சிறப்புப் பரிசு
எந்த மொழி...
ஆண் குருவியும்
பெண் குருவியும்
ஜோடியாக
நின்றுகொண்டு
கூடுகட்ட
எங்கள் வீடு
பாதுகாப்பானதா எனப்
பரீசிலித்தது பார்வையில்
எங்களுக்கு
தெளிவாகப் புரிந்தது
நாங்கள் நல்லவர்கள்
உங்களை பாதுகாப்போமென
இந்தக் குருவிகளுக்கு
எந்த மொழியில்
எடுத்துச் சொல்வது...
- கதிஜா ஹனிபா, திருச்சி.

ரொக்கப் பரிசு ரூ.300
மின்னல்!
மழைக்கால மேகம்
பூமியின் அழகை
அடிக்கடி
செல்ஃபி எடுக்கிறதோ!
- சித்ரா, சென்னை-64
ரொக்கப் பரிசு ரூ.300
அப்பத்தா!
அப்பத்தா வீட்டு
அம்மியில் இன்றளவும்
மணத்துக்கிடக்கு
அவள் வைக்கும்
கோழிக் குழம்பின்
மசாலா வாசனை
அவள் மரணித்தபின்னும்!
- சுமதி ரகுநாதன், கோவை.
கவிதை படைப்பவரா நீங்கள்..?
உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி எழுதி அனுப்புங்கள்...
பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com