Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 7 - நூலகம்

தாழ் திறவாய்!
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்!

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

தாழ் திறவாய்! - கதவு 7 - நூலகம்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

Published:Updated:
தாழ் திறவாய்!
பிரீமியம் ஸ்டோரி
தாழ் திறவாய்!

கன்னிகாபுரம் நூலகம் அருகே

என்றுதான்

எல்லாக் கட்சி சுவரொட்டியிலும் இருக்கும்

உள்ளே நுழையும் சிறுவனை

ஏதாவதொரு புத்தகத்தை

வாசிக்கச் சொல்லி அனுமதிப்பர்

நாளிதழ், வாரம், மாதம்

இதர அனைத்தும் அறிமுகமானது

காது கேட்காத நூலகரோடு

உறுப்பினர் வீடு கொண்டுபோகும் நூலை

நானே பதிவிடுவேன்

நூலகத்தைப் பூட்டுகிற

பையனாகவும் இருப்பேன்

துருப்பிடித்த அலமாரிகள்

கூட்டமாய் இருந்தும்

மௌன மனிதர்கள்

வெளியே காய்கறி விற்பவனின் கூச்சல்

தாழ் திறவாய்! - கதவு 7 - நூலகம்

கவனத்தைக் கூட்டிச்செல்லும்

மழையில் தூறுவதும்

வெயிலில் புழுங்குவதுமாய்

சிமெண்ட் ஓடு வேய்ந்த

செங்கல் பிதுங்கிய நூலகம்

என் இருபதுகளில்

கானாப்பாட்டு ஆய்வுக்காக

நகரங்களின் முதன்மை நூலகங்களுக்கு

என்னை அழைத்துச்சென்றேன்

இப்பொழுது குடியிருக்கும் வீட்டிலேயே

குறுநூலகம் உள்ளது

கால்நூற்றாண்டு கடக்க

பொலிவுடன் அடுக்ககமாய் மாறிய

பால்ய நூலகத்திற்குச் சென்றுவந்தேன்

என் புத்தகமும் இருந்தது.