Published:Updated:

`நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா?’ - பயிற்சி அளிக்க வருகிறார் பேரா. பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

தமிழக இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் மத்தியில் பேச்சாற்றலை வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஜூனியர் விகடன் நடத்திவரும் ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்!’ நிகழ்ச்சியில் மிகச்சிறந்த பேச்சாளரான பேராசிரியர் பர்வீன் சுல்தானா பங்கேற்கிறார்.

தமிழக இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் மத்தியில் பேச்சாற்றலை வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்!’ என்ற நிகழ்ச்சியை ஜூனியர் விகடன் நடத்திவருகிறது. இந்த வாரம் (மே 8-ம் தேதி மாலை 6 - 7 மணி) நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான பேராசிரியர் பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்.

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களும் மாணவ, மாணவிகளும் வெற்றிகளை வசமாக்கிக்கொள்வதற்கு பேச்சுக்கலை மிகவும் முக்கியமானது. அரசியல் மீதான ஆர்வம், சமூகத்தின் மீதான அக்கறை, இலக்கியங்கள் மீதான ஈர்ப்பு என்று இன்றைய தமிழ்ச் சூழலானது நெகிழவைப்பதாகவே இருக்கிறது. மேடைகள்தான் என்றில்லாமல், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று பலதரப்பட்ட வகைகளிலும் நம்முடைய பேச்சு அரங்கேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

அந்த வாய்ப்புளை நம்முடைய இளைஞர்களும் மாணவ, மாணவியரும் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் சொந்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சமூகத்துக்கு நல்ல பங்களிப்புகளை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் தொடர் பயிலரங்கத்தை இலவசமாகவே ஜூனியர் விகடன் நடத்திவருகிறது.

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

இந்தப் பயிலரங்கத்தில், இதற்கு முன்பாக திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பட்டிமன்ற மன்னன் ராஜா, நட்சத்திரப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு, பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சியையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். அதன் மூலமாக ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவ, மாணவியரும் பயனடைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

மே 8-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 - 7 மணியளவில் நடைபெறவிருக்கும் ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்!’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான முனைவர் பர்வீன் சுல்தானா பங்கேற்கவிருக்கிறார். சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் பர்வீன் சுல்தானா, தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளுக்கும் சென்று தமிழ் மொழியின் வளம், சிறப்பு, பெருமை ஆகியவற்றைத் தன் அழகு தமிழ்ப் பேச்சின் மூலம் எடுத்துரைத்துவருபவர். இளைஞர்கள், மாணவ - மாணவிகள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும் நூற்றுக்கணக்கான மேடைகளில் அவர் பேசியிருக்கிறார்.

https://bit.ly/2Sts43O

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

அவரிடம் நேரிடையாகப் பயிற்சி பெறும் வாய்ப்பை ஜூனியர் விகடன் ஏற்படுத்திக்கொடுக்கிறது. இந்த நல்லதொரு வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி, அதில் முன்பதிவுசெய்து, தங்களின் பங்கேற்பை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

https://bit.ly/2Sts43O

வாருங்கள்... உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்!

அடுத்த கட்டுரைக்கு