பிரீமியம் ஸ்டோரி
கறுப்புப் பணம்… பணமதிப்பிழப்பு… ஜி.எஸ்.டி வரி… 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் கனவு… ஜி.டி.பி வீழ்ச்சி... இப்படி பரபரப்பான பொருளாதாரம் சார்ந்த வார்த்தைகளால் எப்போதும் சூழப்பட்டிருக்கிறோம். கொரோனாவால் மொத்த இந்தியாவும் அல்லாடிக்கொண்டிருக்கும் இச்சூழலில், முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். பொதுவாகவே ‘பொருளாதாரம் என்பது நிபுணர்களின் விஷயம்’ என நாம் ஒதுங்கிக்கொள்கிறோம். ஆனால், வாழ்வின் எல்லாத் தளங்களிலும் நாம் பொருளாதாரத்தால்தான் இயக்கப்படுகிறோம். உண்மையில் இதை அறிந்திருக்கிறோமா? இதெல்லாம் நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதா? நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோமா? உண்மையில் பொருளாதாரம் அவ்வளவு சிக்கலானதா?

‘இல்லை!’ என்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும் எழுத்தாளருமான யானிஸ் வருஃபாகிஸ். ‘பொருளியலாளர்களிடம் விட்டுவைக்கக்கூடாத மிக முக்கியமான விஷயமே பொருளாதாரம்தான் என்று நான் உறுதியாக நம்புவதே, இந்தப் புத்தகம் எழுதக் காரணம்’ என்கிறார். பதினேழு வயதான தன் மகள் ஸீனியாவுக்குப் பொருளாதாரம் குறித்து விளக்குவதுபோல மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான நூல் இது.

படிப்பறை

எல்லாக் குழந்தைகளும் அம்மணமாகவே பிறக்கின்றன. ஆனாலும், உலகில் ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்? இந்த அடிப்படையான கேள்வியை ஆதாரமாக வைத்துத் தனிமனிதன், சந்தை, பொருளாதாரம், உழைப்பு, பொருள், அரசு, கடன், போர், வங்கி, இயற்கை என வாழ்வோடு பின்னிப்பிணைந்து பொருளாதாரம் செயல்படும் விதத்தை விவரித்திருக்கிறார். ‘ஏன்’ என்று தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து முடிக்கும்போது, ‘தேடுதலிலிருந்து நாம் ஓயமாட்டோம்’ எனும் கவிதையை வாசகரிடம் கையளிக்கும் விதம் அழகானது. தமிழின் மிக முக்கியமான மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை இந்நூலை ஆங்கிலம் வழியே மொழிபெயர்த்திருக்கிறார்.

உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை - அந்தப் புதிரை - அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் எனில், இந்தப் புத்தகம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்

யானிஸ் வருஃபாகிஸ்

தமிழில்:

எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு:

க்ரியா

பு.எண்:2, ப.எண்25,

17வது கிழக்குத் தெரு,

திருவான்மியூர் - 600 041.

விலை: ரூ. 275

பக்கம்: 204

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு