Published:Updated:

`உடல் பாதித்தாலும் மனம் சாதிக்கலாம்'- ஆர்தர் கிளார்க் வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்!

ஆர்தர் கிளார்க் ( ITU Pictures )

'ஆர்தர் கிளார்க்' என்று கூறினால் அறிவியல் கதைகளில் ஆர்வம் கொண்ட வாசகர்கள் முகம் மலரும். இவர் அறிவியல் புனைக்கதைகள் எழுதுவதில் வல்லவர். இவர் மறைந்த நாள் மார்ச் 19, 2008. இவரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள சில பாடங்கள் உண்டு.

`உடல் பாதித்தாலும் மனம் சாதிக்கலாம்'- ஆர்தர் கிளார்க் வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்!

'ஆர்தர் கிளார்க்' என்று கூறினால் அறிவியல் கதைகளில் ஆர்வம் கொண்ட வாசகர்கள் முகம் மலரும். இவர் அறிவியல் புனைக்கதைகள் எழுதுவதில் வல்லவர். இவர் மறைந்த நாள் மார்ச் 19, 2008. இவரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள சில பாடங்கள் உண்டு.

Published:Updated:
ஆர்தர் கிளார்க் ( ITU Pictures )

முன்னோடியாக இருங்கள்

'2001 – எ ஸ்பேஸ் ஒடிஸி’ என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. இன்றைய பல அறிவியல் திரைப்படங்களுக்கு அடிப்படையாக விளங்கும் அந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் ஆர்தர் கிளார்க்தான். அந்த வகையில் நவீன அறிவியல் புனைவு படங்களின் முன்னோடி இவர்தான்.

சாகசங்களை நிகழ்த்துங்கள் – கற்பனையிலாவது!

கலவரங்கள் நிறைந்த வாழ்க்கையின்போது ‘யுரேனியா’ என்ற இதழ் இவரைக் கவர்ந்தது. வானியல் கூட்டமைப்பு ஒன்று அந்த இத​ழை வெளியிட்டு வந்தது. அதற்குப் பல கட்டுரைகளை எழுதினார். பின்னர் அதன் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பல புதிய பிரிவுகளை அந்த இதழில் ​​சேர்த்து அதைப் பரவலான புகழ் பெறச் செய்தார். கற்பனையிலேயே பலவித விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டு அவற்றை எழுத்து வடிவமாக்கினார்.

ஆர்தர் கிளார்க்
ஆர்தர் கிளார்க்
Amy Marash

உடல் பாதித்தாலும் மனம் சாதிக்கலாம்

பொதுவாக போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தப் பாதிப்பு இளமையிலேயே தெரிந்துவிடத் தொடங்கும். ஆனால் 1917ல் பிறந்த இவருக்கு போலியோ பாதிப்பு 1962-ல் வெளிப்பட்டது. இதற்கான சீரிய அறிகுறிகள் 1988 ல் வெளிப்பட்டன (90 வயதுவரை வாழ்ந்தவர் ஆர்தர் கிளார்க்). அதற்குப் பிறகு சக்கர நாற்காலியில்தான் அவர் வாழ்க்கை கழிந்தது. இலங்கையில் பிரிட்டிஷ் அரசி​ன் பிரதிநிதியாகப் பணியாற்றினார் இவர். ‘இலங்கையில் பிரிட்டிஷ் கலாசார சேவை செய்ததற்காக’ பிரிட்டனின் மகாராணி இவருக்குச் சிறப்பு கெளரவங்களை அளித்தார். சர்வதேச விண்வெளி பல்கலைக் கழகத்தின் முதல் தலைவராக இவர் 1989 முதல் 2004 வரை சிறப்பாகச் செயலாற்றினார். 1994-ல் 'Without Warning' என்ற தொலைக்காட்சிப் படத்தில் ஆர்தர் கிளார்க் அவராகவே நடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணை எந்த ஜீவனிடமும் கொள்ளலாம்

போலியோவின் பாதிப்புகள் வெளிப்பட்டபிறகும் அவர் ஒரு கொரில்லா அமைப்பின் தீவிர ஆதரவாளராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். கொரில்லா என்பது இங்கு கொரில்லா குரங்குகளைக் குறிக்கிறது. 2001-ல் செல்போன்கள் அறிமுகமானபோது அவை கொரில்லாக்களின் இயல்பான வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தன. கொரில்லாக்களின் சார்பாக உரத்துக் குரல் கொடுத்தார் ஆர்தர் கிளார்க்.

ஆர்தர் கிளார்க்
ஆர்தர் கிளார்க்
Rob C. Croes / Anefo, CC0, via Wikimedia Commons

அனுபவங்கள் வேறு துறைகளிலும் கைகொடுக்கும்

இரண்டாம் உலகப்போர் ​மூண்டது. ராயல் ஏர்ஃபோர்ஸ் என்ற அந்த நாட்டின் பிரபல விமானப்படைப் பிரிவில் ஒரு ரேடார் ஸ்பெஷலிஸ்டாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதல்களை முன்னதாகவே அறிவிக்கும் சக்தி பொருந்திய ரேடார்கள் குறித்து அவரது முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஒரு கட்டத்தில் பைலட் அதிகாரியாகவும் உயர்வு பெற்றார். இந்த அனுபவங்கள் அவர் புதினக் கருக்களைத் தீர்மானிக்கவும் உதவின.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism