Published:Updated:

“பெண்ணைப் பற்றி எழுதுகையில் தனக்குள் இருக்கும் ஆணை உறங்கச் செய்ய வேண்டும்!”

கவிஞர் மனுஷி
பிரீமியம் ஸ்டோரி
கவிஞர் மனுஷி

மனுஷி - படம்: அ.குரூஸ்தனம்

“பெண்ணைப் பற்றி எழுதுகையில் தனக்குள் இருக்கும் ஆணை உறங்கச் செய்ய வேண்டும்!”

மனுஷி - படம்: அ.குரூஸ்தனம்

Published:Updated:
கவிஞர் மனுஷி
பிரீமியம் ஸ்டோரி
கவிஞர் மனுஷி

உறவுகள் மீதான நம்பிக்கையையும் நம்பிக்கையின்மையையும் அளவற்ற அன்பையும் அது தரும் துயரத்தையும் தம் கவிதைகளில் எழுதிவருபவர் கவிஞர் மனுஷி. இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’ எனும் கவிதைத் தொகுப்புக்காக, 2017-ம் ஆண்டின் யுவ புரஸ்கர் விருதுபெற்றார்.

“வாழ்வின் ஓர் அனுபவம் அல்லது ஒரு நிகழ்வை மட்டுமே பகிர்வது கவிதையாகுமா?”

“என்னளவில் கவிதை என்பது திட்டமிட்டுச் செய்யப்படுவதல்ல. இதையெல்லாம் கவிதையாக்க வேண்டும், இதையெல்லாம் கவிதையாக்கினால் கவனிக்கப்படும் என்கிற திட்டமிடல்களுக்கு அப்பால், கவிஞரது மனதுக்குள் கவிதை தன்னைச் செதுக்கிக்கொள்கிறது. ஒரு கவிஞரை எது ஆத்மார்த்தமாகத் தொடுகிறதோ, எந்த ஒரு நிகழ்வு அல்லது விடயம் கவிதையாக எழுதச் சொல்லி உந்துகிறதோ அது மொழியின் வாயிலாகக் கவிதையாகிறது. ஒரு தோட்டத்தில் வெவ்வேறு வண்ணத்தில், வெவ்வேறு வாசனைகளில், வெவ்வேறு வடிவங்களில் ஏராளமான பூக்கள் இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எல்லா மலர்களிலும் சென்று அமர்ந்து தேனருந்துவதில்லை. அது ஏன் ஒரு குறிப்பிட்ட மலரில் மட்டும் சென்று அமர்கிறது. அதுபோலத்தான் கவிதை எழுதும் அனுபவமும். மேலும், ஒரு கவிஞன் ஏன் இதையெல்லாம் எழுதவில்லை என்று கேட்பதும், ஏன் இதை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்பதுமே ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் நினைப்பதை ஒரு கவிஞன் எழுத வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட, நிர்பந்திப்பதைவிட மொழியினை வசப்படுத்தி நீங்களே எழுதலாமே. எழுதப்பட்ட கவிதை, கவிதையாக இருக்கிறதா, அதற்குள் உண்மை இருக்கிறதா, கவிஞரின் அனுபவம் வாசக அனுபவமாகப் பரிணாமம் கொள்கிறதா. அது போதும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பாலின அடையாளமற்றதே நல்ல கவிதை என்பதில் உடன்பாடு உண்டா?”

“பாலின அடையாளமற்றதே நல்ல கவிதை என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால், கவிதையை, பாலின அடையாளங்களைக்கொண்டு கொண்டாடுவதையும் நிராகரிப்பதையும் மறுக்கிறேன். எழுதும்போது, எழுதுகிற அந்த மனநிலை, பாலினமற்றதாக இருக்க வேண்டும். பாலினமற்றவராக இருந்து எழுதும்போது அப்படியான பாலின அடையாளம் கடந்த கவிதையை எழுத முடியும். ஏனெனில், கவிதை என்பது அனுபவம் சார்ந்தது. அனுபவத்திற்கு ஆண் பெண் என்றெல்லாம் கிடையாது. சில அனுபவங்கள் அப்படியாக அமையலாம். கோட்பாட்டு வரையறைகளை வைத்துக்கொண்டு கவிதை எழுதுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை.

“பெண்ணைப் பற்றி எழுதுகையில் தனக்குள் இருக்கும் ஆணை உறங்கச் செய்ய வேண்டும்!”

கவிதை மட்டுமல்ல. பொதுவாகவே இலக்கியம் என்பது சாதி, மத, வர்க்க, இன, பாலின அடையாளங்கள் கடந்து மனிதத்தைப் பேசுவதாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு விடயத்தை உறுதியாக நம்புகிறேன். தமிழ் நவீன இலக்கியத்தில் பெண் எழுத்து, ஆண் எழுத்து, தலித் எழுத்து, திருநங்கை எழுத்து என்றெல்லாம் வகைப்படுத்தி இலக்கியத்தைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. நவீன இலக்கியம், நவீன எழுத்து, நவீனக் கவிதை. அவ்வளவே.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தமிழ் நவீனக் கவிதைகளில், ஆண்களின் படைப்புகளில் பெண் வெளி எவ்வாறு பதிவாகியிருப்பதாக நினைக்கிறீர்கள்?”

“பொதுவாகவே ஆண் எனும் பிம்பத்தைத் தொலைத்துவிட்டு ஒரு பெண்ணைக் கவிதைக்குள் எழுதுதல் என்பது சவாலான விஷயம் என நினைக்கிறேன். ஆண்கள், பெண்களைப் பற்றி எழுதுவதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, பெண் இனத்தின் துயரங்களுக்காக இரங்குதல். மற்றொன்று, தனக்குச் சாதகமான சுதந்திரப் பெண்ணை உருவாக்குதல். அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெண் வெளியைத்தான் பெரும்பாலும் ஆண்கள் சொல்லி யிருக்கிறார்கள். அதாவது, ஆண் எனும் இடத்திலிருந்து பெண்ணைப் பார்ப்பது. அப்படியான கவிதைகளின் போலித்தனம் சீக்கிரம் பிடிபட்டுப்போகும். ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வார்கள். ஆண்கள், பெண்களின் உலகைப் பற்றி எழுதும்போது, தனக்குள் இருக்கும் ஆணை உறங்கவைத்து, பெண்ணை விழிக்கச் செய்யும்போது அதில் கொஞ்சம் அசலான பெண் வெளிப்படுவாள்.”

“கவிதையாக்கத்தில் உங்களால் கைவிட முடியாத அம்சமாக எதை நினைக்கிறீர்கள்?”

“அப்படி நான் நினைப்பது அன்பு. துரோகத்தைக் கடந்துபோகிற மனப்பக்குவத்தைத் தரும் பேரன்பு.”

நாம் அறிந்துவைத்திருக்கும் அளவுக்கு உலக இலக்கியப் பரிச்சயம், மற்ற மொழியில் உள்ள இளம்படைப்பாளிகளிடம் இல்லை.

“வெளிமாநிலங்களில் கவிதை வாசிக்கச் செல்கையில் கிடைக்கும் அனுபவங்களில் முக்கியமானதாக நினைப்பது?”

“2015-ல் ஷில்லாங்கில் நடைபெற்ற சாகித்ய அகாடமி இளம் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ எனும் தலைப்பில் பேச அழைக்கப் பெற்றிருந்தேன். எனது முதல் வெளிமாநிலப் பயணம் அது. அங்கே வாசிக்கப்பட்ட கவிதைகள், சிறுகதைகளைக் கேட்டபோது கவிதையில், சிறுகதையில் மற்ற மாநிலங்களைவிட நாம் கொஞ்சம் முன்னே போய்க்கொண்டிருக்கிறோம் எனப் புரிந்தது; பெருமையாக இருந்தது. ஆனால், இங்கே நமக்குள் அப்படியாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் மனம் குறைவாக இருக்கிறது எனத் தோன்றியது. நாம் அறிந்துவைத்திருக்கும் அளவுக்கு உலக இலக்கியப் பரிச்சயம், மற்ற மொழியில் உள்ள இளம்படைப்பாளிகளிடம் இல்லை. அதேசமயம், அதைப் பற்றி அவர்களுக்கு எந்தத் தாழ்வுமனப்பான்மையும் இல்லை. அவர்கள் நிலத்தை, அவர்கள் வாழ்வை, அவர்கள் பண்பாட்டை, அவர்களின் அரசியலை, அவர்களின் மொழியில் காத்திரமாக எழுதுகிறார்கள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism