பிரீமியம் ஸ்டோரி

புயலுக்குப் பின் அமைதி

பத்து நாளாயிற்று

குயில் கூவி.

பேரம் பேசி வாங்கிய தருணத்தில்தான்

வாடவே தொடங்கின

பூக்கள்.

முள்ளை மையமாக நிற்க விடாமல்

தராசில் துள்ளுகிறது

மீன்.

மொழித்துளி!

கிளையிலிருந்து வழியும் மழைத்துளி

ஒரு சூரியனையும் சேர்த்து

உதிர்க்கிறது.

தன் இருப்பை அறிய,

பறவையின் சிறகடிப்பிற்காகக்

காத்திருக்கிறது வானம்.

 அமைதியாகிவிட்டது மைதானம்

ஆவலில் கூடைப்பந்து வலை

சற்றுநேரத்தில் பௌர்ணமி.

நீ

தீக்குச்சி உரசிய அதே கணத்தில்

வானத்தில் மின்னல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு