Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மிட்டாய் பசி

படிப்பறை

மிட்டாய் பசி

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

புனைவிலக்கியத்தில் யதார்த்தக் கதைகளின் தேவையும் முக்கியத்துவமும் எப்போதும் இருந்துவந்திருக்கின்றன. யதார்த்தமே வாழ்வினைப் பிரதிசெய்து மொழிக்கு வழங்குகிறது. உண்மை வாழ்வு வழங்கும் சுவாரஸ்யத்துக்கு நிகரானவை புனைவிலக்கியங்கள். சமீபத்தில் தமிழில் அப்படியான புனைவுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வரும் சூழலில்தான் ஆத்மார்த்தியின், ‘மிட்டாய் பசி’ நாவல் வெளிவந்திருக்கிறது.

ஒருவனின் வாழ்க்கை காலத்தால் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதை அவனைத் தவிர வேறு யாருமே அறிந்து சொல்லிவிட முடியாது. இந்த நாவலின் கதாநாயகன் ஆனந்த் பிறப்பதற்கு முன்பாகவே அவன் வாழ்வினை பாதிக்கும் பல விஷயங்கள் நடந்தேறிவிடுகின்றன. ஆனந்தின் தந்தை மார்ஸ், தாய் செல்லம்மா, அவளின் தோழி ஜெகா எனத் தொடங்கும் கதையின் சுவாரஸ்யம் இது ஆனந்தின் கதையாகப் போகிறது என்கிற சுவடே இல்லாமல் விறுவிறுப்பாகத் தொடங்கி விரிகிறது நாவல்.

சிறுவன் ஆனந்தின் வாழ்க்கை தடம் புரள்கிறது. சுயநலமும் கௌரவப் பித்தும் கொண்ட மனிதர்கள் ஆனந்தின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறார்கள். அதில் அவன் அம்மா செல்லம்மா, அத்தை திலகா, ஆசிரியர் அருள் என அனைவரும் அடக்கம். எல்லோராலும் கைவிடப்பட்ட சிறுவனாக மாறும் அவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டு, செய்யாத கொலைப்பழிக்காக சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

படிப்பறை

அங்கு அவனுக்குக் கிடைக்கும் நட்புகளும் அவனை குரோதத்தின் உச்சத்தை நோக்கியே நகர்த்துகின்றன. ஆனால், காலம் முன்னால் செய்த பிழைகளைப் பின்னால் தானே திருத்திக்கொள்வதைப்போல ஆனந்துக்கு வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துகிறது. யாருக்காகச் சிறை செல்ல நேர்ந்ததோ அவனையே மீண்டும் சந்திக்கும் காலமும் வருகிறது. அப்போது ஆனந்த் வாழ்வின் எந்த நிலையில் இருந்தான் என்பதுதான் இந்த நாவல்.

ஒருவகையில் மனிதத்தின் மீது நம்பிக்கையூட்டும் யதார்த்த நாவல்கள் கொஞ்சம் செவ்வியல் தன்மையைத் தன்மீது பூசிக்கொள்ளும். அப்படித் தன்மீது ஒரு மெல்லிய செவ்வியல் அழகைப் பூசிக்கொண்டு மிளிர்கிறது ‘மிட்டாய் பசி.’

மிட்டாய் பசி

ஆத்மார்த்தி


வெளியீடு:
தமிழினி
63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை - 51
8667255103
பக்கங்கள்: 184
விலை: ரூ. 180

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism