Published:Updated:

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!
பிரீமியம் ஸ்டோரி
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

Every creature has a story

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

Every creature has a story

Published:Updated:
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!
பிரீமியம் ஸ்டோரி
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

காகங்களுக்குத் தெரியாமல் குயில்கள் அவற்றின் முட்டைகளைக் காகங்களின் கூட்டில், காத்திருந்தும் வேவுபார்த்தும் இட்டுச் செல்கின்றன. குழப்பத்தில் காகங்களும் குயில் குஞ்சுகளை உணவூட்டி வளர்க்கின்றன. Brood Parasitism என்ற இச்சம்பவம் நாம் அறிந்தது. அப்படி வளரும் குயில் குஞ்சுகளுக்கு அடையாளச்சிக்கல் ஏற்படுமா? காகத்தின் கூட்டில் வளர்ந்த குயில் குஞ்சு, தாயை மீண்டும் எப்படிப் போய்ச்சேரும்?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

2014-ம் ஆண்டு. ஆஸ்திரேலியாவில் ஒரு காட்டுத்தீ. 227 ஹெக்டேர் அளவுக்குக் காடு எரிந்து சாம்பலாகிறது. தீ தின்று செரித்ததில் எஞ்சியது சாம்பல் மேடு மட்டும்தான். வெந்து தணிந்த காட்டில் சில எறும்புத்திண்ணிகள் பிழைத்துக்கிடந்தன. அந்த எறும்புத்திண்ணிகளின் உயிர்வாழும் தந்திரம்தான் என்ன?

பிற உயிரினங்களின் வாழ்க்கைமுறை பற்றி அறியும் ஆர்வம் எப்போதும் மனிதர்களுக்கு உண்டு. அறிவியல் ஆய்வுகளின் வழியே அவற்றுக்கு விடைதேடி ‘உயிரினங்களின் அற்புத உலகு’க்கு நம்மை அழைத்துச் செல்லும் புத்தகம்தான் `Every creature has a story.’ ஜானகி லெனின் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் ஆய்வுக்கட்டுரைகளுக்குரிய மொழிநடையில் இல்லாமல், அனைத்து வாசகர்களையும் சென்றடையும் எளிய மொழியில் அனைத்து உயிரினங்களையும் பற்றி அவற்றின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து நோக்கிச் செய்யப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

‘இராப்பாடி’ எனத் தமிழில் அழைக்கப்படும் நைட்டிங்கேல் பறவையின் பாடும் திறனின் அழகை ரசிக்கும்போதே அப்பாடலை ஏன் சலிக்காமல் இரவு முழுதும் அது பாடிக்கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கான ஆச்சர்ய விடையையும் பாடும் திறனுக்கும் வேட்டையாடுதலுக்கும் உள்ள தொடர்புடன் சேர்த்து சிறந்த பாடகர் சிறந்த தந்தையாகவும் இருப்பார் என முடிகிறது. ஒரு பறவையின் எளிய பாடலுக்குள் அவற்றின் வாழ்க்கைமுறையே அடங்கியிருக்கிறது. புத்தகத்தின் முதல் அத்தியாயமே நம்மை இசையோடு வாசிக்க அழைக்கிறது. குச்சிகளை உடைத்து சரியான தாளலயத்தோடு தாளம் வாசிக்கும் கொண்டைக்கிளிகள் பற்றிய அறிமுகம் என பறவைகளின் இசைக்கும் அவற்றின் வாழ்வியலுக்குமான தொடர்புகள் கதைகளாக ஒவ்வொரு அத்தியாயமும் விரிகிறது.

குச்சிகளைப் பயன்படுத்தித் தாளம் போடும் கொண்டைக்கிளிகள், முந்திரிக் கொட்டைகளை உடைக்க மரச்சுத்தியல் போன்ற கருவியைப் பயன்படுத்தும் கப்புசின் குரங்குகள் என மனிதர்களுக்கும் முன்பிலிருந்தே கருவிகளைப் பயன்படுத்தும் உயிரினங்கள் பற்றிய கட்டுரைகள், இறந்த ஒரு சிம்பன்ஸியைச் சுற்றி மற்ற சிம்பன்ஸிகள் இரக்கத்துடனும் துயரத்துடனும் திரியும் ஒரு அத்தியாயம், வேறொரு பறவையின் கூடுகளைக் கலைத்துப்போட்டு தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பறவைகளின் அத்தியாயம் ஆகியவற்றை நாம் படிக்கும்போது மனிதர்களுடன் நாம் தன்னியல்பாகவே ஒப்பிட்டுக்கொள்வோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

புத்தகம் பேசும் உயிரினங்களில் பலவற்றை நாம் நேரடியாகப் பார்த்திருக்கவோ தெரிந்திருக்கவோ வாய்ப்புகள் குறைவு, அந்த உயிரினங்களின் படங்களும் கட்டுரைகளின் இடையே இடம்பெற்றிருந்தால் புத்தகம் முழுமையடைந்திருக்கும். புத்தகத்தின் மிகப்பெரிய குறை இதுதான், இதற்காகவே அந்த உயிரினங்களை நாம் இணையத்தில் தேடிப்பார்க்கும்போது புத்தகத்தின் வாசிப்பில் தடையேற்படும். ஒருவேளை படங்கள் இடம்பெற்றிருந்தாலும்கூட நைட்டிங்கேல் பறவையின் பாடலையும், கொண்டைக்கிளிகளின் தாளத்தையும், சிலந்திகளின் வித்தியாச வலைப்பின்னல்களையும் நாம் இணையத்தில் தேடிப்பார்த்து மகிழ்ந்திருப்போம், அந்தத் தூண்டுதலை கட்டாயம் புத்தகத்தின் கதைசொல்லும் மொழிநடை வழங்கிவிடுகிறது. ஓர் அறிவியல் புத்தகத்தை இத்தனை எளிதான மொழிநடையிலும் அதேசமயம் ஆச்சர்யமும் ஆர்வமும் குறையாமல் சுருக்கமாகவும் எழுதப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

இத்தனை உயிரினங்களின் ஆச்சர்யங்களையும் நாம் படித்து முடிக்கும்போது இந்தப் பூவுலகை நாம் இத்தனை சிறப்பு வாய்ந்தவர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் கட்டாயம் ஏற்படும். மனிதன் உயர்ந்தவன் என்ற கர்வமும் கொஞ்சம் குறைந்திருக்கும்.