Published:Updated:

படிப்பறை

பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்
பிரீமியம் ஸ்டோரி
பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

கோட்பாடு குறித்த உரையாடல், படைப்பாக்கம் ஆகிய இருதளங்களிலும் இயங்கும் மிகச்சிலரில் ஒருவர் எழுத்தாளர் பிரேம்.

படிப்பறை

கோட்பாடு குறித்த உரையாடல், படைப்பாக்கம் ஆகிய இருதளங்களிலும் இயங்கும் மிகச்சிலரில் ஒருவர் எழுத்தாளர் பிரேம்.

Published:Updated:
பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்
பிரீமியம் ஸ்டோரி
பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

மார்க்சியம், பின்நவீனத்துவம், அம்பேத்கரியம், பெரியாரியம், அயோத்திதாசர் சிந்தனைகள், காந்தியம் ஆகிய சிந்தனைகள் குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவரும் பிரேமின் சமீபத்திய நூல் ‘பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்.’

1990களின் ஆரம்பத்தில் தொடங்கி 2000-த்தின் முற்பாதிவரை தமிழ் இலக்கியச்சூழலில் பேசுபொருளாக இருந்தது பின்நவீனத்துவம். கடந்த பத்தாண்டுகளாகவே தமிழ் இலக்கியச்சூழலில் கோட்பாடுகள் குறித்த உரையாடல்கள் குறைந்து விட்டன. பின்நவீனத்துவம் குறித்து இப்போது யாரும் அதிகம் பேசாத சூழலில், பின்நவீனத்துவச் சிந்தனைகளின் அறிமுகத்திற்குப் பிறகு மார்க்சியத்தை எப்படி அணுகலாம் என்று தன் கருத்துகளை முன்வைத்திருக்கிறார் பிரேம்.

படிப்பறை

‘எந்த ஒரு தத்துவமும் முற்றுப்பெற்ற தாகவும் முழுமையடைந்ததாகவும் அறிவிக்கப்படும்போது அது உரையாடல்களின் கதவுகளை மூடி நிறுவனத்தன்மை பெறுகிறது’ என்ற அடிப்படையில் ‘மார்க்சியம் முற்றுப்பெற்ற தத்துவம் அல்ல; காலந்தோறும் தன்னை வளர்த்தெடுக்கும் தத்துவம்’ என்னும் பிரேம், அதை காரல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வார்த்தைகள் வழியாகவே விளக்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மார்க்சியர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட சிந்தனையாளர் சிக்மண்ட் ஃப்ராய்டு. ‘பாலுணர்வு அடிப்படையிலேயே சமூக நிகழ்வுகளை விளக்கும் ஃப்ராய்டியம், புரட்சிகரச் சிந்தனையை மழுங்கடிக்கிறது’ என்பது மார்க்சியர்கள் முன்வைக்கும் விமர்சனம். ஆனால் மார்க்சியத்துக்கும் ஃப்ராய்டியத்துக்குமான இடைவெளியை எரிக் ஃபுரோம், வில்ஹெம் ரீச், லெவிஸ்த்ரோஸ், பக்தின், லக்கான், தெரிதா, தெலுஸ் ஆகியோரின் சிந்தனைகளைக் கொண்டு நிரப்ப முடியும் என்கிறார் பிரேம். உலக அளவில் சூழலரசியலும் இந்திய அளவில் அம்பேத்கரியமும் மார்க்சியத்தைச் செழுமைப்படுத்த உதவும் என்பது பிரேமின் முன்வைப்பு.

படிப்பறை

தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த கோட்பாட்டு உரையாடல் குறித்த பரிச்சயம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நூலை வாசிக்கமுடியும். ஆனால் சினிமா, வெகுஜன ஊடகங்கள், மாற்று அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றில் மார்க்சியம், அம்பேத்கரியம், பின்நவீனம், பெரியாரியம் ஆகிய சிந்தனைகளின் தாக்கங்கள் பிரதிபலிக்கும் சமகாலச்சூழலில் கொஞ்சம் சிரமப்பட்டாவது அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

பிரேம்

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002. தொலைபேசி : 04259 - 226012

பக்கங்கள் : 224 ; விலை : ரூ.230

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism