Published:Updated:

படிப்பறை

தமிழாற்றுப்படை
பிரீமியம் ஸ்டோரி
தமிழாற்றுப்படை

உலகம் எனும் விரிநிலத்தில், திராவிடப் பெருஞ்சமூகத்தை இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை ஆளுமையோடு ஆற்றுப்படுத்தி வந்திருக்கிறது தனிச்சிறப்புடை தமிழ்.

படிப்பறை

உலகம் எனும் விரிநிலத்தில், திராவிடப் பெருஞ்சமூகத்தை இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை ஆளுமையோடு ஆற்றுப்படுத்தி வந்திருக்கிறது தனிச்சிறப்புடை தமிழ்.

Published:Updated:
தமிழாற்றுப்படை
பிரீமியம் ஸ்டோரி
தமிழாற்றுப்படை

ரலாற்றுப்போக்கில் மொழி பாயும் வழிகள் சிதைந்தபோதெல்லாம், மூளைச்சாற்றால் முதுமொழியின் விடாய் தீர்த்து, அடுத்த பருவத்துக்கு அதை ஆற்றுப்படுத்திய ஆளுமைகள் பலருண்டு. அவருள் முதன்மையாய் மொழிந்து போற்றப்பட வேண்டிய இருபத்து நான்கு ஆளுமைகளை இசைபட எழுத்தில் ஏற்றியிருக்கிறார் வைரமுத்து.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பண்பாட்டு ஓர்மையற்ற, அற மதிப்பீடுகளில் ஆர்வமிழந்த, ‘சர்வதேசச் சந்தையில் உய்ய உதவவில்லையே தமிழ்!’ என வெற்றுத் துயரம்கொள்ளும் புதியவரில் ஒருசாரரை தமிழ் மொழியின் அறிவாழப் பயணத்துக்கு ஆற்றுப்படுத்துகிறது இந்நூல். அதுவே இதன் முதற் சிறப்பு.

தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், திருவள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், செயங்கொண்டார், கம்பர், திருமூலர், கால்டுவெல், வள்ளலார்,

உ.வே.சாமிநாதையர், மறைமலையடிகள், பாரதியார், பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான் என, தனது இலக்கிய மற்றும் சமூக அரசியல் சரிநிலைச் சார்போடு ஆசிரியர் இட்டுக்கொண்ட பட்டியல் மற்றொரு சிறப்பு. இதில் விவாதிக்க இடமுண்டு எனினும், இம்முயற்சியிலும் முன்னெடுப்பிலும் குறைகாணவியலாது. தமிழில் தத்துவம் பிணைத்து வளர்த்தவர் முதல், தமிழை சுயமரியாதைக் கருத்தில் சுட்டு வார்த்தவர் வரையிலான தமிழ்த் தொண்டர்களுக்குக் காலத்தால் செய்யப்பட்ட நயமான நன்றி நவிலல் இந்நூல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படிப்பறை

பொதுமேடையில் நிகழ்த்துவதற்குமான திட்டமிடலோடு எழுதப்பட்டது என்பதால், உரைநடையெங்கும் எழுகிற சந்தம் வாசிப்பிற்கு இன்பம் தருகிறது. வரலாற்றுச் செய்திகளை, கருத்தைத் திரட்டிச் சுருங்கச்சொல்வதிலும் தமிழ் இலக்கியச் சரடோடு இணைத்துச்சொல்வதிலும் ஈர்க்கிறார் நூலாசிரியர். ‘திருக்குறள் ஓர் அநாதை அறிவு’, ‘கலிங்கத்துப்பரணி, தமிழர் வீரத்தைத் தடவிப்பார்க்கக் கிடைத்த தழும்பு’, ‘தமிழில் இரண்டு சொற்கள் முட்டிக்கொண்டால் திருநீறு கொட்டியது ஒருகாலம்’ இப்படி ஏராளமான சொற்றொடர்கள் உண்டு. ஆண்டாள், வள்ளலார் இருவரின் மறைவு குறித்த கருத்துகளில், கொஞ்சம் விவாதித்தும் கொஞ்சம் மௌனித்தும் வாசகரிடம் வாய்மை கடத்தும் இடம் நுட்பமானது.

நூலில் இரண்டு உயில்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து, அவை ஆர்வமூட்டுபவை; அறம் விழைபவை. கட்டுரைகளின் அணுகுமுறையும் மொழியும் பகுத்தறிவு கவனத்தோடு கையாளப்பட்டி ருப்பதன் வழி இந்நூல் தனித்துவம் பூணுகிறது.

தொடக்கத்தில் ‘இக்கட்டுரை, தொல்காப்பியத்தின் தலைவாசலில் ஒரு வரவேற்புக் கோலம் மட்டுமே வரைகிறது’ என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். இந்த ஏற்புமொழி, எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும்.‘தமிழ் வரலாறு’ எத்தனை போராட்டங்களைக் கடந்து நீண்டது என்பதையும் ‘தமிழ் இலக்கியம்’ எவ்வளவு புதையல்களைக் கொண்டது என்பதையும் எளிமையாகச் சொல்லும் இந்நூல் இக்காலத்து இளந்தமிழருக்கானது!

தமிழாற்றுப்படை

வைரமுத்து

வெளியீடு: சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட், சென்னை.

பக்கங்கள் : 360

விலை : 500 ரூபாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism