Published:Updated:

அப்பாவின் குட்டி இளவரசி சேட்டைகள்! - #MyVikatan

``கடையில் நுழைந்த மாத்திரத்தில் அப்பா சாக்லேட் வேண்டும்'' என்றாள்.

Representational Image
Representational Image ( Credits : Shutterstock )

அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் எதிர்ப்பட்டாள் எனது ஐந்து வயது செல்ல மகள்.. எங்கே செல்கிறாய் எனும் கேள்விக்கு பால் வாங்க என பதிலுரைத்தாள். நானும் வருகிறேன் என உடன்சென்றேன். கடையில் நுழைந்த மாத்திரத்தில், `அப்பா சாக்லேட் வேண்டும்' என்றாள். அவளின் முகபாவனைக்கு மயங்கி சரி என்றேன். நான்கு விதங்களில் மூன்று வாங்கினாள். விதத்திற்கொன்றாக. முடிந்து திரும்புகையில் அப்பா பழம் வேண்டும் என்றாள். சாக்லேட்டை விட பழம் உடலுக்கு பாதகமில்லையென சரி என்றேன். ஆப்பிளும் திராட்சையும் வாங்கி திருப்தியடைந்தாள்.

Representational Image
Representational Image

பால் இருக்கும் இடம் நோக்கிச் செல்கையில் அக்காவிற்கு ஜூஸ் வாங்கலாம் என்றாள். அக்காவின் மீதான அவளின் பேரன்பை வியந்து சரி என்றேன். அக்காவிற்கு வாங்கியதில் இன்னொன்றும் வாங்கினாள் அவளுக்கும் சேர்த்து. பால் இருக்கும் இடத்தை நெருங்கியாகிவிட்டது. அம்மாவிற்கு ஐஸ்க்ரீம் வாங்கலாம் என்றாள். அக்கா மீதிருக்கும் அன்பு அம்மா மீதிருப்பதில் ஆச்சர்யமேதுமில்லையென சரி என்றேன். அதிலும் மூன்று வாங்கினாள். பால் வாங்கியாகிவிட்டது. பணம் செலுத்துமிடத்தில் நிற்கையில், அப்பா உங்களுக்கு LollyPop ?! வாங்கலாமா எனக் கேட்டாள்!! அதுகாறும் அவளது ராஜ தந்திர வலையில் சிக்கியிருந்தது உறைத்து, வாங்கிய அனைத்திற்கும் பணம் செலுத்தி வீடடைந்தேன்... இறுகிய மனத்துடன்!!

-அசோக் மு

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/