Published:Updated:

வரலாறாய் வாழ்ந்தவரின் வாழ்க்கை!

கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி

KARUNANIDHI: A LIFE

வரலாறாய் வாழ்ந்தவரின் வாழ்க்கை!

KARUNANIDHI: A LIFE

Published:Updated:
கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி

புகழ் பெற்ற ‘பென்குயின் வைக்கிங்’ நிறுவனம் ஆங்கிலத்தில் KARUNANIDHI: A LIFE என்ற நூலை வெளியிட்டிருக்கிறது. மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் எழுதிய இந்தப் புத்தகம் வாசகப் பரப்பில் பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கிறது. தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் காலத்தின் கைவிரல்களால் மறைக்க முடியாத நீண்ட நெடும் தனி மனித வரலாறு கருணாநிதியுடையது. அதைத் தமிழரைத் தாண்டியும் சொல்ல விழைந்தது சவாலான பணியே. கருணாநிதியோடும், அவரோடு நெடுங்காலமாகப் பழகியவர்களோடு உரையாடிப் பெற்ற அனுபவங்களோடும் அரசியல் நிகழ்வுகளை ஆழமாகக் கவனித்த வகையிலும் எழுதியிருக்கிற ஏ.எஸ்.பன்னீர் செல்வனோடு நடந்தது இந்த உரையாடல்.

``இந்தப் புத்தகத்தின் முதல் வடிவம் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறாகவே இல்லை. இதை எப்படி எழுதலாம் என்பதையும், இந்தியா முழுமைக்கும் புரிந்துகொள்ளும்படியான ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதும் அவ்வளவு எளிதாக இல்லை. யோசித்துப் பார்த்தால் அவரது வரலாறு தனிமனிதக் கதையாகவும், இன்னொரு பக்கம் பார்த்தால் திராவிட இயக்கக் கதையாகவும் சேர்ந்தே இருந்தது. எங்கே தனிமனிதக் கதை முடிகிறது, எங்கே இயக்கக் கதை ஆரம்பிக்கிறது எனச் சொல்லவே முடியவில்லை. எனக்குத் தெரிந்து இளவயது ஆசிரியர் என்ற சாதனை படைத்தவர் கருணாநிதிதான். எழுத்து மாபெரும் ஆயுதம் என்பதை அப்போதே புரிந்து கொண்டவர் அவர். எழுத்தின் மூலம் ஒரு இயக்கத்தை எழுப்பி, அதன் மூலம் சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட முடியும் என அவர் நினைத்தார். அதன் மூலம் தொண்டர் படையைத் திரட்ட முடியும், அதை என்றைக்குமான வாக்கு வங்கியாக மாற்ற முடியும் என்பதையும் நிரூபித்தவர் அவர் மட்டுமே. எழுத்தை மட்டுமே மூலதனமாக வைத்து வேறு எந்தப் பின்புலமும் இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் கருணாநிதிக்கு முதலிடம் தரலாம்’’ என்றவரிடம், ’இப்படிப்பட்ட புத்தகத்தை நீங்கள் எழுதப் போவது பற்றி அவரின் கருத்தென்ன’ என்று கேட்டோம்.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

“ `நான் எனக்கான வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதியாக எழுதிட்டேன். உனக்கு என்ன தோணுதோ நீ எழுது. அதை மத்தவங்களைப் போல நானும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்’ என்றார். அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அவர் எழுத்துப் பணிக்கு மட்டும் ஓய்வே இருந்ததில்லை. அவர் செய்தியைப் படைப்பவர் மட்டுமல்லர்; அவரே செய்தியின் நாயகராகவும் இருக்கிறார். `முரசொலி’ மூலமாக உடன்பிறப்புகளோடு உரையாடுகிறார். தன்னை விமர்சித்து மற்ற பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு பதிலடி தருகிறார். சினிமாக்களில் சமூக அவலங்களைச் சாடுகிறார். நாடகங்களில் கொள்கைகளை அறிவிக்கிறார். தமிழர்களின் வாழ்வில் கலைஞரின் தகவலும், குரலோசையும், புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் கலக்காத நாளே இல்லை என்றாகிவிட்டது. இதை யெல்லாம் அவரது வாழ்க்கைச் சித்திரத்தை எழுத நேரிட்டபோது என்னை ஆச்சரியப்படுத்தியது.”

“24 அத்தியாயங்களில் அவரின் வாழ்வைச் சொல்ல முடிந்ததா?”

“கலைஞர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ள பெரிய அரசியல் தலைவர்தான். ஆனாலும் மிக எளிமையான மனிதர் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. பல அக்னிப் பரீட்சையில் வெற்றி பெற்ற கலைஞர் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தவர். எல்லா வகையிலும் இவரைவிட வாய்ப்பு பெற்றவர்கள்தான் இவரோடு இருந்தார்கள். கலைஞ ரோடு இருந்தவர்களில் அவரை விடக் கல்வியறிவு பெற்றவர்களே அதிகம்.

சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்ற படித்தவர்களின் கேள்விக் கணைகளைத் தன் அனுபவ அறிவின் துணைகொண்டு எதிர்கொண்டார். சினிமாவிலும் கூட அவரின் கணிப்பு சரியாக இருந்தது. ஒரு சமயம் கமல்ஹாசனின் புன்னகை மன்னனும், ரஜினி காந்தின் மாவீரனும் வெளியாக, தனது ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தைத் துணிந்து வெளியிடச் செய்தார். அந்தப் படங்களுக்கு இணையான வெற்றியை கலைஞரின் படமும் பெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரலாறாய் வாழ்ந்தவரின் வாழ்க்கை!

கலைஞரிடமிருந்து பெற வேண்டியது, பெற்றது எல்லாம் கலைஞரின் நம்பிக்கைதான். அவரைக் கொண்டு புது நம்பிக்கையை அடையலாம். ஒரு நல்ல அரசியல்வாதிக்கு இப்படித்தான் நேர்கிறது. அவரைக் காண நேர்ந்தபோதெல்லாம் முழுக்க முழுக்க குடும்பச் சூழலிலோ அல்லது எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டோ கண்டதேயில்லை. அவரை மாதிரி யாரும் அனுபவங்களின் வழி நின்று மேலேறி வரமுடியும். அப்படிப்பட்ட ஆழமும், வாசிப்பு அனுபவமும் இந்தப் புத்தகத்தின் மூலம் கிடைத்தாலே நான் வெற்றிபெற்றதாகக் கருதுவேன். இந்த நூல் ‘சந்தியா’ நடராஜனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வ.உ.சி நூலகத்தினரால் விரைவில் வெளியிடப்படும்..!” என்ற மகிழ்ச்சியான செய்தியைச் சொல்கிறார்.