Published:Updated:

கூழாங்கற்கள்: மதுரை - “மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்”

கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு

மதுரையில், 2013-ம் ஆண்டு ‘மதுரை சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மதுரைக் கல்லூரியில் நண்பர்கள் அனைவரும் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் நாமும் இதுபோல் ஒரு நிகழ்வு நடத்தலாமே என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் `கூழாங்கற்கள்’ இலக்கிய அமைப்பு.

கூழாங்கற்கள்: மதுரை - “மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்”

மதுரையில், 2013-ம் ஆண்டு ‘மதுரை சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மதுரைக் கல்லூரியில் நண்பர்கள் அனைவரும் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் நாமும் இதுபோல் ஒரு நிகழ்வு நடத்தலாமே என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் `கூழாங்கற்கள்’ இலக்கிய அமைப்பு.

Published:Updated:
கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு

ப்போது நண்பர்களில் ஒருவர், மனுஷ்ய புத்திரனின் ‘நீராலானது’ கவிதைத் தொகுப்பை வைத்திருந்தார். அத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதையில் `கூழாங்கற்கள்’ என்கிற சொல் மிகவும் பிடித்திருந்தது. அதையே அமைப்பின் பெயராகச் சூட்டினோம். `மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்’ என்பதுதான் எங்கள் அமைப்பின் மந்திரச் சொற்கள். வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் பேசப்படாத / பேச வேண்டிய படைப்புகளை முன்னெடுத்துச் செல்லவும் வாசிப்பை நேசிக்கும் ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்களாக இணைந்து செயல்படுகிறோம்.

கூழாங்கற்கள்: மதுரை - “மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்”

திருநங்கையர்களின் படைப்புகளை முன்வைத்து நடத்திய கூட்டம், கூழாங்கற்களை இலக்கியத்துடன் அரசியலையும் பேசவைத்தது. `கடவு’ அமைப்புடன் சேர்ந்து, பெண் படைப்பாளிகளையும் அவர்களுடைய படைப்புகளையும் முன்வைத்து ஒரு நாள் கருத்தரங்கினை நடத்தினோம். அதற்கு கிடைத்த ஆதரவு, ஒருநாள் கருத்தரங்குகளை நடத்த உந்துசக்தியாக இருந்தது. குட்டி ரேவதி, தமயந்தி, தமிழச்சி தங்கபாண்டியன், சந்திரா, பிரியா தம்பி, கவிதா சொர்ணவல்லி, மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித், யவனிகா ஸ்ரீராம், குமரகுருபரன் போன்ற படைப்பாளிகள் பங்கேற்க, கவிஞர் தேவேந்திர பூபதி தலைமையேற்று நிகழ்வை நடத்தினார்.

2009-க்குப் பின், பெரும்பாலும் பேசப்பட்டிராத ஈழப்படைப்புகளை முன்வைத்து ‘பிரமிளுக்குப் பின்பான ஈழக் கவியுலகு’ மற்றும் ‘இனப்படு கொலைகளும் இலக்கியமும் - முள்ளிவாய்க்காலை முன்வைத்து’ கருத்தரங்குகள், மதுரை வாசகர்களிடையே ஈழ அரசியலையும் அம்மக்களின் வாழ்வையும் அறிமுகப்படுத்தின. திருமுருகன் காந்தி, ஆழி செந்தில்நாதன் போன்ற போராளிகளையும் பாரதி கிருஷ்ணகுமார், ஜோ டி குருஸ், லிபி ஆரண்யா, பரமேசுவரி.தி, அர்ஷியா, சுதீர் செந்தில், அகரமுதல்வன், யுவபாரதி மணிகண்டன் போன்ற படைப்பாளிகளையும் ஒருங்கே விவாதிக்கவைத்தன. நிலம் சிதைக்கப்படுவதையும் கூறுபோட்டு விற்கப்படுவதையும் பேசும் பிரதிகளை முன்வைத்து நடத்திய கூட்டத்தில், ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’க்கு பாலநந்தகுமார் ஆற்றிய உரை, மிக முக்கியமானது. மதுரை மண்ணின் மைந்தரான அர்ஷியாவின் படைப்புகளைத் தொடர்ந்து பேசியும் அவரைக் கூட்டங்களில் பேசவைத்தும் ‘கூழாங்கற்கள்’ அவரைக் கொண்டாடியது.

வழக்கமான இலக்கிய அமைப்பாக அல்லாமல், சமூக நிகழ்வுகளைப் பொறுத்து பேச வேண்டிய பிரதிகளைத் தேர்ந்தெடுத்து பிரதிகளின் ஊடே தன்னுடைய அரசியலைப் பேசும் கூழாங்கற்களின் உறுப்பினர்களாக கடங்கநேரியான், தீபா நாகராணி, அருணாச்சலம், பிராங்க்ளின் குமார், ஸ்ரீதர் பாரதி, பரமசிவம் சைக்கிள் சிவா, ரெங்கா கருவாயன், ஹரிஷ்குமார் பாண்டியன், ராம்போ குமார், ட்ராக்டர் முருகன், இளங்கோவன் முத்தையா, ரேவா, மழைக்காதலன், பரிமேலழகன் பரி, குருஸ் ஆண்டனி ஹுபர்ட் ஆகியோர் செயல்பட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism