறது. தமிழ் நாட்டின் வீடுகளில் நான்கு விளக்குகள் எறிந்தால் அதில் மூன்று விளக்குகளில் பி.எச்.இ.எலின் பங்களிப்பு இருக்கும் என்று கூறுவார்கள். அப்போது இது திருச்சி வரலாறாக மட்டுமின்றி தமிழ்நாட்டின் வரலாறாக தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 34 கட்டுரைகளின் தலைப்புகளும் கவித்துவமாக இருக்கும், ஆங்கிலோ - இந்தியர்கள் பற்றிய கட்டுரைக்கு,' வந்தது தெரியும் போனது எங்கே' என தலைப்பு வைத்திருப்பேன். இதுபோன்று அனைத்து தலைப்புகளும் கவித்துவமாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வீரமாமுனிவர் பற்றிய கட்டுரையை பாடலாசிரியர் யுகபாரதி பாராட்டி எழுதியிருக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி, பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்கள்.ஓவியர் ஆதிமூலம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஒரு தொடருக்கு, முதன் முதலில் ஓவியர் ஆதிமூலம் போன்ற நவீன ஒவியரை பயன்படுத்தியது ஆனந்த விகடன் தான்.

திருச்சி புத்தகத் திருவிழா
திருச்சி புத்தகத் திருவிழா

மேலும் இமயமலையை விட வயதான திருச்சி மலைக்கோட்டை பற்றி எழுதியிருக்கிறேன். இலக்கியம், ஆன்மிகம் போன்ற திருச்சியை பற்றிய பலவகை செய்திகளும் இதில் அடங்கியிருக்கிறது. இந்த புத்தகம் ஏன் வாங்கவேண்டும் என கேள்வி எழுப்புபவர்களிடம்,"உங்கள் வீடு திருச்சியில் இருக்கிறது என்று கூறுவீர்கள்.இந்த புத்தகம் வாங்கிய பிறகு திருச்சி உங்கள் வீட்டிலிருக்கும்" என்பதை பதிலாக கூறுவேன். இதை படித்தவர்கள் இந்த புத்தகம் மிகவும் சுவையாக இருக்கிறது என்று கூறினார்கள்." என்றார்.