Published:Updated:

சிவகாமியின் சபதம் - புவன மகாதேவி - பகுதி 8 | ஆடியோ வடிவில் கேட்க!

சிவகாமியின் சபதம்

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்கலாம்.

சிவகாமியின் சபதம் - புவன மகாதேவி - பகுதி 8 | ஆடியோ வடிவில் கேட்க!

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்கலாம்.

Published:Updated:
சிவகாமியின் சபதம்

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். மாமல்லர் தந்தையின் சொற்படி அரண்மனை நிலாமுற்றத்தைக் கடந்து சென்று, உள் வாசலை நெருங்கியதும், குதிரை மீதிருந்து இறங்கினார். அங்கே சித்தமாய்க் காத்திருந்த பணியாட்கள் குதிரையைப் பிடித்து அப்பாலே கொண்டு சென்றார்கள். பிறகு, மாமல்லர் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து, தீபம் ஏந்துவோர் தம்மைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக, அவ்வளவு விரைவாக நடந்து சென்றார். புதிதாக அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்கிறவர்கள் அங்கே குறுக்கு நெடுக்குமாகச் சென்ற நடைபாதைகளில் வழி கண்டுபிடித்துச் செல்வது அசாத்தியமாயிருக்கும். நரசிம்மர் அந்தப் பாதைகளின் வழியாக வளைந்து வளைந்து சென்று அரண்மனை அந்தப்புரத்தை அடைந்தார். அங்கே சிற்ப வேலைகளினால் சிறப்படைந்த ஒரு வாசலை அவர் அணுகியதும், "குழந்தாய்! வந்தாயா?" என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்தரசியான புவன மகாதேவி அந்தப்புர வாசற்படியில் வந்து நின்றார். அவருடைய கம்பீரமான தோற்றமும் முதிர்ந்த சௌந்தர்யவதனமும்.... முழுமையாகக் கேட்க...

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism