Published:Updated:

அவள் நூலகம்: நடந்ததில் உங்கள் தவறில்லை!

அவள் நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் நூலகம்

What is a Girl Worth

நாள்தோறும் செய்தித்தாள்களில் பாலியல் துன்புறுத்தல்களைப் படிக்கிறோம். ஒருகட்டத்துக்கு மேல் எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி அவற்றைக் கடந்தும் செல்கிறோம். What is a Girl Worth என்னும் நூலுக்கான சூழலும் பாலியல் அத்துமீறல்தான். இந்த நூலை எழுதிய 32 வயதான ரேச்சல் டென்ஹோலாண்டர் மூன்று குழந்தைகளுடன் அவரின் கடந்த கால காயங்களை மறைத்து வாழ்ந்து வந்திருக்கிறார். அமெரிக்க ஜிம்னாஸ்டிக் கழகம் எப்படி அவர்களுக்கு வந்த பாலியல் புகார்களை மறைத்தது என்பது பற்றி ஒரு செய்தி பளிச்சிடுகிறது. 16 ஆண்டுகளாக ரேச்சல் காத்திருந்தது இப்படியானதொரு தருணத்துக்குத்தானே?

இதைத்தொடர்ந்தே பாதிக்கப்பட்ட ஒருவர் தன் குரலைப் பதிவு செய்திருக்கிறார். அதைவிட முக்கியமாக... ஒரு பெண்ணின் புகாரை ஒருவழியாக செவிகொடுத்து கேட்டிருக்கிறது இந்தச் சமூகம்.

அவள் நூலகம்
அவள் நூலகம்

“நான் 15 வயதில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் கழகத்தின் மருத்துவர் லேரி நாசரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன்” என IndyStar செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார் ரேச்சல். லேரி நாசரால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தங்கம் வென்ற பல்வேறு ஒலிம்பிக் வீராங்கனைகளும் உண்டு.

பெண்களுக்கு எதிராக இங்கு நடக்கும் தவற்றை, இந்தச் சமூகம் எப்படியாயினும் மூடிப் மறைக்கத்தான் பார்க்கிறது. `ரேச்சல் ஏன் இத்தனை ஆண்டுகளாக பேசாமல் இருந்தார்? ஏன் இதை எதிர்த்து அவர் போராடவில்லை? ஏன் அவரது பெற்றோரிடம் இது பற்றி சொல்லவில்லை?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தச் சமூகம் கேட்க எத்தனிக்கும் அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாகப் பதிலளிக்கிறார் ரேச்சல். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மேல், நாம் நம் தோட்டாக்களைக்கொண்டு துளைத்துக்கொண்டே இருக்கப் போகிறோம்?

அவள் நூலகம்: நடந்ததில் உங்கள் தவறில்லை!

தன் ஏழு வயதில் தான் அதிகம் நேசித்த தேவாலயத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துகொள்கிறார் ரேச்சல். பல பெண்களிடம் அங்கிருக்கும் ஒரு நபர் தவறாக நடந்து கொள்கிறார். ஒருவழியாக அவரை வெளியேற்றும் தேவாலயம், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஷயத்தை மூடி மறைக்கிறது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் பாலியல் குற்றங்கள் பற்றி ரேச்சல் உரக்கப் பேச ஆரம்பிக்க, தேவாலயம் அவரது குடும்பத்தையே ஒதுக்கி வைக்கிறது. நாசர் செய்ததைவிடவும், இந்த உதாசீனமும் புறக்கணிப்பும்தாம் ரேச்சலை அதிகம் காயப்படுத்தின. “நீங்கள் அதிகம் நம்பும் பெற்றோர்கள், நண்பர்களே உங்களை நம்பவில்லை என்றால், இந்தச் சமூகமா நம்பப்போகிறது? 16 வயது பெண் சொல்லவிருக்கும் - அதுவும் அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரான நாசருக்கு எதிராகச் சொல்லும் கருத்துகளை யார்தான் நம்புவார்கள்? தன்னுடைய பாரம்பர்யத்துக்கும் நற்பெயருக்கும் களங்கம் வந்துவிடும் என தேவாலயமே இதுபோன்ற குற்றங்களைப் புறக்கணிக்குமெனில், ஒலிம்பிக் போட்டிகளையே நடத்தும் வல்லமை படைத்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் கழகம் இத்தகைய குற்றச்சாட்டுகளைவிட்டு விலகியிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இந்தத் தெளிவின்மையே குற்றவாளிகளை மேலும் தைரியப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை மவுன சாட்சியாக்குகிறது” என்கிறார் ரேச்சல்.

15 வயதில் முதுகுவலி என ஜிம்னாஸ்டிக் மருத்துவரை பார்க்க வரும் ரேச்சலை கனிவுடன் வரவேற்கிறார் நாசர். ரேச்சலின் தாயும் உடனிருக்கிறார். நாசர் அத்துமீறினாலும், அதையும் மருத்துவமுறை என்றே எண்ணிக் கொள்கிறாள் சிறுமியான ரேச்சல். தன் கோச்சிடம் இதுபற்றி பேசுகிறாள். அவர் வழக்கம்போல, இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என எச்சரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவள் நூலகம்: நடந்ததில் உங்கள் தவறில்லை!

இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் குற்றத்தில், ஓர் ஆணின் அதிகாரத் திமிர் அடங்கியிருக்கிறது. ஆனால், நாசர் போன்ற மருத்துவர்களின் டார்கெட் சிறுமிகள். அவர்களுக்கு அங்கு நடப்பது ஏதோவொரு சிகிச்சை என நினைத்து அமைதி காப்பவர்கள். வலி சரியாகிவிட்டால், மீண்டும் தங்கள் தேசத்துக்காக ஒலிம்பிக் மெடலை தோளில் சுமக்கலாம் என கனவுகளுடன் திரிபவர்கள். நாசர் வேட்டையாடியது இந்தச் சிறுமிகளின் நம்பிக்கையைத்தான். அதுவும் இருபது ஆண்டுக்காலம்! இறுதியாக... லேரி நாசரின் கணினிகளில் இருந்து 37,000 சிறுவர் சிறுமிகளின் நிர்வாணப் படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவள் நூலகம்
அவள் நூலகம்

ரேச்சலின் ஒரு முடிவு 150-க்கும் மேற் பட்ட பெண்களைக் குற்றங்களுக்கு எதிராக பேசவைத்திருக்கிறது. நாசருக்கு 200 ஆண்டுக்கால சிறைத்தண்டனையை `பரிசளித் திருக்கிறது'. அமெரிக்க ஜிம்னாஸ்டிக்கின் ஒட்டுமொத்த குழுவையும் ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட 332 நபர்களுக்கு 50 கோடி அமெரிக்க டாலர்களை இழப்பீட்டுத்தொகையாக வழங்கியிருக்கிறது மிச்சிகன் பல்கலைக்கழகம். பாலியல் குற்றங்களுக்கு எதிராக பேசிய, பேசவிருக்கும், பேச முடியாமல் மரணித்த ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகத்தை அர்ப்பணித்திருக்கிறார் ரேச்சல்.

“நடந்ததில் உங்கள் தவறில்லை. நீங்கள் வெட்கப்படவும் தேவையில்லை. உங்களின் வலிமையை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்'' என உரக்கச் சொல்கிறார் ரேச்சல்!