அந்தப் பெண்களில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளின் வரலாற்றைத் தொகுத்து ‘கருஞ்சட்டைப் பெண்கள்’ என்னும் நூலாக்கியிருக்கிறார் பெரியாரியப் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா.

பெரியாரின் தங்கையான கண்ணம்மாள், தேவதாசி முறையை ஒழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ், வீரம்மாள், டாக்டர் தருமாம்பாள், நீலாவதி அம்மையார், மணியம்மையார் ஆகியோரைப் பற்றி விரிவாகவும், பொற்செல்வி இளமுருகு, சத்தியவாணி முத்து உள்ளிட்ட 11 பெண்ணாளுமைகள் குறித்துச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார்.

தேவதாசி முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் குறித்து விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார் ஓவியா. முத்துலெட்சுமி ரெட்டியின் பங்களிப்புகளைப் பதிவு செய்யும் ஓவியா, தேவதாசி ஒழிப்பில் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் பெரியாரின் பங்களிப்பை ஏன் அவர் இருட்டடிப்பு செய்தார் என்றும் கேள்வி எழுப்புகிறார். கண்ணம்மாள் தொடங்கி மணியம்மை வரையிலான ஆளுமைப்பதிவுகளில் ஓவியாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது. இன்னமும் எழுதப்படாத அன்னபூரணி, தி.சு.மாசிலாமணி, பினாங்கு ஜானகி, ஜெயசேகரி, லட்சுமி, கிரிஜாதேவி, சுப விசாலாட்சி, சிதம்பரம் அம்மாள், பண்டிதை ரங்கநாயகி, வள்ளியம்மாள், நீலாம்பிகை, கே.ஏ.ஜானகி அம்மாள்.போன்றோரைப் பற்றியும் ஓவியா விரிவாக எழுதவேண்டும். இவர்கள் இயக்கச் செயற்பாடுகளுடன் ‘குடியரசு’ இதழில் தொடர்ச்சியாக எழுதிவந்த பெண்களும்கூட.

சமகாலப் பெரியாரியக்கங்களில் பெண்களின் பங்களிப்பு, பெண் தலைமைகள் குறித்தும் ஓவியா ஆராய்ந்திருக்கலாம். அதேபோல், பெரியாரின் அட்டைப்படம் பெரும்பாலான நூல்களில் இடம்பெறத்தான் செய்கின்றன. பெண்ணாளுமைகள் பற்றிய இந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில் அவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

கருஞ்சட்டைப் பெண்கள்

ஓவியா

வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை 87.

பக்கங்கள்: 176, விலை: 130 ரூபாய்

தொலைபேசி: 044 42047162