“கடலின் உப்பு

அதன் சொந்தத் துயரத்தால் மிகுந்தது பாபு...”

``Yes, this is very tragedic...

என் கதை மாதிரி...

கண்ணதாசன் எழுதின பாட்டு மாதிரி...

ஜீசஸ்!”

சுதேசியான பாபுவின் தந்தை

உப்புக்கான போராட்டத்திற்காக

சிறைவைக்கப்பட்டு

கிழக்குத் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

ஈஸ்டர் தினத்தன்று

இலங்கையில் வீசப்பட்ட

இரண்டாம் உலகப்போரின் குண்டுகள்

பாபுவைத் துரத்தின.

ஜெமினி ஸ்டூடியோவில் ஃபிரேம் வைக்கப்பட்டு

‘ஆக்ஷன்’ சொன்னதும்

வங்கக்கடலை ஒரே மூச்சில்

நீந்தத் தொடங்கினார் பாபு.

கடற்காகம் ஒயிலாகக் கரைந்தது:

‘புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை!’

பாபுவின் தற்கொலை முயற்சியில்

மயில்துத்தம் தோற்றது,

விதியோடான ரெண்டாம் சுற்றிலும்

மாதா வென்றாள்.

நீதிபதி ரசித்துச் சிரிக்க

குற்றவாளிக் கூண்டில் நின்றபடி

ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசி நடிப்பது

கவித்துவமாக இருந்தது பாபுவுக்கு.

பொன்னகரம் வழியாக

கலைவாணியிடம் அழைத்துச் சென்றார்

புதுமைப்பித்தன்.

மதராஸ் நகரத்து பிலிம்சுருள்களுக்குள் பாய்ந்த பாபு

அடிக்கடி பசியில் சரிந்து விழுந்தார்.

மாலையில் வயிற்றுச் சில்லறைக்காக

சாந்தோம் கடற்கரையில் புழுதிபறக்க நடனமாடுகிறார்

ஜோசப் பிச்சை பனிமயதாசன்,

“ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு

ஜியாலங்கடி ஜிய்யாலோ!”

“மிஸ்டர் ஜெயகாந்தன்…

முதல் காமம் பற்றிய இந்த மெக்ஸிகன் பாடல்

உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

“மதுவில் பனித்துண்டுகள் கரைவது பிடித்திருக்கிறது,

விஸ்வநாதனின் இசையைப்போல…”

“இந்த வாழ்க்கை

சேனல் 5 பெர்ஃப்யூம் போல

அவ்வளவு சுகந்தம்

துரோகியின் புன்னகைபோல

அவ்வளவு மர்மம்.

சாவித்திரி…

இந்த சிகரெட்டை ஓர் அகதியோடு

பகிர்ந்துகொள்ள வேண்டும்போலிருக்கிறது!”

ஷீலா உண்மையைச் சொல்வதற்கு முன்

அதிக மதுகொண்டு

பாபுவின் கிண்ணத்தை நிரப்பினார்.

உடலின் மனதின் ஊழின் புதிர்க்கதைகளை

சொல்லத் தொடங்கியபடியே

ரேடியோகிராமை மெலிதாக ஒலிக்கவிட்டார்.

கழற்றிவைக்கப்பட்ட திருமண மோதிரத்தின் வைரத்தில்

இருளைக் கீறிப் புண்படுத்துகிற ஒளி...

அலைகளிலாடி கொஞ்சம் கொஞ்சமாய்

அரபிக்கடலில் தூரம் போகிறது கப்பல்

பிரிவை வாழ்த்தி கையசைக்கிறார் பாபு

ஷீலா எனும் கடல்

ஷீலா எனும் அலைகள்

ஷீலா எனும் திரும்பாப் புன்னகை

எங்கோ எப்போதோ நினைவில் பதிந்த

அடிவயிற்று மச்சம்போல

ஆழியில் மங்குகிறது அந்தக் கரும்புள்ளி

நிரந்தரமாய் மிதக்கத் தொடங்கினார் பாபு

ஷீலா ஷீலா ஷீலாவெனப்

பொங்கும் மதுவின் ஆழத்தில்

ஓர் அழிவற்ற திமிங்கிலம் வளர்ந்துகொண்டிருந்தது.

பியானோ மீதேறி அபிநயிக்கிறார் பாபு:

``கட்டுப்படியாகலேஏஏ காதல் தரும் வேதனை…

கட்டுப்படியாகலே காஆதல் தரும் வேதனை…”

கால்பந்தாட்டக்காரர் ஒருவர் பந்தை விசைத்து

பாபுவின் ஒப்பனைப்பெட்டியை உடைத்தார்.

சிந்திய வண்ணங்களைக் குழைத்து

பாபுவின் மீதக் கதைக்குக்

காவியச்சுவை சேர்த்தார்

மிஸ்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

குற்றவுணர்வின் அடிவாரத்தில் நின்றபடி

எப்போதாவது தனிமையில் ரகசியமாக

பாபுவின் அந்தப் பாடலைக் கேட்பார்:

“உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்…”

மேகங்களை அளைந்தபடி மலையுச்சியில் கரைகிறதொரு நளினமான ஒல்லி நிழல்.

பாபு இறந்தவனைப்போல நடித்துக்கொண்டிருந்தார்.

கர்த்தர் தமிழில் எழுதிய

மிக சுவாரஸ்யமான ஒரு ஸ்க்ரீன் ப்ளே அது.

தன் கண்டிப்பை மீறி

அருவியை நோக்கியோடும்

சிறுவனின் - விறைத்த - கால்களையே

பார்த்துக்கொண்டிருக்கிறார் காமராஜர்.

பாபுவின் பொருட்டு

இறையை நோக்கி ஓர் ஆங்கில வசையை

முணுமுணுத்த பாதிரி

பைபிள் வரிகளுக்குள் மனம் இடறி விழுந்தார்.

அம்மை ரோஸ்லினின் கருப்பையைப்போல

அந்த நீள்சதுரக் குழி

ஈரக்கதகதப்போடு பாபுவை விழுங்குகிறது.

கஞ்சாவை மூர்க்கமாக இழுத்த ரிக்ஷாக்காரர்

குழறிப் பாடுகிறார்:

‘‘இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!”

சொற்கள்தான் பாபுவின் தீராப் பிரச்னை

அவையே பாடிக்கொண்டிருக்கும்போது

வலுவந்தமாய் அவரின் குரல்வளையை நெரித்தவை.

பாபுவின் கதையில்

கடலும் ஒரு முக்கியப் பாத்திரம்,

மீனவரோடு கடலல்லாமல் யார்தான் விளையாடுவது?

பட்டினப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில்

F வரிசையில் 12 வது ஆளாகப் படுத்திருப்பவர்

மலர்களுதிர்ந்த

வெற்று மூங்கில் வளையத்தைச் சுழற்றியபடி

வினவுகிறார்:

‘‘கண்மணிப் பாப்பா...

மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான்

எனச் சொன்னது தப்பா...”

அகதிகளின் கனவில்

முடிவற்று உருளும் பனம்பழத்தை

கைகளில் ஏந்தி விநோதிக்கும் பாபு

வசைச் சொற்களாலான

சிங்களப் பழமொழியைப் பாடியபடியே

ஓர் அபத்த நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்.

போரிலும் தப்பிய ஈழத்துப் பனையோலையிலான

ஒரு கோமாளித்தொப்பி கிடைத்துவிட்டால்

இந்த நூற்றாண்டைக் குறித்த

வரலாற்று விமர்சனத்தைக்

கவித்துவமாக நடித்துவிடலாம் எனப் புன்னகைக்கிறார்.

பழுதுற்ற அந்தப் பியானோவில்

தவறான இசைக்குறிப்பைக்கொண்டு

நீங்கள் எழுப்பியது அர்த்தமின்மையின் கீதம் பாபு...

ஆனாலும் அவ்வளவு ஆதுரம்!

அவ்வளவு யதார்த்தம்!!

“கடலின் உப்பு

அதன் சொந்தத் துயரத்தால் மிகுந்தது பாபு...”

``Yes, this is very tragedic...

என் கதை மாதிரி...

கண்ணதாசன் எழுதின பாட்டு மாதிரி...

ஜீசஸ்!”

சுதேசியான பாபுவின் தந்தை

உப்புக்கான போராட்டத்திற்காக

சிறைவைக்கப்பட்டு

கிழக்குத் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

ஈஸ்டர் தினத்தன்று

இலங்கையில் வீசப்பட்ட

இரண்டாம் உலகப்போரின் குண்டுகள்

பாபுவைத் துரத்தின.

ஜெமினி ஸ்டூடியோவில் ஃபிரேம் வைக்கப்பட்டு

‘ஆக்ஷன்’ சொன்னதும்

வங்கக்கடலை ஒரே மூச்சில்

நீந்தத் தொடங்கினார் பாபு.

கடற்காகம் ஒயிலாகக் கரைந்தது:

‘புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை!’

பாபுவின் தற்கொலை முயற்சியில்

மயில்துத்தம் தோற்றது,

விதியோடான ரெண்டாம் சுற்றிலும்

மாதா வென்றாள்.

நீதிபதி ரசித்துச் சிரிக்க

குற்றவாளிக் கூண்டில் நின்றபடி

ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசி நடிப்பது

கவித்துவமாக இருந்தது பாபுவுக்கு.

பொன்னகரம் வழியாக

கலைவாணியிடம் அழைத்துச் சென்றார்

புதுமைப்பித்தன்.

மதராஸ் நகரத்து பிலிம்சுருள்களுக்குள் பாய்ந்த பாபு

அடிக்கடி பசியில் சரிந்து விழுந்தார்.

மாலையில் வயிற்றுச் சில்லறைக்காக

சாந்தோம் கடற்கரையில் புழுதிபறக்க நடனமாடுகிறார்

ஜோசப் பிச்சை பனிமயதாசன்,

“ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு

ஜியாலங்கடி ஜிய்யாலோ!”

“மிஸ்டர் ஜெயகாந்தன்…

முதல் காமம் பற்றிய இந்த மெக்ஸிகன் பாடல்

உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

“மதுவில் பனித்துண்டுகள் கரைவது பிடித்திருக்கிறது,

விஸ்வநாதனின் இசையைப்போல…”

“இந்த வாழ்க்கை

சேனல் 5 பெர்ஃப்யூம் போல

அவ்வளவு சுகந்தம்

துரோகியின் புன்னகைபோல

அவ்வளவு மர்மம்.

சாவித்திரி…

இந்த சிகரெட்டை ஓர் அகதியோடு

பகிர்ந்துகொள்ள வேண்டும்போலிருக்கிறது!”

ஷீலா உண்மையைச் சொல்வதற்கு முன்

அதிக மதுகொண்டு

பாபுவின் கிண்ணத்தை நிரப்பினார்.

உடலின் மனதின் ஊழின் புதிர்க்கதைகளை

சொல்லத் தொடங்கியபடியே

ரேடியோகிராமை மெலிதாக ஒலிக்கவிட்டார்.

கழற்றிவைக்கப்பட்ட திருமண மோதிரத்தின் வைரத்தில்

இருளைக் கீறிப் புண்படுத்துகிற ஒளி...

அலைகளிலாடி கொஞ்சம் கொஞ்சமாய்

அரபிக்கடலில் தூரம் போகிறது கப்பல்

பிரிவை வாழ்த்தி கையசைக்கிறார் பாபு

ஷீலா எனும் கடல்

ஷீலா எனும் அலைகள்

ஷீலா எனும் திரும்பாப் புன்னகை

எங்கோ எப்போதோ நினைவில் பதிந்த

அடிவயிற்று மச்சம்போல

ஆழியில் மங்குகிறது அந்தக் கரும்புள்ளி

நிரந்தரமாய் மிதக்கத் தொடங்கினார் பாபு

ஷீலா ஷீலா ஷீலாவெனப்

பொங்கும் மதுவின் ஆழத்தில்

ஓர் அழிவற்ற திமிங்கிலம் வளர்ந்துகொண்டிருந்தது.

பியானோ மீதேறி அபிநயிக்கிறார் பாபு:

``கட்டுப்படியாகலேஏஏ காதல் தரும் வேதனை…

கட்டுப்படியாகலே காஆதல் தரும் வேதனை…”

கால்பந்தாட்டக்காரர் ஒருவர் பந்தை விசைத்து

பாபுவின் ஒப்பனைப்பெட்டியை உடைத்தார்.

சிந்திய வண்ணங்களைக் குழைத்து

பாபுவின் மீதக் கதைக்குக்

காவியச்சுவை சேர்த்தார்

மிஸ்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

குற்றவுணர்வின் அடிவாரத்தில் நின்றபடி

எப்போதாவது தனிமையில் ரகசியமாக

பாபுவின் அந்தப் பாடலைக் கேட்பார்:

“உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்…”

மேகங்களை அளைந்தபடி மலையுச்சியில் கரைகிறதொரு நளினமான ஒல்லி நிழல்.

பாபு இறந்தவனைப்போல நடித்துக்கொண்டிருந்தார்.

கர்த்தர் தமிழில் எழுதிய

மிக சுவாரஸ்யமான ஒரு ஸ்க்ரீன் ப்ளே அது.

தன் கண்டிப்பை மீறி

அருவியை நோக்கியோடும்

சிறுவனின் - விறைத்த - கால்களையே

பார்த்துக்கொண்டிருக்கிறார் காமராஜர்.

பாபுவின் பொருட்டு

இறையை நோக்கி ஓர் ஆங்கில வசையை

முணுமுணுத்த பாதிரி

பைபிள் வரிகளுக்குள் மனம் இடறி விழுந்தார்.

அம்மை ரோஸ்லினின் கருப்பையைப்போல

அந்த நீள்சதுரக் குழி

ஈரக்கதகதப்போடு பாபுவை விழுங்குகிறது.

கஞ்சாவை மூர்க்கமாக இழுத்த ரிக்ஷாக்காரர்

குழறிப் பாடுகிறார்:

‘‘இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!”

சொற்கள்தான் பாபுவின் தீராப் பிரச்னை

அவையே பாடிக்கொண்டிருக்கும்போது

வலுவந்தமாய் அவரின் குரல்வளையை நெரித்தவை.

பாபுவின் கதையில்

கடலும் ஒரு முக்கியப் பாத்திரம்,

மீனவரோடு கடலல்லாமல் யார்தான் விளையாடுவது?

பட்டினப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில்

F வரிசையில் 12 வது ஆளாகப் படுத்திருப்பவர்

மலர்களுதிர்ந்த

வெற்று மூங்கில் வளையத்தைச் சுழற்றியபடி

வினவுகிறார்:

‘‘கண்மணிப் பாப்பா...

மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான்

எனச் சொன்னது தப்பா...”

அகதிகளின் கனவில்

முடிவற்று உருளும் பனம்பழத்தை

கைகளில் ஏந்தி விநோதிக்கும் பாபு

வசைச் சொற்களாலான

சிங்களப் பழமொழியைப் பாடியபடியே

ஓர் அபத்த நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்.

போரிலும் தப்பிய ஈழத்துப் பனையோலையிலான

ஒரு கோமாளித்தொப்பி கிடைத்துவிட்டால்

இந்த நூற்றாண்டைக் குறித்த

வரலாற்று விமர்சனத்தைக்

கவித்துவமாக நடித்துவிடலாம் எனப் புன்னகைக்கிறார்.

பழுதுற்ற அந்தப் பியானோவில்

தவறான இசைக்குறிப்பைக்கொண்டு

நீங்கள் எழுப்பியது அர்த்தமின்மையின் கீதம் பாபு...

ஆனாலும் அவ்வளவு ஆதுரம்!

அவ்வளவு யதார்த்தம்!!