Published:Updated:

சிவகாமியின் சபதம் - ரதியின் தூது - பகுதி-15|ஆடியோ வடிவில் கேட்க!

சிவகாமியின் சபதம்

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்கலாம்.

சிவகாமியின் சபதம் - ரதியின் தூது - பகுதி-15|ஆடியோ வடிவில் கேட்க!

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்கலாம்.

Published:Updated:
சிவகாமியின் சபதம்

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். குதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது. குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கித் தன்னை நோக்கி நடந்து வருவதையும் அவள் உணர்ந்தாள். வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு அவளுக்கு உணர்த்தியது. இருந்தாலும், திரும்பிப் பார்த்துச் சந்தேகம் தீரவேண்டுமென்ற ஆவல் அளவில்லாமல் எழுந்தது. அந்த ஆவலைப் பலவந்தமாக அடக்கிக்கொண்டு, சிவகாமி சிலையைப்போல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். குமார சக்கரவர்த்தி, மாமல்ல நரசிம்மர் கையில் பிடித்த வேலுடன் வந்து சிவகாமியின் அருகில் குளக்கரைப்படியில் நின்றார். குளத்தின் தெளிந்த நீரில் சிவகாமியின் உருவத்துக்குப் பக்கத்தில் நரசிம்மவர்மரின் உருவமும் புலப்பட்டது. அப்போதும் சிவகாமி அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யௌவன முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. அவரும் சிவகாமியை நேராகப் பார்க்காமல், தண்ணீரில் பிரதிபலித்த அவளுடைய முழுமதி முகத்தை உற்று நோக்கினார். சிவகாமி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளுக்கு இன்னொரு பக்கத்தில் நின்ற மான்குட்டியைப் பார்த்து, "ரதி! இவர் யார்? எதற்காக இங்கு வந்தார் என்று கேள்?" என்றாள். முழுமையாகக் கேட்க

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism