Published:Updated:

"400 படிகள் ஏறி, சுப்பிரமணியசுவாமியை வணங்கி சதிர் நடனம் ஆடுவோம்" - பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்

முத்துக்கண்ணம்மாள் ( DIXITH )

சுதந்திரம் வந்ததுக்கு அப்புறம்தான் எங்க வாழ்க்கையே தலைகீழா மாறிப்போயிடுச்சு. கோயில்ல சதிர் ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. மகாராஜாவோட ஆட்சியும் முடிவுக்கு வந்திடுச்சு. அதற்கப்புறம் கோயில்ல நாங்க சதிர் ஆடுறதில்லை.

"400 படிகள் ஏறி, சுப்பிரமணியசுவாமியை வணங்கி சதிர் நடனம் ஆடுவோம்" - பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்

சுதந்திரம் வந்ததுக்கு அப்புறம்தான் எங்க வாழ்க்கையே தலைகீழா மாறிப்போயிடுச்சு. கோயில்ல சதிர் ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. மகாராஜாவோட ஆட்சியும் முடிவுக்கு வந்திடுச்சு. அதற்கப்புறம் கோயில்ல நாங்க சதிர் ஆடுறதில்லை.

Published:Updated:
முத்துக்கண்ணம்மாள் ( DIXITH )

கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதிலேயே நேர்ந்து விடப்பட்ட பெண்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். கோயில் பணியாளர்களாக இருந்த இவர்கள், ஆடல், பாடல் கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று இருந்தனர். திருவிழாக்களின் போது, கடவுளை வழிபட்டு, சதிராட்டம் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர். அந்த வகையில்தான், விராலிமலை சுப்பிரமணியசாமி கோயிலில், முருகப்பெருமானுக்கு, பொட்டுக்கட்டி விடப்பட்டிருக்கிறார் முத்துக்கண்ணம்மாள் (83).

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தவர், இன்று தேவதாசி மரபின் கடைசி வாரிசாக எஞ்சி நிற்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துக்கண்ணம்மாளுக்குக் கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்கண்ணம்மாள்
முத்துக்கண்ணம்மாள்
DIXITH

பத்மஸ்ரீ விருது கிடைத்த மகிழ்ச்சியிலிருந்த முத்துக்கண்ணம்மாளிடம் பேசினோம்,

" விராலிமலைதான் எனக்கு சொந்த ஊர். எங்க தாத்தா, அப்பா, அம்மா, சித்தின்னு எங்க குடும்பமே சதிராட்டக் குடும்பம். அப்பா ராமச்சந்திரன் நட்டுவனார்கிட்ட இருந்துதான் முறைப்படி சதிராட்டத்தைக் கத்துக்கிட்டேன். அவர்தான் என் குருவும்கூட. விராலிமலையைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் எங்க குடும்பம்தான் சதிர் ஆடும். எனக்கு 7வயசு இருக்கும்போதே சதிர் ஆட வந்திட்டேன். ஏழு வயசு இருக்கும்போதே விராலிமலை முருகனுக்குப் பொட்டுக்கட்டி விட்டுட்டாங்க. அந்த நேரத்துல என்னோட சேர்த்து மொத்தம் 32 பேர் கோயிலுக்கு சேவை செஞ்சிட்டிருந்தோம். 32 பேருக்கும் சதிர் சொல்லிக்கொடுத்தது எங்க அப்பாதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் காலை, மாலை இருவேளையும் 400 படிகள் ஏறி,இறங்கி சுப்பிரமணியசுவாமியை வணங்கிப் பாடல் பாடி, சதிர் நடனம் ஆடுவதுதான் எங்களோட பணி. கோயில் திருவிழாக்களில் நாங்க சதிர் ஆடுவோம். சுற்றிலும் கும்மி, கோலாட்டம் எல்லாம் நடக்கும். அப்பவெல்லாம் இப்ப மாதிரி லைட்டெல்லாம் கிடையாது. விட்டி, பெட்டர்மாஸ் லைட்தான். ஆனால், சதிர், கும்மி, கோலாட்டம் பார்க்க அவ்வளவு அருமையா இருக்கும். அப்போ விராலிமலைக் கோயிலை நிர்வகிச்சிக்கிட்டு இருந்த புதுக்கோட்டை மகாராஜா ராஜகோபால தொண்டைமான்தான் எங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும், சலுகைகளையும் செஞ்சி கொடுத்தாரு. நாங்க 32 பேரும் சதிராடுவோம். அப்பவெல்லாம் எங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. ரொம்ப நல்லா வாழ்ந்தோம். ஊரே எங்களைக் கொண்டாடும்.

முத்துக்கண்ணம்மாள்
முத்துக்கண்ணம்மாள்
DIXITH

சதிர் ஆட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப நுணுக்கமா, பாடிக்கிட்டே, ஆடணும். எங்கள் ஆட்டத்தைப் பார்க்க பெரிய கூட்டமே சேரும். எங்களோட சதிர் ஆட்டம்தான், இப்போ பரத நாட்டியமா மாறிப்போயிருக்கு. சுதந்திரம் வந்ததுக்கு அப்புறம் தான் எங்க வாழ்க்கையும் ரொம்பவே மாறிப்போயிடுச்சு. கோயில்ல சதிர் ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. மகாராஜாவோட ஆட்சியும் முடிவுக்கு வந்திடுச்சு. அதற்கப்புறம் கோயில்ல நாங்க சதிர் ஆடுறதில்லை. எங்க பிழைப்புக்காக, மன்னர்கள் நிலங்களைக் கொடுத்தாங்க. அதுல பயிர் விளைவித்து நாம எடுத்துக்கிட்டு கோயிலுக்குக் கொடுக்கணும். அதற்கப்புறம் அரசு தீர்வை கட்டச் சொல்லுச்சு. பலரும் நிலத்தை விற்றுத் தீர்வை கட்டுனாங்க. அதற்கப்புறம் எங்கள்ல பலரும் ஆட்டத்தை மறந்துட்டு விவசாய வேலை பார்க்கப்போயிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சதிராட்டம் கொஞ்சம், கொஞ்சமா காணாமல் போயிடுச்சு. எங்க பாட்டிக்குக் கொடுத்த 18 ஏக்கர்ல இப்போ ஒரு ஏக்கர் நிலம்கூட முழுசா இல்லை. என்னோட சேர்ந்து ஆடுனவங்கள்ல 32 பேர்ல நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன். நான் மட்டும் இந்தக் கலையை இப்பவும் உயிர்ப்போட வச்சிக்கிட்டு இருக்கேன். சுவாமிக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்ட யாரும் அடுத்து தாலிகட்டித் திருமணம் செஞ்சிக்க மாட்டாங்க. எங்களை ஏத்துக்கிட்டு சேர்ந்து வாழ விரும்புறவங்ககூட வாழ்வோம். அப்படி என்னைய ஏத்துக்கிட்டவர்தான் என் கணவர் தண்டபாணி. இப்ப அவர் உயிரோட இல்லை.

முத்துக்கண்ணம்மாள்
முத்துக்கண்ணம்மாள்
DIXITH

எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. மகள் வீட்டுலதான் வாழ்ந்துகிட்டிருக்கேன். அரசோட உதவித்தொகையா ரூ.3000 கிடைக்குது. அத வச்சிதான் பிழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கேன். இப்ப ஒண்ணு, ரெண்டு பேர் இந்தக் கலை பத்தித் தெரிஞ்சிக்கிட்டு என்னை அணுகுறாங்க. அவங்களுக்குக் கத்துக்கொடுக்கிறேன். எனக்கு அப்புறம் இந்தக் கலையோட அருமை, இப்ப உள்ள தலைமுறைங்களுக்குத் தெரியாமலே போயிடும்னு ரொம்ப வருத்தப்பட்டேன். எனக்கு அறிவிச்சிருக்கிற இந்த விருது மூலமா கண்டிப்பா என்னோட இந்தக் கலை அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேரும்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism