Published:Updated:

`ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும்'; வைரமுத்துவின் பாட்டுத் தொடர் மீண்டும் ஆரம்பம்!

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகவுள்ளது.

`ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும்'; வைரமுத்துவின் பாட்டுத் தொடர் மீண்டும் ஆரம்பம்!

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகவுள்ளது.

Published:Updated:
கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் என்ற பாட்டுத் தொடர் மொத்தம் 100 பாடல்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பாட்டுக்கும் ஓர் இசையமைப்பாளர் ஒரு பாடகர் ஓர் இயக்குநர் என்று 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பாட்டுத் தொடர். வாரம் ஒரு பாடல் வீதம் நாட்படு தேறலின் முதல் பாகம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்து நாட்படு தேறல் இரண்டாம் பாகம் ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது.

நாட்படு தேறல்
இரண்டாம் பருவம் போஸ்டர்
நாட்படு தேறல் இரண்டாம் பருவம் போஸ்டர்

நாட்படு தேறல் இரண்டாம் பாகத்தில் வித்யாசாகர் - யுவன்சங்கர் ராஜா - ஜி.வி.பிரகாஷ் - ரமேஷ் விநாயகம் - அனில் சீனிவாசன் - ஜெரார்ட் பெலிக்ஸ் - நெளபல் ராஜா – அவ்கத் - வாகு மசான் - இனியவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் -ஹரிஹரன் – சங்கர் மகாதேவன் – பாம்பே ஜெயஸ்ரீ – விஜய் யேசுதாஸ் – ஹரிணி - கல்பனா ராகவேந்தர் – பென்னி தயாள் - ஹரிசரண் – அந்தோணி தாசன் – வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பாடகர்களும், காந்தி கிருஷ்ணா – சரண் – பரதன் – சிம்புதேவன் – சரவண சுப்பையா – காக்கா முட்டை மணிகண்டன் - விருமாண்டி – கணேஷ் விநாயம் – விக்ரம் சுகுமாரன் – தளபதி பிரபு - ரமேஷ் தமிழ்மணி – ராதிகா உள்ளிட்ட இயக்குநர்களும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரமுத்து
வைரமுத்து

இந்த பாட்டுத் தொடர் குறித்து கூறிய வைரமுத்து , 'எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும்பங்கிருக்கிறது. இன்று உலகமெங்கும் திரைப்படத்தில் தாய்மொழி குறைந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ் கற்றுக்கொடுக்கும் பாடல்களாக ஆல்பங்கள் தயாரிக்கப்பட வேண்டியிருக்கின்றன. ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும், ஆற்றவேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு ஒத்துழைக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. தகுதிமிக்க ஆதரவாளர்களால்தான் இது சாத்தியமாகிறது; அவர்களை நான் மறக்க மாட்டேன்' என்றும் 'நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism