Published:Updated:

`விகடன் ஹாசிப் கானின் கார்ட்டூனை தனது பெயரில் வெளியிட்ட ஆர்டிஸ்ட்!’ - கண்டித்த வடமாநில ஊடகங்கள்

விகடன் கார்ட்டூன்
News
விகடன் கார்ட்டூன்

முன்னதாக தாங்கள் வெளியிட்ட அந்தப் படம் தமிழகத்தைச் சேர்ந்த ஹாசிப்கான் என்ற கார்டூனிஸ்ட்டால் ஆனந்த விகடன் என்னும் தமிழ் வார பத்திரிகைக்காக வரையப்பட்டது’ என அந்த மறுப்பில் தெரிவித்தது அந்தப் பத்திரிகை!

கதைத் திருட்டு, கலைத் திருட்டு எல்லாம் டிஜிட்டல் யுகத்தில் மிக எளிதான காரியமாகிவிட்டது. ஒரு கலைஞன் தான் சொல்ல நினைக்கும் கருத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் சரியாக சேரும்படி தனது கலையைப் பயன்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அப்படி உருவாகும் ஒரு படைப்பை சிலர் எளிதாக காப்பி பேஸ்ட் செய்து, தங்கள் பெயரிலே பதிவிடும் கூத்துகளும் நடக்கத்தான் செய்கிறது. டிஜிட்டல் உலகில் திருட்டு செய்வது மட்டுமல்ல, அதைக் கண்டுபிடிப்பதும் எளிது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கார்ட்டூன்
கார்ட்டூன்

இப்படித்தான், ஒருவர் ஜாம்ஷெட்பூரில் இருந்துகொண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் படைப்பை தன்னுடையது என கூறி முகநூலில் பதிவிட்டு, தற்போது அதை நீக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

விகடனின் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கான். தனது கார்ட்டூன்கள் மூலம் பல உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர். ஒற்றைப் படம் மூலம் பெரும் நிகழ்வை எளிய மக்களுக்கும் புரியும்படியாக செய்துவிடுவதில் கில்லாடி. கடந்த வாரம் வெளியான ஆனந்த விகடனுக்கான அவர் வரைந்த கார்ட்டூன் மொழிகளைக் கடந்து பெரிய ஹிட் அடித்தது. கொரோனாவை அரசும் மக்களும் இணைந்து இந்தியாவுக்குள் வரவிடாமல் தடுக்கும் விதமாக பிரதமர் மோடியும் மக்களும் கதவை மூடுவதுபோல் அந்த ஓவியம் சித்திரிக்கப்பட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியான ஆனந்த விகடன் புத்தகத்தில் இந்தப் படம் வெளியானது. ஆனால், விகடனின் சமூக வலைதளங்களில் முன்னதாகவே வெளியாகி வைரலானது. இந்த நிலையில், ஆனந்தவிகடன் வெளியான அதே 19-ம் தேதிதான் மோடி நாடு முழுவதும் மார்ச் மாதம் 22-ம் தேதி ஜனதா ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அர்ஜுன் தாஸ் என்னும் ஆர்ட்டிஸ்ட், ஹாசிப்கான் படத்தில் இருந்த பெயர் மற்றும் லோகோவை மறைத்துவிட்டு தனது பெயருடன் பதிவிட்டார்.

அந்த ஓவியம் அங்கும் செம ஹிட் அடித்தது. உள்ளூர் மீடியாக்கள் பலவும் ஜனதா ஊரடங்கைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் பெயரில் அந்தக் கார்ட்டூனை தங்கள் பத்திரிகைகளில் பதிவிட வைரல் ஆனார் அர்ஜுன் தாஸ். இந்த நிலையில் அங்கு இருந்த சிலர், இந்தப் படத்தை முன்னதாகவே எங்கோ பார்த்த நியாபகம் வர உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலர் 19-ம் தேதி வெளியான ஆனந்த விகடனின் லின்ங்கை அர்ஜுன் தாஸ் பதிவின் கீழ் பதிவிட்டு இது திருட்டு என குற்றம்சாட்டினர். மேலும், விகடன் சார்பிலும் முகநூல் மூலம் காப்பி-ரைட் கோரப்பட்டது. பின்னர் அர்ஜுன் தாஸின் அந்தப் பதிவு சமூகவலைதளத்திலிருந்து நீக்கிப்பட்டது. இதைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் பெயரில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளின் ஒன்றான `பிரபாத் கபார்’ பத்திரிகை, மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளது. `முன்னதாக தாங்கள் வெளியிட்ட அந்தப் படம் தமிழகத்தைச் சேர்ந்த ஹாசிப்கான் என்ற கார்டூனிஸ்ட்டால் ஆனந்த விகடன் என்னும் தமிழ் வார பத்திரிகைக்காக வரையப்பட்டது’ என அந்த மறுப்பில் தெரிவித்தது.

டைனிக் பாஸ்கர் என்னும் பத்திரிகை
டைனிக் பாஸ்கர் என்னும் பத்திரிகை

மேலும், டைனிக் பாஸ்கர் என்னும் பத்திரிகை, இந்தக் கலைத் திருட்டு குறித்து விரிவாக அலசியுள்ளது. ``ஒரு பாடகர் பாடிய பாடலை வேறு ஒருவர் ரியாலிட்டி ஷோக்களில் பாடலாம். தவறில்லை. ஆனால் இதுவும் கலைத் திருட்டும் ஒன்றில்லை. இது தொடர்பாக அர்ஜுன் தாஸை சந்தித்துப் பேசினோம். அவர் இந்தப் படத்தை முதலில் வெளியிட்டது ஹாசிப்கான் என்பதை ஒப்புக்கொண்டார். எனினும் தான் செய்ததை தவறென்று ஒப்புக்கொள்ளவில்லை. முன்னதாகவே இந்தப் படம் வேறு ஒருவருடையது என தெரிந்தும் ஏன் கிரெடிட் கொடுக்கவில்லை எனக் கேட்டோம். அதற்கு அவர் இதற்கு முன்னர் பலமுறை இப்படிச் செய்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் கேள்வி வந்ததில்லை என்கிறார். மேலும், அர்ஜுன் தாஸ் இதை பெயின்டிங் எனக் குறிப்பிட்டார். எனினும் அது டிஜிட்டல் கிராபிக்ஸ் வொர்க் என்பதுதான் உண்மை” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விகடன் கார்டூனிஸ்ட் ஹாசிப்கானிடம் பேசினோம், ``செய்தது தவறு என்பது செய்தவருக்கு நிச்சயம் தெரியும். இதுக்கு மேல் இதுபோன்ற விவகாரங்களுக்குப் பின் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஜஸ்ட் இக்னோர் செய்வேன். மற்றொருவருவரின் படைப்பை தனது எனச் சொல்லி கிரெடிட் எடுத்துக்கொண்டால், உண்மை வெளிவந்த பின்னர் அவரது மற்ற படைப்புகளுக்கும் மதிப்பு போய்விடும். அதனால் இது போன்ற விஷயங்களை முதலிலே தவிர்ப்பது நல்லது” என்றார்.

ஜாம்ஷட்பூரிலே அர்ஜுன் தாஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது செயலுக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்டுகள் கண்டனமும் தெரிவித்துள்ளனர். ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சிலர் முகநூலில், `ஜாம்ஷெட்பூரில் நாங்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்காமல் நலமாக இருக்கிறோம். ஆனால், இதுபோன்ற போலி நபர்களை யாரும் நம்ப வேண்டாம். ஆர்ட்டிஸ்ட் சங்கம் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.