Published:Updated:

கவிதை: தூசு

கவிதை: தூசு
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை: தூசு

கல்யாணராமன்

ரு வீட்டில் ஒரு ஜோடி

ஏசி போதும் இவளுக்கு

ஃபேனும் வேண்டும் இவனுக்கு

சூரிய விடியலில் நடந்து

நியூஸ் பேப்பருடன் திரும்புவாள் இழுத்துப் போர்த்தித் தூங்குவான்

குளிக்கப் போனால் முக்கால்மணி

இவளுக்குப் பத்தே நிமிடம்

தினமும் இட்லிதான் இஷ்டம்

இயற்கை உணவின் ரசிகை

நன்றாக ஸ்விஃப்ட் ஓட்டுவாள்

முன்சீட்டில் ஆப்பிள் தின்றபடி

மெதுவா பார்த்து ஓட்டு என்பான்

டிரஸ் வாங்குவதும் இவளே

ஒரு ஜுரம் தலைவலி என்றால்

லேட்டஸ்ட் மாத்திரை தருவாள்

சம்பளமும் இவளுக்கே அதிகம்

ரீடிங் ரூமில் இவள்

டிவி ஹாலில் இவன்

உயிரோடிருந்தால் மட்டும் போதும்

எல்லாம் இவள் பார்த்துவிடுவாள்

கல்லூரி ஸ்டடி டூர் போனபோது

மலையுச்சியிலிருந்து குதிப்பதாய்

மிரட்டிக் கைத்தலம் பற்றிவிட்டான்

சரி குதி எனத் தள்ளியிருக்கலாம்

இவள் நாடி நரம்பில் கலந்த பரிவு

தன் தலையில் தானே

மண்தள்ளிக்கொண்டது

ஒரு வீட்டில் ஒரு ஜோடி

இவனே இக பரம் இவளுக்கு

என்ன பெரிய லோகமாதா

இவள் கால் தூசாவாளா அவள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கவிதை: தூசு
கவிதை: தூசு