Published:Updated:

தமிழ் மண்ணே வணக்கம்! - `ஆற்றல்மிக்க பேச்சாளர் ஆக வேண்டுமா?’ -ஆன்லைன் பயிலரங்கத்துக்கு வாருங்கள்!

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மத்தியில் பேச்சாற்றலை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜூனியர் விகடன் வழங்கும் ‘கட்டணமில்லா வெபினார்’ இன்று (மே - 8) மாலை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வாருங்கள்.

ஒவ்வொரு மனிதரின் முன்னேற்றத்திலும் பேச்சாற்றலுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. எனவேதான், பேச்சாற்றலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இளைஞர்களிடமும், மாணவ மாணவிகளிடமும் பேச்சுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துடன் ‘தமிழ் மண்ணே வணக்கம்! உறக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்’ என்ற ஆன்லைன் பயிலரங்கத்தை ஜூனியர் விகடன் நடத்திவருகிறது.

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

இதுவரை நடைபெற்றுள்ள மூன்று பயிலரங்குகளில் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பட்டிமன்ற மன்னன் ராஜா, நட்சத்திரப் பேச்சாளர் பாரதி பாஸ்பர் ஆகியோர் பங்கேற்று பேச்சுக்கலையை வளர்த்துக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். அதன் மூலமாக ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

நான்காவது பயிலரங்கம் இன்று (மே 8) மாலை 6 – 7 மணியளவில் நடைபெறவிருக்கிறது. இதில், கல்லூரிப் பேராசிரியரும் தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவருமான முனைவர் பர்வீன் சுல்தானா பங்கேற்கவிருக்கிறார். தமிழ் மொழியின் பெருமைகளையும் சிறப்புகளையும் மேன்மையையும் உலகம் முழுவதும் அழகு தமிழில் பேசிவருபவர். இவர், ஏராளமான பட்டிமன்றங்களிலும், தன்னம்பிக்கை மேடைகளிலும் அற்புதமான உரைகளை நிகழ்த்தியிருப்பவர்.

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வது பற்றிய சில கருத்துகளை முனைவர் பர்வீன் சுல்தானா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு பேச்சாளர் என்பவர், தான் மட்டுமே பேசுபவராக இருக்கக் கூடாது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்பவராகவும் அவர் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரால்தான், ஒரு சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஒருவருக்கு செயல்திறன்கொண்ட காதுகள் இருக்கலாம். ஆனாலும், அவர் மற்றவர்களின் பேச்சுகளைக் காதுகொடுத்துக் கேட்க முடியாதவராக இருந்தால், அவரால் நிச்சயமாக நல்ல பேச்சாளராக ஆக முடியாது. அதாவது, இது புலன் சார்ந்தது மட்டுமல்ல, புரிதல் சார்ந்ததும்கூட.

மேடைகளிலும், உறவுகளுக்கு மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும், உடன் பணியாற்றுவோர் மத்தியிலும் எதற்கு எந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியம். சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுவதே ஒரு கலைதான். அந்த மொழி அறிவு, ஆர்வமும் தொடர்ச்சியான பயிற்சியும் இருந்தால் நிச்சயம் கைகூடும். மூளைக்கும் நாக்குக்கும் இடையே ஆறு இன்ச் இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி யார் சரியாகப் பேசுகிறார்களோ, அவர்களால் வெற்றியையும், உறவுகளையும், மற்ற அனைத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியும். இது போன்ற பேச்சுக்கலையின் நுட்பங்கள் பற்றி பயிலரங்கில் நிறைய பேசுவோம்” என்றார் முனைவர் பர்வீன் சுல்தானா.

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

நீங்கள் வெற்றிப்படிகளில் ஏறுவதற்கான ஒரு முக்கிய அடித்தளத்தை இந்தப் பயிலரங்கத்தின் மூலமாக ஜூனியர் விகடன் ஏற்படுத்திக்கொடுக்கிறது. வாருங்கள் வெற்றிப் பேச்சாளராக மாறுங்கள். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்பதை கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி, பதிவுசெய்து, உறுதிசெய்துகொள்ளுங்கள்.

https://bit.ly/2Sts43O

அடுத்த கட்டுரைக்கு