Published:Updated:

எழுத்தாளர்களுக்கான தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது!

கு.சின்னப்ப பாரதி, இரா.கலியபெருமாள், கோணங்கி

2021-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது எழுத்தாளர்கள் கு.சின்னப்ப பாரதி, கோணங்கி, புலவர் இரா.கலியபெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

எழுத்தாளர்களுக்கான தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது!

2021-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது எழுத்தாளர்கள் கு.சின்னப்ப பாரதி, கோணங்கி, புலவர் இரா.கலியபெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Published:Updated:
கு.சின்னப்ப பாரதி, இரா.கலியபெருமாள், கோணங்கி
இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.

மேலும் இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும். அந்தவகையில் 2021-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது வழங்கும் விழா இன்று தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்விழாவில் தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களான கு.சின்னப்ப பாரதி, கோணங்கி, புலவர் இரா.கலியபெருமாள் ஆகியோருக்கு இலக்கிய மாமணி விருது வழங்கி, விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையும், தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி சிறப்பித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த வருது வாங்கிய எழுத்தாளுமைகளுக்கு எழுத்தாளர்களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.