Published:Updated:

மழையின் கனவு!- கவிதை #MyVikatan

விகடன் வாசகி

சில்லென்று சில துளிகள் மண்ணில் விழ..

Representational Image
Representational Image

கருமேகம் சூழ... காற்று வீச....

சில்லென்று சில துளிகள் மண்ணில்

விழ.. மழையை எதிர்பார்த்து

காத்திருக்கும் மானுடமும்... மரங்களின்

மனமும்.... குளிர்விக்க

காத்திருக்கின்றேன் .... கானகம்

காய்ந்து போனது.. நிலத்தடி நீரோ

நீங்கிப் போனது... இன்னும் சில

நாள்களில் போழியப்போகிறேன்..

Representational Image
Representational Image

குளங்கள் தூர்வாரி கால்வாய்

சுத்தப்படுத்த ஆயத்தமான மக்கள்...

என்னை இம்முறையேனும் சேமித்துக்

கொள்வாரோ.... இல்லை கடலோடு

கலக்க செய்வாரோ... விரைவில்

வருவேன்... விரைவாய் செயல்பட்டு

சேமித்துக் கொள்வாரோ...

Representational Image
Representational Image

மண்ணைத் தொட மழலையை

போல காத்திருக்கிறேன்...

கனவு பலிக்குமா இல்லை கண்டது கலையுமா..

நிலத்தினுள் செல்வேனா

நிலை இல்லாமல் நிலம்

கடந்து செல்வேனா... விடியும் வரை....!

- எஸ். தீபா

Representational Image
Representational Image

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/