Published:Updated:

20 ஆண்டுகள் புத்தியைத் துலக்கிய புத்தகங்கள்!

சோளகர் தொட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சோளகர் தொட்டி

ஜூ.வி 2020

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகமயமாதல், அந்நிய முதலீடு, தனியார்மயமாதல் காரணமாக வளரும் நாடுகளின் இயற்கை வளம் எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதைப் பற்றி விளக்கும் நூல்தான் `ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’. ஜான் பெர்க்கின்ஸ் எழுதியுள்ள இந்நூலை தமிழில் இரா.முருகவேள் மொழி பெயர்த்துள்ளார்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - 
சோளகர் தொட்டி
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சோளகர் தொட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சோளகர் தொட்டி

பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தீனியாக வந்த நூல்தான் `சோளகர் தொட்டி’. பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, நெறிகள் மற்றும் வனத்தின் பாதுகாப்பு கவசமாக விளங்கும் மக்களின் நூலாக இது படைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகள் ஒடுக்கப்படுவது குறித்து நுட்பமாக அலசுகிறார் நூலாசிரியர் ச.பாலமுருகன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சேப்பியன்ஸ்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முதலாளித்துவம் ஆகிய கோட்பாடுகளைக் கையில் எடுத்துக்கொண்டு, மனிதன் அவனுக்குத் தெரியாமலேயே மற்ற உயிர்களை எவ்வாறு வதைத்துவருகிறான் என்பது குறித்து விரிவாக எழுதியுள்ளார் நூலின் ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. தமிழாக்கம் செய்தவர் நாகலட்சுமி சண்முகம்.

சேப்பியன்ஸ் - இந்தியாவின் இருண்ட காலம்
சேப்பியன்ஸ் - இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம்

இந்திய மக்களை அடிமைப்படுத்தி, நாட்டின் வளங்ளைச் சுரண்டி அதைத் தங்கள் நாடு முன்னேறுவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது பற்றியும் அதனால் இந்திய மக்கள் அனுபவித்த துயரங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் சசி தரூர்; தமிழ் மொழியாக்கம் ஜே.கே.இராஜசேகரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேள்பாரி

ஆனந்த விகடனில் 111 வாரங்கள் தொடராக வெளிவந்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து புத்தகமாக வெளிவந்தது வேள்பாரி. சுயநலம் இல்லாமல் மக்களை நல்லாட்சி செய்யும் அரசன் பாரி, அவர் ஆட்சி செய்யும் நிலம்தான் பறம்பு மலை. எல்லா வளங்களும் கொழிக்கும் பறம்பைக் கைப்பற்ற மூவேந்தர்களும் முயன்று தோற்றுப்போகின்றனர். இறுதியில் சூழ்ச்சியால் பாரியை எப்படி வீழ்த்துகின்றனர் என்பது பற்றிப் பேசுகிறது இந்த நாவல். நூலாசிரியர் சு.வெங்கடேசன்.

வேள்பாரி - அசுரன்
வேள்பாரி - அசுரன்

அசுரன்

தோல்வியடைந்தவர்களின் கதை யாராலும் சொல்லப்படாத பகுதி. அப்படி தோல்வியுற்ற பகுதியில்தான் நம்மை பயணிக்கவைக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ஆனந்த் நீலகண்டன். வரலாற்றில் நடந்த சம்பவங்களை தற்போது ஏற்படும் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி எழுதுவது புது முயற்சிதான். அதைத் திறம்படச் செய்திருக்கிறார் ஆசிரியர். தமிழில் மொழி பெயர்த்தவர் நாகலட்சுமி சண்முகம்.

பெரியார் இன்றும் என்றும்

பெரியார் கூறிய அனைத்துக் கருத்துகளின் தொகுதியாக விடியல் பதிப்பகம் வெளியிட்ட நூல். சமுதாயம், கடவுள், சாதி, தத்துவம், பெண், பகுத்தறிவு, பண்பாடு, கல்வி, பொருளாதாரம், சமதர்மம், பொதுநலம், புராணங்கள் என அனைத்திலும் பெரியாரின் பார்வை எப்படியிருந்தது என்பதை தெளிவாகப் பதிவுசெய்கிறது இந்த நூல்.

பெரியார் இன்றும் என்றும் - மறைநீர்
பெரியார் இன்றும் என்றும் - மறைநீர்

மறைநீர்

ஒரு பொருள் தயாரிக்க அதிகமாக நீர் தேவைப்பட்டால், அந்தப் பொருள் தயாரிப்பைக் குறைத்துக்கொள்வதன்மூலம் நீரைச் சேமிக்க முடியும் என்கிறார் நூல் ஆசிரியர் கோ.லீலா. மேலும் வளர்ச்சி அடைந்த நாடுகள், அதிக நீர் தேவைப்படும் பொருள்களைத் தயாரிக்க வளரும் நாடுகளை நிர்பந்திப்பதாகவும் கூறுகிறார்.

அம்பேத்கர் இன்றும் என்றும்

இந்து மதத்தின் புதிர்கள், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், தீண்டாமை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். முதல் பகுதியில், ஒருவன் இந்துவாகச் சொல்வதில் உள்ள பிரச்னையும், இரண்டாவது பகுதியில் பௌத்த மதத்தின் வீழ்ச்சியும், மூன்றாவது பகுதியில் தீண்டாமைக் கொடுமை பற்றியும் அம்பேத்கர் ஆராய்ந்து எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அம்பேத்கர் இன்றும் என்றும் - பண்பாட்டு அசைவுகள்
அம்பேத்கர் இன்றும் என்றும் - பண்பாட்டு அசைவுகள்

பண்பாட்டு அசைவுகள்

தொ.பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகள் மற்றும் சில புதிய கட்டுரைகள் உள்ளடக்கிய தொகுப்புதான் இந்த நூல். மண் மற்றும் அதில் வாழும் உயிர்கள் பற்றியும் அவற்றின்மூலம் நடைபெறும் உலக நிகழ்வுகள் பற்றியும் தொகுத்து வழங்குகிறது இந்த நூல்.

அடித்தள மக்கள் வரலாறு

அடித்தட்டு மக்கள் வரலாற்று ஆய்வுமுறையைத் தமிழக வரலாற்றுக்கேற்ப கொண்டுவந்ததன் மூலம் புதிய தத்துவங்களை காட்டுகிறார் நூலாசிரியரான மார்க்சியக் கருத்துநிலையாளர் ஆ.சிவசுப்பிரமணியன். தமிழக வரலாற்றைக் கற்க விரும்புவோர்க்கான தேவையான பொக்கிஷமாகத் திகழ்கிறது இந்நூல்.

அடித்தள மக்கள் வரலாறு - ஆழி சூழ் உலகு
அடித்தள மக்கள் வரலாறு - ஆழி சூழ் உலகு

ஆழி சூழ் உலகு

ஜோ டி குருஸ் எழுதிய இந்த நூல், கடலோர வாழ்வை வாழும் மக்களின் போராட்டத்தை, அதன் வலிகளுடன் சித்திரிக்கிறது. தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்றாக இது கருதப்படுகிறது.

ஓநாய் குலச்சின்னம்

ஜியோங் ரோங் எழுதிய ‘வுல்ஃப் டோட்டெம்’ என்ற சீன நாவலை, ‘ஓநாய் குலச்சின்னம்’ எனும் பெயரில் சி.மோகன் தமிழாக்கம் செய்துள்ளார். ‘இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால், ஒற்றை மனிதனின் பேராசையைக்கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது’ எனும் காந்தியின் கூற்றை நியாயப்படுத்துகிறது இந்த நூல்.

ஓநாய் குலச்சின்னம் - ரசவாதி
ஓநாய் குலச்சின்னம் - ரசவாதி

ரசவாதி

மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சர்யம் என அத்தனையும் உள்ளடக்கியுள்ள ‘ரசவாதி’ நூல், ஒரு பெரிய பொக்கிஷத்தைத் தேடிச் செல்ல விரும்புகிற, ஆன்டலூசியா பகுதியில் வசிக்கும் ஓர் ஆடுமேய்க்கும் இடையனின் கதை. நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

அறம்

ஜெயமோகனின் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பாக வெளியாகியிருந்தது அறம். இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் அறத்தின் வழி வாழ்ந்த மனிதர்களை மையமாகக் கொண்டிருக்கின்றன.

அறம் - பசுமைப் புரட்சியின் கதை
அறம் - பசுமைப் புரட்சியின் கதை

பசுமைப் புரட்சியின் கதை

சங்கீதா ஸ்ரீராம் இயற்றிய இந்த நூல் நவீன இந்தியாவின் நிகழ்வுகளில் ஒன்றாகச் சொல்லப்படும் பசுமைப்புரட்சியின் நோக்கங்களையும் அதன்மூலம் பிறர் அடையும் பலன்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்கிறது இந்நூல்.

ரூமி

13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர் ஜலாலத்தீன் முகம்மது ரூமி எழுதிய நூலை, என்.சத்தியமூர்த்தி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மனித வாழ்வு, இறைமை குறித்த தெளிவான புரிதலோடு எழுதப்பட்டிருக்கும் கவிதைகளை உலகிற்கு வழங்கியிருக்கிறார் ரூமி.

ரூமி - குற்றப் பரம்பரை
ரூமி - குற்றப் பரம்பரை

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த ‘கூட்டாஞ்சோறு’ கதைக்கருவை மையப்படுத்தி வெளியிடப்பட்டதுதான் வேலராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கல்வி கற்று வந்ததால், சில சாதியினர் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் செய்து வந்திருக்கிறார்கள். அதைச் சீர்திருத்தும் விதமாக 1871-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ‘குற்றப்பரம்பரை’ சட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதே இந்த நாவல்.

எனது இந்தியா

இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து தேடுதல் வேட்டை நடத்தி ‘எனது இந்தியா’வை உருவாக்கியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தபோதே பெரும் வெற்றி பெற்று வாசகர்களைக் கவர்ந்திருந்தது.

எனது இந்தியா - சிவப்புச் சந்தை
எனது இந்தியா - சிவப்புச் சந்தை

சிவப்புச் சந்தை (THE RED MARKET)

இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஸ்கார்ட் கார்னி. உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யத் தேவைப்படும் மாற்று உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி பற்றியும் விளக்குகிறது இந்த நூல். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது ‘The Red Market’.