Published:Updated:

"நாத்திகரான உங்கள் படத்தலைப்புகளில் மட்டும் 'கடவுள்' ஏன்?" - ராஜேஷ்குமாருக்கு கமல் பதில்! #VikatanDiwaliMalar2019

ராஜேஷ்குமார்

'சிங்காரவேலன்', 'தசாவதாரம்', 'அன்பே சிவம்', 'சூரசம்ஹாரம்', 'விஸ்வரூபம்.' இது அறியாமல் செய்ததா அல்லது இயல்பாக நடந்ததா?'

"நாத்திகரான உங்கள் படத்தலைப்புகளில் மட்டும் 'கடவுள்' ஏன்?" - ராஜேஷ்குமாருக்கு கமல் பதில்! #VikatanDiwaliMalar2019

'சிங்காரவேலன்', 'தசாவதாரம்', 'அன்பே சிவம்', 'சூரசம்ஹாரம்', 'விஸ்வரூபம்.' இது அறியாமல் செய்ததா அல்லது இயல்பாக நடந்ததா?'

Published:Updated:
ராஜேஷ்குமார்

? ஒரு வரலாற்றுத் தலைவரை உயிர்ப்பிக்கலாம் என்றால் யாரை உயிர்ப்பிப்பீர்கள்... ஏன்?

''சுபாஷ் சந்திர போஸ். பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு சரியான ஒரு பதில் கிடைக்கும்.''

? உங்களைச் சந்திக்க வந்து உங்களை பிரமிக்க வைத்த வாசகர் யார்?

''ஒருவரா இருவரா எடுத்துச் சொல்ல... இருந்தாலும் இதோ ஒருவர். ஆறு மாதங்களுக்கு முன்னர் நான் என் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது கட்டட வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்தர வயதுப் பெண் தயக்கத்தோடு என்னை நோக்கி வந்தார். அதிர்ச்சி அகலாத விழிகளோடு கேட்டார்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'ஐயா! நீங்க கதை எழுதுற ராஜேஷ்குமார்தானே?'

நான், 'ஆமாம்' என்று சொன்னதும், அந்தப் பெண் உணர்ச்சிவசப்பட்டு என் கையைப் பிடித்துக்கொண்டு, 'ஐயா! நான் சித்தாள் வேலைக்கு ஒரு தைரியமான பொண்ணா போறேன்னா அதுக்குக் காரணம், நான் சின்ன வயசுலேருந்து படிச்சுக்கிட்டிருக்குற உங்க நாவல்கள்தான்யா. படிச்சது அஞ்சாங்கிளாஸ்தான். ஆனா, கட்டட வேலை பார்க்கிறப்ப இன்ஜினீயர்ஸ் இங்கிலீஷ்ல பேசினாலும் எனக்கு நல்லாப் புரியுது' என்றார்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'உங்க பேர் என்னம்மா?' என்று கேட்டேன். 'செல்விங்க... முழுப்பேரு அருள் செல்வி' என்றார். சித்தாள் வேலைக்குப் போகும் ஒரு பெண்ணின் மகள் எப்படி ஐ.ஏ.எஸ் படித்து ஒரு மாவட்டத்தின் கலெக்டர் ஆகிறாள் என்ற கருவில் 'அருள் செல்வி ஐ.ஏ.எஸ்' நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.''

? நீங்கள் ரசித்துப் பார்த்த க்ரைம் திரைப்படம் எது... அண்மையில் பார்த்து ரசித்த திரைப்படம் எது?

''பிடித்த க்ரைம் படம் 'புதிய பறவை.' சமீபத்தில் ரசித்தது, டிஜிட்டலில் குளித்துவிட்டு வந்த 'வசந்த மாளிகை'யும் 'அடிமைப்பெண்'ணும்.''

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

? பிற எழுத்தாளர்கள் எழுதியவற்றில் உங்கள் மனதுக்குப் பிடித்த சிறுகதைகள் மூன்றைச் சொல்லுங்கள்?

''ஜெயகாந்தன் - யாருக்காக அழுதான்?

சுஜாதா - விளிம்பு

அகிலன் - சகோதரர் அன்றோ!''

? உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய கேள்வியை எதிர்கொண்டதுண்டா?

''ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி விழாவில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது மாணவர்கள் சிலர் என்னிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு குறும்புக்கார மாணவர் திடீரென்று இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டார்.

' 'கலர்' பார்க்கச் சிறந்த இடம் எது... கோயிலா, பார்க்கா, பீச்சா?'

எனக்கு ஒரே அதிர்ச்சி! காரணம் எனக்குப் பக்கத்தில் சில மாணவிகளும் இருந்தார்கள். நான் சட்டென்று அந்த மாணவனைப் பார்த்து 'ஏன், ஒரு பெயின்ட் கடைக்குப் போகலாமே' என்று சொன்னதும், இறுக்கமான நிலைமை சட்டென்று இயல்பான சூழலுக்கு மாறியது.''

? கணினி யுகத்திலும் பேனா பிடித்துக் கையில்தான் எழுதுகிறீர்கள், ஏன்?

''பேப்பர், பேனா பிடித்திருக்கும் கை, மூளை இந்த மூன்றுக்கும் இடையிலிருக்கும் உயிரோட்டம் கணினியில் டைப் அடிக்கும்போது மிஸ்ஸிங்...''

? நீங்கள் எந்தப் பிரபலத்திடமாவது கேள்வி கேட்டு பதில் பெற்ற அனுபவம் உண்டா?

''நடிகர் கமலிடம் நான் கேட்ட கேள்வி இது. 'மிஸ்டர் கமல்! நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர். ஆனால், உங்கள் படங்களின் தலைப்புகளோ கடவுள் சம்பந்தப்பட்டவையாக, கடவுள் நாமத்தைச் சொல்லக் கூடியவையாக இருக்கின்றன. உதாரணம்: 'சிங்காரவேலன்', 'தசாவதாரம்', 'அன்பே சிவம்', 'சூரசம்ஹாரம்', 'விஸ்வரூபம்.' இது அறியாமல் செய்ததா அல்லது இயல்பாக நடந்ததா?'

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

"நாத்திகரான உங்கள் படத்தலைப்புகளில் மட்டும் 'கடவுள்' ஏன்?" -  ராஜேஷ்குமாருக்கு கமல் பதில்! #VikatanDiwaliMalar2019

கமல் சொன்ன பதில்: 'விஞ்ஞானத் தீர்வுகளைத் தன் தீர்வாக ஆக்கிக்கொள்ள முற்படும் தேவசபைகள் கையாளும் அதே யுக்திதான் இது. (உதாரணம்: டார்வினிடமும் கலிலியோவிடமும் காலம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கும் வாடிகன்). 'Brutus is an honourable man' என்று தொடங்கும் Mark Antony-யின் வசனத்தில் ஷேக்ஸ்பியர் கையாளும் யுக்தி. 'பராசக்தி' என்று ஒரு பகுத்தறிவுவாதப் படத்துக்குப் பெயர்வைத்த அதே யுக்தி. வழி வழியாக என் முன்னோர்கள் செய்த இடக்கரடக் கலைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன்.' ''

"நாத்திகரான உங்கள் படத்தலைப்புகளில் மட்டும் 'கடவுள்' ஏன்?" -  ராஜேஷ்குமாருக்கு கமல் பதில்! #VikatanDiwaliMalar2019

? நடிகர் ரஜினியைச் சந்தித்திருக்கிறீர்களா?

''1994-ம் வருடம், ஒரு மே மாதத்தின் காலை நேரம் ரஜினியை அவருடைய போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து

15 நிமிடங்கள் பேசினேன். சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் நக்கீரன் கோபால். ரஜினி எந்தவிதமான ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாகப் பேசினார்.

'என்கிட்டே வந்திருக்கீங்க... நான் என்ன பண்ணணும் ராஜேஷ்குமார்?'

'உங்களை ஹீரோவாக வெச்சு 'ரஜினி ராஜ்யம்' என்கிற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதப்போறேன்.'

வாய்விட்டு அண்ணாந்து சிரித்தார். 'வெரி நைஸ். அதுல எனக்கு என்ன ரோல்?'

'ஆர்.கே என்கிற ஒரு க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர். தமிழ்நாட்டில் நடந்த கண்டுபிடிக்க முடியாத குற்றங்களை நீங்க உங்க 'இன்டலிஜென்ட்டான மூவ்'களில் இன்வெஸ்டிகேட் பண்ணி, குற்றவாளிகளைப் பிடிக்கிறீங்க.'

'நல்லா இருக்கே... குட்ஜாப். பண்ணுங்க' கைகொடுத்து, பாராட்டினார். மறக்க முடியாத பதினைந்து நிமிடங்கள்.''

- ராஜேஷ்குமார்! ஐம்பது ஆண்டுகள் தாண்டியும் ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் எழுத்துக் குதிரை. ஐம்பது கேள்விகளோடு அவரைச் சந்தித்தேன். சளைக்காமல் பதில் சொன்னது அவர் பேனா. இங்கே இருப்பது சாம்பிள்தான். 50 கேள்விகளையும் பதில்களையும் விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள "என் பேனாவுக்குப் பசி அதிகம்!" எனும் பேட்டியில் முழுமையாக வாசிக்கலாம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1