Published:Updated:

"நடிகர்களுக்கு டாக்டர் பட்டம்... கி.ரா-வுக்கு இல்லையா?" `மிச்சக் கதைகள்' நூல் வெளியீட்டு விழாவில் ஆதங்கம்!

கி.ரா. மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழா

கி.ரா-வின் 'மிச்சக் கதைகள்' நூல் வெளியீட்டு விழா கோவை கிக்கானி பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

"நடிகர்களுக்கு டாக்டர் பட்டம்... கி.ரா-வுக்கு இல்லையா?" `மிச்சக் கதைகள்' நூல் வெளியீட்டு விழாவில் ஆதங்கம்!

கி.ரா-வின் 'மிச்சக் கதைகள்' நூல் வெளியீட்டு விழா கோவை கிக்கானி பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

Published:Updated:
கி.ரா. மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழா
99 வயதிலும் கரிசல் மண்ணின் மணம் வீசிக் கொண்டிருக்கிறார் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். உலக தாய் மொழிகள் தினமான, 21-2.2021 தேதி, கி.ரா-வின் 'மிச்சக் கதைகள்' நூல் வெளியீட்டு விழா கோவை கிக்கானி பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

இதில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜான்சுந்தர் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மிச்சக் கதைகள் நூலுடன், கோவை சிறுவாணி வாசகர் மையம் சார்பில், 'நிலை நிறுத்தல்' என்ற நூலும் வெளியிடப்பட்டது. கி.ரா மகன் கி.ரா. பிரபி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் பேசும்போது, "இதற்கு யார் மிச்சக் கதைகள் என்று தலைப்பு வைத்தார்கள் எனத் தெரியவில்லை. கி.ரா தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். 108 வயது வரை இருப்பேன் என அவரே கூறியுள்ளார். அவர் இன்னும் செயல்பட வேண்டும். அவர்தர வேண்டிய கொடைகள் அதிகமாக இருக்கின்றன. எனவே இதற்கு 'தொடரும் கதைகள்' எனத் தலைப்பு கொடுத்திருக்க வேண்டும். இந்தத் தலைப்பில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது.

கி.ரா. மிச்சக்கதைகள் நூல் வெளியிடு | நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கே.எஸ். ராதாகிருஷ்ணன், கி.ரா. பிரபி
கி.ரா. மிச்சக்கதைகள் நூல் வெளியிடு | நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கே.எஸ். ராதாகிருஷ்ணன், கி.ரா. பிரபி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டி.கே. ரசிகமணி குறித்து 2 அத்தியாயங்கள் இதில் பதிவு செய்துள்ளார். ரசிகமணியை எல்லாம் நாம் கொண்டாட வேண்டும். கி.ரா-வின் 60 சதவிகித படைப்புகள் கிராமத்தில் இருந்துதான் படைக்கப்பட்டுள்ளன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து எழுதுவது பெரிய விஷயம் இல்லை. கி.ரா விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவர். 2 சினிமாவில் நடித்தவர்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், கி.ராவுக்கு எந்தப் பல்கலைக்கழகமாவது டாக்டர் பட்டம் கொடுத்ததா? இங்கு தகுதியானவர்களை யாரும் கொண்டாடுவதில்லை. கிராமத்திலிருந்து யாருடைய உதவியும் இல்லாமல் வட்டார சொல் அகராதியை கொண்டு வந்தவர். இந்தியாவில் யாரும் அப்படி கொண்டு வந்ததில்லை. அவருடைய படைப்புகள் நாடு கடந்து பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாஞ்சில் நாடன் பேசுகையில், "இந்த மிச்சக் கதைகளில் இடம்பெற்றுள்ள கி.ரா புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. இந்த மாதிரி ஒரு புத்தகம் தமிழில் வெளியிடப்பட்டதாக என்னுடைய அறிவில் இல்லை. மக்கள் மொழி என்பது ஒரு மொழி கிடங்கு. பாரதி காட்சி பிழை என்ற சொல்லை கையாள்வார். கி.ரா நிறப்பிழை என்ற சொல்லை கையாள்வார். மானங்கெட்ட என்ற சொல்லை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகிறோம். கி.ரா ஞானம்கெட்ட என்ற சொல்லைப் பயன்படுத்துவார். அது எனக்கு மிகவும் பொருத்தமான சொல்லாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவரை கரிசல் எழுத்துகளின் முன்னத்தி ஏர், வட்டாரவழக்கு என்று சொல்வதெல்லாம் கி.ரா மாதிரியான ஆளுமையை சிறுமைப்படுத்தும் செயல் என நம்புகிறேன். இந்த மிச்சக் கதையில் கெட்ட வார்த்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எல்லா நவீன தமிழ் எழுத்தாளர்களும், ஆண் பெண் உறவை பற்றி சொல்லும்போது, 'அவன் அவள்மீது ஏங்கினான்' என்ற ஒரே வார்தையைதான் பயன்படுத்துகின்றனர். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை... எது கெட்டவார்த்தை என்பது குறித்து கி.ரா கேள்வி எழுப்புகிறார்.

கி.ரா. மிச்சக்கதைகள் | நாஞ்சில் நாடன்
கி.ரா. மிச்சக்கதைகள் | நாஞ்சில் நாடன்

பழைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இங்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. சினிமா பாடலுக்கு 3 பல்கலைக்கழகங்களும், நகைச்சுவை நடிகருக்கு 2 பல்கலைக்கழகங்களும் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளன. எனக்கு கலைமாமணி விருது கொடுத்தனர். அதை நான் எங்கும் சொல்லிக் கொள்வதில்லை. அரசாங்கங்களுக்குத் தெரியவில்லை. அது யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் சரிதான். கி.ரா-வின் மதிப்பு, மரியாதை தெரியவில்லை. விஜயா பதிப்பகம் வேலாயுதம் முயற்சியில், கி.ரா பெயரில் விருது வழங்கப்படுகிறது. கி.ராவிடம் இன்னும் சொல்வதற்கு 20 ஆண்டுகளுக்குக் கதைகள் இருக்கின்றன" என்றார்.

கி.ரா. பிரபி பேசும்போது, எல்லா பெயர்களையும் குறிப்பிட்டு, "அப்பா சார்பில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று ரத்தின சுருக்கமாகப் பேசி அமர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியாக பேசிய ஜெயமோகன், "1984-ம் ஆண்டுதான் நான் கி.ராவை முதலில் கேள்விப்பட்டேன். கி.ராவின் 60 ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தொகுதியாக அன்னம் வெளியிட்டது. அதுதான் கி.ரா குறித்து நான் வாசித்த முதல் புத்தகம். கி.ரா ஒரு ஆபாச எழுத்தாளர் என்று அ.மார்க்ஸ் மிகக்கடுமையாக தாக்கி கட்டுரை எழுதியிருந்தார். அப்போது எனக்கு வயது 22. நான் விவேகானந்தர் மீது அதிக பற்று வைத்திருந்தேன். அந்த நேரத்தில் அது எனக்கு சரியாகத்தான் பட்டது. அந்தக் காலத்தில் எனக்கு அவர் மீது கடுமையான கோபம் இருந்தது. அப்போது நான் என்னையே விவேகானந்தர் ஆக்கிவிடலாம் என்று முயற்சிகளைத் தொடங்கியிருந்தேன். ஆனால், ஐந்தாறாண்டுகள் கழித்து நான் திருமணம் செய்து கொண்டேன்.

கி.ரா. மிச்சக்கதைகள் | ஜெயமோகன்
கி.ரா. மிச்சக்கதைகள் | ஜெயமோகன்

அவருக்கு முன்பு பலர் மண், விவசாயம் குறித்து கதை எழுதியிருந்தாலும், அவர்கள் எல்லாம் வெளியிலிருந்து பார்த்து எழுதியவர்கள்தான். மண்ணின் வட்டார வழக்கை விட்டுவிட்டு, அந்த மண் குறித்து சொல்ல முடியாது. கி.ராவின் அனைத்து முக்கிய கதைகளையும் வாயில் சொல்லிவிடலாம். அச்சுவடிவில் மட்டுமல்லாமல், பேச்சு வடிவிலும் இருக்கும். அதுதான் வாழும் இலக்கியம். கி.ரா எழுதிய நிலத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே, அவருடைய மண்ணுக்கு சென்றிருக்கிறேன். தன்னுடைய மண்ணுக்காக, மண்ணின் குரலாகவே மாறிய ஒரு கலைஞனாக அவரைப் பார்க்கிறேன். கோடிக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த வறண்ட உயிரற்ற கரிசல் மண்... கி.ரா என்னும் இந்த மனிதன் பிறக்கவில்லையென்றால் இந்த மண் தமிழ் இலக்கியத்தில் இல்லை" என்றார்.

கி.ரா-வுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட தயாராவோம் என சபதமெடுத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism