Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

படிப்பறை

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மர்மங்களும் மாயங்களும் நிறைந்தது வீரப்பனின் கதை. தமிழகத்தையும் கர்நாடகத்தையும் இணைக்கும் பல்லாயிரம் ஏக்கர் காட்டை முப்பதாண்டுக் காலம் கட்டியாண்ட வீரப்பனை, யானை வேட்டைக்காரனாக, சந்தன மரக் கடத்தல்காரனாக, தீவிரவாதியாக,, தமிழ்ப் போராளியாக வைத்துப் பல கதைகள் உலவுகின்றன. உண்மையில் வீரப்பன் யார், ‘மொழுக்கையன்’ என்று ஊராரால் அடையாளப்படுத்தப்பட்ட வீரப்பன் பின்னாளில் நாட்டையே மிரளவைக்கும் குற்றவாளியாக மாறியது எப்படி, அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் யார் என எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது சிவசுப்ரமணியம் எழுதிய இந்த நூல். வீரப்பனை நாயக பிம்பத்தில் நிறுத்திப் போற்றாமல், அவன் செய்த கொலைகள், குற்றங்கள், அவற்றுக்கு உதவி செய்தவர்கள், வீரப்பனை வைத்துப் பலன் அனுபவித்தவர்கள், அவனைப் பிடிக்கச்சென்ற, திருத்த முயன்ற நேர்மையான அதிகாரிகள் என, சமநிலையில் நின்று உள்ளது உள்ளபடி சொல்லிச்சொல்கிறார் சிவா. வீரப்பனோடு வாழ்ந்தவர்கள், அவனைப் பிடிக்கப் போராடிய காவல்துறை, வனத்துறை அலுவலர்கள், அவன் செய்த சம்பவங்களோடு தொடர்புடையவர்களைத் தேடிப்பிடித்து நேர்காணல் செய்து கச்சிதமாக எழுதியிருக்கிறார். வீரப்பன் கண் சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்ஸில் வந்தபோது சுற்றிவளைத்துச் சுட்டுக்கொன்றதாக அதிரடிப்படை சொன்னது. உண்மையில் வீரப்பன் பிடிபட்டது எப்படி என்பதைப் படிப்படியாக ஒரு சித்திரம்போல கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல். இந்த ஆபரேஷனில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் இருக்கின்றன.

படிப்பறை

வீரப்பனை அவன் வாழிடத்திற்கே சென்று சந்தித்தவர் சிவசுப்ரமணியம். அந்த இழையைப் பிடித்துக்கொண்டு அவன் வாழ்க்கைக்குள் நுழைந்து, சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் தேடிப்பிடித்துப் பேசவைத்து ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறார்.

எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்த மொழுக்கன், 184 மனிதர்கள், 200க்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்ற, சந்தன மரங்களை வண்டி வண்டியாக வெட்டிக் கடத்திய,, பலபேரைக் கடத்தி அரசாங்கங்களைத் திகைக்கவைத்த ‘சந்தன வீரப்பனாக’ மாறிய கதையை ஒரு நாவலைப் போன்ற விறுவிறுப்புடன் சொல்கிற இந்த நூல், மிக முக்கிய ஆவணம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

- பெ.சிவசுப்ரமணியம்

சிவா மீடியா, 489/ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணா நகர், ஆத்தூர்-636102

அலைபேசி: 9443407017, 9443427327

இ-மெயில்:shivamedia344@gmail.com

பக்கம்: 380

விலை: ரூ.400