Published:Updated:

ஆத்மாநாம் விருதுக்கான இறுதிப் பட்டியல் வெளியீடு

சக்தி தமிழ்ச்செல்வன்

தமிழ் நவீன கவிதை உலகில் சலனத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆத்மாநாம். அவரது கவிதைகள் சமூக அவலங்களில் பாதிப்புக்குள்ளான மனிதனின் அக உணர்வுகளைச் சித்திரமாக்கின.

ஆத்மாநாம்
ஆத்மாநாம்
தமிழ் நவீன கவிதை உலகில் சலனத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆத்மாநாம். அவரது கவிதைகள் சமூக அவலங்களில் பாதிப்புக்குள்ளான மனிதனின் அக உணர்வுகளைச் சித்திரமாக்கின.

இதே நாளில் 1984-ம் ஆண்டு ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரிலான ஆத்மாநாம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் கவிஞர்களுக்கும், கவிதை மொழிபெயர்ப்பாளர்களுக்கும் `ஆத்மாநாம்’ விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த விருது குறித்து ஓவியர், நாவலாசிரியர் சீனிவாசன் நடராஜனிடம் பேசினோம்.

"எனக்குத் தனிப்பட்ட முறையில் என்னுடைய ஓவியங்களுக்கும், படைப்புகளுக்கும் ஆத்மாநாமின் கவிதைகள் உந்து சக்தியாக இருந்துள்ளன. " சீனிவாசன் நடராஜன்
"எனக்குத் தனிப்பட்ட முறையில் என்னுடைய ஓவியங்களுக்கும், படைப்புகளுக்கும் ஆத்மாநாமின் கவிதைகள் உந்து சக்தியாக இருந்துள்ளன. " சீனிவாசன் நடராஜன்

இந்த செருப்பைப் போல்

எத்தனை பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனை பேர்

பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்தச் சட்டையைப் போல்

எத்தனை பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு.

- ஆத்மாநாம்

" ஆத்மாநாம் தமிழ் கவிதை உலகில் ஒரு பெரு உடைப்பை நிகழ்த்தியவர். அவரது சிற்றிதழ், கவிதைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய பாய்ச்சலை உருவாக்கின. புதியவர்கள் பலரது வருகைக்கு, ஆத்மாநாமின் படைப்புகள் உந்து சக்தியாக இருந்துள்ளன. எனக்குத் தனிப்பட்ட முறையில் என்னுடைய ஓவியங்களுக்கும், படைப்புகளுக்கும் ஆத்மாநாமின் கவிதைகள் உந்து சக்தியாக இருந்துள்ளன. ஆத்மாநாம் கவிதைகள் மட்டுமின்றி, இசை, ஓவியம் பல்துறை சார்ந்த கலைஞர்களோடும் நட்பில் இருந்தார். ஒரு படைப்பாளிக்கு பல கலைகளின் மீதான பார்வை அவனது படைப்பு மனதுக்கு வலு சேர்க்கும். ஆந்மாநாமின் பெயரால் வழங்கப்படுகிற விருது ஒரு முக்கியமான விருது.

ஆத்மாநாம் விருது
ஆத்மாநாம் விருது

ஆத்மாநாமின் அறக்கட்டளை மற்றும் மெய்ப்பொருள் பதிப்பகம் சார்பில் 5 வது ஆண்டாக இந்த விருது வழங்கப்படுகிறது. மிகத் தேர்ந்த இலக்கியவாதிகளைக் கொண்டு இரண்டு கட்ட தேர்வு நிலைகளுக்குப் பிறகே விருதுக்கான இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது

வெற்றி பெறுபவருக்கு 25000 ரூபாய் பணம் தரப்படுகிறது. விருது பெறுபவருக்கு அவருக்கு ஏன் அந்த விருது வழங்கப்பட்டது என்ற Metal Hetching ஒன்றும் வழங்கப்படும். விருது பெறும் கவிஞர் குறித்தும் அவ குறித்தும் பலரது கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றும் விழா அன்று வெளியிடப்படும். மொழிப்பெயர்ப்புக்கான விருதும் வழங்கப்படுகிறது.

ஆத்மாநாம் விருது
ஆத்மாநாம் விருது

ஒவ்வொரு வருடமும் சிறப்பு விருந்தினர்களாக பிற மொழிக் கவிஞர்கள் கலந்துகொள்கிறார்கள். அவரது உரையையும் அன்றே நூலாக வெளியிடுகிறோம். சிறப்பு விருந்தினர்களாக சந்திரகாந்த பாட்டில் மராட்டிய கவிஞர், சச்சிதானந்தன், கவிஞர் அனிதா தம்பி, கன்னடக் கவிஞர்.கவிஞர் சிவபிரகாஷ் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். இந்த வருடம் விருது பெறுபவர்களின் குறும்பட்டியல் தயாராகிவிட்டது. இவர்களில் ஒருவர்தான் விருது பெற உள்ளார்.

  1. தேன்மொழி தாஸ் - காயா

  2. ஸ்டாலின் சரவணன் - ரொட்டிக்களை விளைவிப்பவன்

  3. முகுந்த் நாகராஜன் - கின் மோர்

  4. நேசமித்ரன் - துடிக் கூத்து

  5. வெய்யில் - அக்காளின் எலும்புகள்

  6. கவின் - யக்கர் உடுக்குறி

  7. ந.பெரியசாமி - குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்

  8. ஷக்தி - அபோர்ஷனில் நழுவிய காரிகை

  9. பெரு. விஷ்ணுகுமார் - ழ என்ற பாதையில் நடப்பவன்

ஆத்மாநாம் கொண்டாடப்பட வேண்டிய மகத்தான ஆளுமை. அவரை நினைவு கூறுவோம். " என்றார் சினீவாசன் நடராஜன்