Published:Updated:

கவிதை: தனிமைக்காலம்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதை

இசை

கவிதை: தனிமைக்காலம்

இசை

Published:Updated:
கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதை

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

வீடு நோக்கியா நடக்கிறார்கள்?

எங்கேனும் நடந்தாக வேண்டும்

எனவே அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

யாரை ஓங்கி உதைப்பது

என்றவர்க்குத் தெரியவில்லை

எனவே

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

“பாளம் பாளமாக

வெடித்துவிட்ட பாதங்கள்”

இப்போது இது வெறும் உவமையல்ல

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

அவர்கள்

பைகளை எடுத்துத் தோளில் மாட்டிய போது

மிரண்டு போயின தெய்வங்கள்

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

மனித சாத்தியத்தை விரிவாக்கும் முயற்சியில்

பறக்கக்கூடச் செய்வார்கள்

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

பிறந்தது எங்கோ?

தின்றது எங்கோ?

எரிவது எங்கானால் என்ன?

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

அகன்ற பாரதம்

ஒரு சந்துக்குள் ஓடியொளிய

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

அவர்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

நடக்கிறார்கள்

கணியனின் மீதேறி நடக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கவிதை
கவிதை