பன்னிறக் கோடுகள் பல வண்ணங்கள்

கிறுக்கல்களால்

சுவர்களை நிறைத்திருக்கிறது

சொல் சொற்றொடர் ஆகாத

மழலை

ஒரு பொழுது மீன் எனும்

ஒரு பொழுது அணில் எனும்

தான் பார்த்தேயிராத பல கொம்பு காண்டாமிருகம் எனும்

சில நேரம்

அதன் அம்மா பூசை செய்யும்போது

இங்கும் தீபம் காட்டு

இது சாமி எனும்.

சீருடை தரித்துப் பள்ளி செல்கிறாள்

வாக்கியங்கள் பாடல் வரிகள் என அப்படியே

ஒப்பிக்கிறாள்

எண்களை வரிசை மாறாமல்

எழுதுகிறாள்.

ஒரு பண்டிகைக்கு வீட்டைப் புதுப்பிக்கையில்

தானும் ஒரு பூசுமட்டை எடுத்து வெள்ளையடிக்கிறாள்.

அவள் காணவே இல்லை

தன் காண்டாமிருகத்தையோ கடவுளையோ.

ஆற்றுமீன் சலம்புகிறது

புது நீர் எனில் எதிர்நீச்சலும் இடுகிறது

ஆறிருந்தால்.

குளத்துமீன் பயமின்றி

கால்களைக் கடித்து விளையாடுகிறது

குளமிருந்தால்.

கிணற்றிலும் வாழ்கின்றன

நீரிருந்தால்.

ஆழ்குழாயிலிருந்து

இரண்டு குடத்தை நிறைக்க

நீரேற்று எந்திரமே

மூச்சுத்திணறும் இம்மாநகரக் குடியிருப்பில்

கேன் தண்ணீருக்கு

இன்னமும் பழகமறுக்கின்றன

கண்ணாடித்தொட்டி மீன்கள்

என்னவொரு வைராக்கியம்!

பன்னிறக் கோடுகள் பல வண்ணங்கள்

கிறுக்கல்களால்

சுவர்களை நிறைத்திருக்கிறது

சொல் சொற்றொடர் ஆகாத

மழலை

ஒரு பொழுது மீன் எனும்

ஒரு பொழுது அணில் எனும்

தான் பார்த்தேயிராத பல கொம்பு காண்டாமிருகம் எனும்

சில நேரம்

அதன் அம்மா பூசை செய்யும்போது

இங்கும் தீபம் காட்டு

இது சாமி எனும்.

சீருடை தரித்துப் பள்ளி செல்கிறாள்

வாக்கியங்கள் பாடல் வரிகள் என அப்படியே

ஒப்பிக்கிறாள்

எண்களை வரிசை மாறாமல்

எழுதுகிறாள்.

ஒரு பண்டிகைக்கு வீட்டைப் புதுப்பிக்கையில்

தானும் ஒரு பூசுமட்டை எடுத்து வெள்ளையடிக்கிறாள்.

அவள் காணவே இல்லை

தன் காண்டாமிருகத்தையோ கடவுளையோ.

ஆற்றுமீன் சலம்புகிறது

புது நீர் எனில் எதிர்நீச்சலும் இடுகிறது

ஆறிருந்தால்.

குளத்துமீன் பயமின்றி

கால்களைக் கடித்து விளையாடுகிறது

குளமிருந்தால்.

கிணற்றிலும் வாழ்கின்றன

நீரிருந்தால்.

ஆழ்குழாயிலிருந்து

இரண்டு குடத்தை நிறைக்க

நீரேற்று எந்திரமே

மூச்சுத்திணறும் இம்மாநகரக் குடியிருப்பில்

கேன் தண்ணீருக்கு

இன்னமும் பழகமறுக்கின்றன

கண்ணாடித்தொட்டி மீன்கள்

என்னவொரு வைராக்கியம்!