Published:Updated:

“என் எழுத்துகள் குற்ற உணர்ச்சியால் எழுதப்பட்டவை” - அ.சி.விஜிதரன் பேட்டி

குருதி வழியும் பாடல்

“நான் பார்க்கும் மனிதர்கள் அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்க, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்வினால் எழுதப்பட்டவையே என் படைப்புகள்.”

“என் எழுத்துகள் குற்ற உணர்ச்சியால் எழுதப்பட்டவை” - அ.சி.விஜிதரன் பேட்டி

“நான் பார்க்கும் மனிதர்கள் அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்க, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்வினால் எழுதப்பட்டவையே என் படைப்புகள்.”

Published:Updated:
குருதி வழியும் பாடல்

இலங்கையில் நடந்த போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் வார்த்தைகளால் சொல்ல இயலா. எத்தனையோ பேர் உயிர்களையும் உடைமைகளையும் இழந்தனர். இலங்கைப் போரிலிருந்து தன் உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள எண்ணற்ற மக்கள் தன் தாயகம் விட்டு இந்தியாவிற்கும் பல வெளிநாடுகளுக்கும் தஞ்சம் புகுந்தனர். இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் முகாம்களில் குடி வைக்கப்பட்டனர். இலங்கை அகதிகள் முகாம் அமைப்பையும் அங்குள்ள மக்களின் பிரச்னைகளையும் ‘குருதி வழியும் பாடல்’ (சிந்தன் புக்ஸ்) மூலம் படம்பிடித்துக் காட்டியுள்ளார் அ.சி.விஜிதரன். அகதிகளின் உரிமை மறுக்கப்படுவது குறித்துப் பேசுவதன் முக்கியத்துவத்தைக் ‘குருதி வழியும் பாடல்’ வலியுருத்துகிறது.

இலங்கை போர்க்காலத்தில் அகதியாக 1998-ல் இந்தியாவில் தஞ்சமடைந்தவர் விஜிதரன். அரசியல் அறிவியலில் (Political science) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கும் விஜிதரனுடன், ‘குருதி வழியும் பாடல்' நூலை முன்வைத்து ஓர் உரையாடல்...

அ.சி.விஜிதரன்
அ.சி.விஜிதரன்

"இலங்கை போர் உலகளவில் இன்று வரை பேசுபொருளாக இருக்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட போர்க்கால நினைவுகள் பற்றி கூறுங்களேன்..."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நான் சிறுவயதில் இலங்கையில் இருக்கும்போது போரினால் பல்வேறு இழப்புகளை மக்கள் தினந்தினம் சந்தித்ததைப் பார்த்திருக்கிறேன். போர் தீவிரமாக இருந்த சமயத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நானும் என் குடும்பத்தாரும், அம்மா செவிலியராக வேலை பார்த்த மருத்துவமனையில் தஞ்சமடைந்தோம். மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்க முடியாது, மருத்துவமனையில் குண்டு வீச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு தஞ்சம் அடைந்தோம். ஆனால், மருத்துவமனை மீதி நடத்தப்பட்ட தாக்குதலில், அம்மாவின் நண்பர்களும் நோயாளிகளும் உடல் சிதறி இறந்ததைக் கண்ட சிறுவர்களான நானும் என் உடன் பிறந்தாரும் கதறி அழுதோம். அந்தச் சம்பவம் போரின் மீதான வெறுப்பையும் வருத்தத்தையும் என் மனதில் பெரிதளவில் ஏற்படுத்தியது."

"முகாமில் வாழும் மக்களின் வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத தூண்டியது எது?"

"முகாமில் இருக்கும்போது நானும் பக்கத்து வீட்டு இந்திரா அக்காவும் அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று படிப்போம்; அவர்தான் ‘குருதி வழியும் பாடலுக்கு முன்னுரை தந்துள்ளார். முகாமில் மிகவும் குறுகிய வீடுகளில் இருந்துவந்தோம். என் நிலம் என்றால், முகாம் என்றுதான் சொல்வேன்; ஈழத்தைக் குறிப்பிட மாட்டேன். என் சொந்த நிலம் என்று மனதால் மட்டுமே என்னால் உணர முடியும். ஆனால் அந்த நிலம் எங்களுக்கு நிரந்தரமானதோ சொந்தமானதோ இல்லை. ஒரே மொழி பேசக்கூடிய ஒரு நாட்டில் எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது முகாமில் என்னுடன் 89 பேர் படித்தார்கள். ஆனால் நான் மட்டும்தான் இன்று முனைவர் பட்டம் வரை படிக்க வந்துள்ளேன். மற்ற மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது. என் கண்முன்னே என் நண்பன் ரமேஷ் வாழ்க்கை அழிந்தது. ரமேஷுக்கு அப்பா இல்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டுவரை மட்டுதான் அவனால் படிக்க முடிந்தது. அதன்பிறகு ஒரு கம்பெனியில் வேலைசெய்தான்; இடையில் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றவன், அங்கிருந்து திரும்பியபோது குடிபோதைக்கு அடிமையாகி கடைசியில் இறந்தேபோனான். அவனது இறப்பைக் ‘குருதி வழியும் பாட’லில் பதிவுசெய்துள்ளேன். அவனைப் போல் எத்தனையோ ரமேஷ் முகாம்களில் உள்ளனர்.

குருதி வழியும் பாடல்
குருதி வழியும் பாடல்

என் பெற்றோர் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்ததாலும், நல்ல மனிதர்கள் சிலரின் உதவியாலும் நான் இன்று பட்டதாரியாகவும் கவிஞராகவும் இருக்கிறேன். மற்ற மாணவர்களால் அந்த முகாம் சூழலிலிருந்து படித்து நிமிர்ந்து நிற்க முடியவில்லை. காரணம் முகாம் மாணவர்களுக்கு என்று தனி இடஒதுக்கீடு இல்லை, கல்விக் கடன் இல்லை; பொதுப் பட்டியலில் தான் போட்டியிட வேண்டும். அப்படியே போட்டி போட்டு பட்டப்படிப்பு முடித்தாலும், முகாம் மாணவர்கள் என்பதால் சரியான வேலையும் கிடைப்பதில்லை. கண்முன்னே என் மக்கள் இவ்வாறு அவதிப்பட நான் மட்டும் சிலரின் உதவியால் முன்னேறி வந்துள்ளேன். என் எழுத்துகள் குற்ற உணர்ச்சியால் எழுதப்பட்டவை. நான் பார்க்கும் மனிதர்கள் அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்க, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்வினால் எழுதப்பட்டவையே என் படைப்புகள்".

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"இலங்கை பிரச்னை குறித்த தமிழக மக்களின் பார்வை எப்படி இருக்கிறது?"

"‘ஈழம் மீட்போம்’ என்று ஈழப் பிரச்னைகள் பெரும் பேசுபொருளாக இருக்கக்கூடிய தமிழகத்திலேயே 30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு முகாமில் வாழ்ந்துவருபவர்கள் குறித்து ஏன் யாரும் பேசவில்லை என்ற கேள்வி என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு தேசிய விடுதலை என்பது அங்குள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலையாக இருக்க வேண்டும். நிலத்தைக் காட்டிலும் மக்கள்தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்."

ஏதிலி
ஏதிலி

"பிரபாகரன் போருக்கு பின்னால் உயிருடன் இருந்தார் என்று நம்புகிறீர்களா?"

"பிரபாகரன் போரில் இறக்கவில்லை; உயிரோடுதான் இருக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவியது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குள் நான் செல்ல விரும்பவில்லை, ஆனால் விடுதலை புலிகளை கண்காணிக்கிறோம் என்ற பேரில் எங்கள் முகாம் மக்கள் ‘செக்கிங்’ என அலைக்கழிக்கப்பட்டனர். குடியுரிமை எங்களுக்கு வழங்குவது ஒன்றிய அரசு கையில் இருக்கு. அதுவரை எங்களை காவல் துறையினரால் சட்ட ஒழுங்கின்படி கவனிக்கப்பட வேண்டும் . ஆனால் ‘கியூ' பிராஞ்சினால் குற்றவாளி போல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். தலைவர்கள் முகாமுக்கு அருகில் எங்காவது வந்தால் முகாம் மக்கள் முகாம் உள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் வேலைக்கோ படிக்கவோ செல்ல முடியாது. இது போல் 30 ஆண்டுகளாக வரிசையில் நின்றுகொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் அகதிகளாக அல்ல, சட்டவிரோதமாகக் குடியேறிகளாகவே 30 ஆண்டுகளாக நடத்தப்படுகிறோம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism