Published:Updated:

சிவகாமியின் சபதம் - விடுதலை - பகுதி-9 |ஆடியோ வடிவில் கேட்க!

சிவகாமியின் சபதம்

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்கலாம்.

சிவகாமியின் சபதம் - விடுதலை - பகுதி-9 |ஆடியோ வடிவில் கேட்க!

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்கலாம்.

Published:Updated:
சிவகாமியின் சபதம்

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். கயிற்றின் வழியாக மேலே ஏறிய பரஞ்சோதி கூரையை அணுகியபோது, இரண்டு இரும்புக் கரங்கள் தன் புயங்களைப் பிடித்து மேலே தூக்கிவிடுவதை உணர்ந்தான். மறுகணமே தான் மேற்கூரையில் நிற்பதையும், தனக்கு எதிரில், "பேச வேண்டாம்" என்பதற்கு அறிகுறியாக உதட்டில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டு புத்த பிக்ஷு நிற்பதையும் பார்த்தான். அவருக்குப் பின்னால் இன்னொரு இளம் புத்த சந்நியாசி நிற்பதும் தெரிந்தது. பெரிய பிக்ஷு ஜாடை காட்டியவுடன் இளம் புத்தன் கயிற்றை மேலே இழுத்துச் சுருட்டி ஒரு காவித் துணிக்குள் அதை வைத்துக் கட்டினான். பரஞ்சோதி கூரைமேல் நின்ற வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் காஞ்சி நகரத்து மாட மாளிகைகளின் உப்பரிகைகள் வெண்ணிலாவில் தாவள்யமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். இதற்குள் பெரிய பிக்ஷுவானவர் சிறைச்சாலை கூரையின் துவாரத்தை ஓடுகளைப் பரப்பி அடைத்துவிட்டு... முழுமையாகக் கேட்க...

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism