சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 11 - திரையரங்கம்

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

தாநாயகனின் போஸ்டரை

கழுதை தின்றால் கல்லால் அடிக்கிற

மதம்பிடித்த அபிமானிகள்

சொந்தக்காரங்க வீட்டுக்குப்

போற மாதிரி

தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு

கீத்துக் கொட்டகைக்குப் போனதுண்டு

இடைவேளையில் தின்பதே வேலை

ஈரோவின் அறிமுகத்தில்

கற்பூரம் கொளுத்தி

வேட்டித்திரையை எரித்துவிடுவார்கள்

சண்டை பாடல் வசனம்

ஏதும் புரியாது

விசில் கூச்சலில் நானும் கைதட்டிவிட்டு

அம்மாவின்

இடுப்பிலும், விரல் பிடித்தும்

வீடுவந்து சேர்வேன்

தாசாமகான் பின்புறம்

சரஸ்வதி தியேட்டரில்

ஆண்டுகளுக்குப்பிறகு

இரவுக் காட்சியில்

எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டு

இயற்கை விசிறியோடு

படம் பார்த்தேன்

அம்மாவின் பக்கத்தில்

என்னைப்போலவே நாயகர்கள் மாறியிருந்தனர்

லாட்டரி டிக்கெட் துண்டுக்காகிதங்கள்

பறவைகளாய்ப் பறக்க

சென்னையிலும்

திரைக்குள் திருவிழா நடக்கும்

இடைக்காலத்தில்

அம்மாவைப் போல்

எத்தனையோ நாயகர்கள் போய்விட்டனர்

தாழ் திறவாய்! - கதவு 11 - திரையரங்கம்

கேளிக்கை மாளிகையில்

குளிரூட்டப்பட்ட இருட்டு அரங்கில்

தனியாய் படம் பார்க்க

அலமாரியில் இருக்கும் அம்மாவின் மூக்குத்தியாய்

திரை வெளிச்சத்தில் ஒரு மின்மினி.

பறந்து சென்றது!