என் பெயர் ரவி கார்மேகம்

ஊர் ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா

உடல் நலமில்லாத அம்மாவுடன்

வாடகை வீட்டில் வாழ்க்கை

ஒரு பேக்கரியில் வேலை

இன்னும் திருமணம் ஆகவில்லை.

கம்ரான் அஷ்ரஃப் வாழும் இடம்

லக்குரோடு, ராவல்பிண்டி, பாகிஸ்தான்

வயதான அப்பா, விதவையான சகோதரியுடன்

வாடகை வீட்டில் வாழ்க்கை

ஒரு பூக்கடையில் வேலை

திருமணமாகவில்லை.

நாங்கள்

இருபத்துமூன்று ஆண்டுகளாக

நண்பர்கள்

ஆனால் இதுவரை நேரில் பார்த்ததுமில்லை

பேசியதுமில்லை

உண்மையில்

இப்பூமியில் நானிருப்பது

அவனுக்கும்

அவனிருப்பது எனக்கும்

தெரியாது

இருந்தும் நாங்கள்

இதயபூர்வமான நண்பர்கள்

இருவருக்கும்

மெஹதி ஹசன் கசல்கள் விருப்பம்

இருவருக்கும்

எலுமிச்சை ஊறுகாய் சுவைக்கும்

இருவருக்கும்

காபி ஒரு போதை

இருவருக்கும்

ரூமி ஒரு ஆச்சர்யம்

இருவருக்கும்

பிடித்த படம் Unforgiven

இருவருக்கும்

பிடித்த நடிகர் மார்கன் ஃபிரீமன்.

நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்

என்னை இராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள்

எங்கள் படை

S-16 என்ற இடத்தில்

முகாமிட்டிருக்கிறது

உத்தரவுகள்

எச்சரிக்கைகள்

கூக்குரல்கள்

பரபரப்புகள்

துப்பாக்கிகளின் முழக்கம்

அழுகை

புகை

குழம்பியோடும் மனிதர்கள்

உயிர் பிரிந்த உடல்கள்

உயிர் பிரியும் உடல்கள்

அங்கங்களும் ஆயுதங்களும்

மண்ணில் சிதறிக்கிடக்கின்றன

எங்கும்

வெறி, சூன்யம்...

நான்

ஒருவனைச் சுட

அவன்

மடங்கி விழுகிறான்

நான் அவனை நோக்கி ஓட

அவன் முகத்தை

எங்கோ

பார்த்த ஞாபகம்

எஞ்சியிருந்த உயிரில்

அவன் என் வயிற்றில் சுட

காற்று என் முதுகெலும்பைத் தடவிப் போகிறது.

என் நாவில் துருவின் சுவை

தடுமாறி அவன்மேல் நான் சாய

அவன் உடல்மேல் ஏதோ வாசனை

அது மல்லிகைப் பூவாகத்தான்

இருக்க வேண்டும்

`ம்ம்மா' என்று முனங்குகிறான்

நான் கொதிக்கும் சூரியனை

உற்றுப் பார்க்கிறேன்

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை

அவன் பழுப்பு நிறச்சுருள் முடியை

நான் தடவிப் பார்க்க

எங்கிருந்தோ ஒரு பெரிய கம்பளம்

என் மேல்

விழுந்து

அழுத்த

தூக்கம் கலைந்து

எழுந்து

நான்

இறந்துபோகிறேன்.

என் பெயர் ரவி கார்மேகம்

ஊர் ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா

உடல் நலமில்லாத அம்மாவுடன்

வாடகை வீட்டில் வாழ்க்கை

ஒரு பேக்கரியில் வேலை

இன்னும் திருமணம் ஆகவில்லை.

கம்ரான் அஷ்ரஃப் வாழும் இடம்

லக்குரோடு, ராவல்பிண்டி, பாகிஸ்தான்

வயதான அப்பா, விதவையான சகோதரியுடன்

வாடகை வீட்டில் வாழ்க்கை

ஒரு பூக்கடையில் வேலை

திருமணமாகவில்லை.

நாங்கள்

இருபத்துமூன்று ஆண்டுகளாக

நண்பர்கள்

ஆனால் இதுவரை நேரில் பார்த்ததுமில்லை

பேசியதுமில்லை

உண்மையில்

இப்பூமியில் நானிருப்பது

அவனுக்கும்

அவனிருப்பது எனக்கும்

தெரியாது

இருந்தும் நாங்கள்

இதயபூர்வமான நண்பர்கள்

இருவருக்கும்

மெஹதி ஹசன் கசல்கள் விருப்பம்

இருவருக்கும்

எலுமிச்சை ஊறுகாய் சுவைக்கும்

இருவருக்கும்

காபி ஒரு போதை

இருவருக்கும்

ரூமி ஒரு ஆச்சர்யம்

இருவருக்கும்

பிடித்த படம் Unforgiven

இருவருக்கும்

பிடித்த நடிகர் மார்கன் ஃபிரீமன்.

நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்

என்னை இராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள்

எங்கள் படை

S-16 என்ற இடத்தில்

முகாமிட்டிருக்கிறது

உத்தரவுகள்

எச்சரிக்கைகள்

கூக்குரல்கள்

பரபரப்புகள்

துப்பாக்கிகளின் முழக்கம்

அழுகை

புகை

குழம்பியோடும் மனிதர்கள்

உயிர் பிரிந்த உடல்கள்

உயிர் பிரியும் உடல்கள்

அங்கங்களும் ஆயுதங்களும்

மண்ணில் சிதறிக்கிடக்கின்றன

எங்கும்

வெறி, சூன்யம்...

நான்

ஒருவனைச் சுட

அவன்

மடங்கி விழுகிறான்

நான் அவனை நோக்கி ஓட

அவன் முகத்தை

எங்கோ

பார்த்த ஞாபகம்

எஞ்சியிருந்த உயிரில்

அவன் என் வயிற்றில் சுட

காற்று என் முதுகெலும்பைத் தடவிப் போகிறது.

என் நாவில் துருவின் சுவை

தடுமாறி அவன்மேல் நான் சாய

அவன் உடல்மேல் ஏதோ வாசனை

அது மல்லிகைப் பூவாகத்தான்

இருக்க வேண்டும்

`ம்ம்மா' என்று முனங்குகிறான்

நான் கொதிக்கும் சூரியனை

உற்றுப் பார்க்கிறேன்

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை

அவன் பழுப்பு நிறச்சுருள் முடியை

நான் தடவிப் பார்க்க

எங்கிருந்தோ ஒரு பெரிய கம்பளம்

என் மேல்

விழுந்து

அழுத்த

தூக்கம் கலைந்து

எழுந்து

நான்

இறந்துபோகிறேன்.