Published:Updated:

மீண்டும் பாகுபலி!

மதன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
மதன் கார்க்கி

“பாகுபலி படம் வெளியானபோதே பலரும் இது என்ன மொழி, இதைக் கத்துக் கொடுக்குறீங்களா என ஆர்வமாகக் கேட்டாங்க.

மீண்டும் பாகுபலி!

“பாகுபலி படம் வெளியானபோதே பலரும் இது என்ன மொழி, இதைக் கத்துக் கொடுக்குறீங்களா என ஆர்வமாகக் கேட்டாங்க.

Published:Updated:
மதன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
மதன் கார்க்கி

‘நிம்ட... தொஸ்ரஸ் டெல்மி ஹர்தபுஸ்கிரக் ஒய்ம் பும்ர மொகினோ ஸுகூ லொஹாக்வே.’

இது என்ன மொழி என நினைவிருக்கிறதா? “உலகத்துல இருக்குற எல்லா மொழிகள்லயுமே கத்துக்கிற ஆர்வத்தைக் குறைக்கிற கடினமான ஒரு விஷயம் இருக்கு. அப்படி எதுவும் இல்லாம சுலபமான மொழியா இதை உருவாக்கியிருக்கேன்” என கிளிக்கி மொழிக்கு உருவம் கொடுத்த மகிழ்ச்சியில் உற்சாகமாக நம்மிடம் பேசத் தொடங்குகிறார் மதன் கார்க்கி. பாகுபலி படத்தில் காளகேயர்கள் ஒரு வித்தியாசமான மொழி பேசுவார்களே, அதற்குத்தான் தற்போது முழுவடிவம் கொடுத்துள்ளார் கார்க்கி. கிளிக்கி மொழி எப்படி உருவாகியிருக்கிறது என அறிந்து கொள்ளும் ஆவலில் அவரது பெசன்ட் நகர் அலுவலகத்திற்குப் படையெடுத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பாகுபலி படம் வெளியானபோதே பலரும் இது என்ன மொழி, இதைக் கத்துக் கொடுக்குறீங்களா என ஆர்வமாகக் கேட்டாங்க. ஆனால் அது படத்துக்காக எழுதப்பட்ட மொழி. அப்போதைக்கு படத்துக்குத் தேவையான 700 வார்த்தைகள் அப்புறம் 40 இலக்கண விதிகள் அளவுக்குத்தான் உருவாக்கியிருந்தோம்.

மொழி
மொழி

அதைத் தவிர பெருசா எந்தத் திட்டமும் அப்போ இல்லை. நிறைய பேர் இதை எப்படிக் கத்துக்கிறதுன்னு கேட்கவும், சரி புதுசா ஒரு மொழியை உருவாக்கலாமேன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. முதல்ல கிளிக்கி மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. பேச மட்டும்தான் முடியும், அதனால அதுக்கு எழுத்து வடிவம் கொண்டு வந்தேன். எழுத்து வடிவத்துல எண்களுக்கான வடிவமும் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகத்துல நிறைய மொழிகள் இருக்கு. ஆனால் எல்லாத்துலேயுமே கத்துக்குறதுக்குக் கடினமான ஒரு விஷயம் இருக்கும். அப்போதான் நாம உருவாக்குற மொழியில கடினம்னு எதுவும் இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அதுனால நாம பயன்படுத்துற மொழியில எதை எல்லாம் கடினம்னு நாம் நினைக்கிறோமோ அது எதுவும் இல்லாத மாதிரி கிளிக்கி மொழிய வடிவமைச்சேன். டிஸ்லெக்ஸியா இருக்கிற குழந்தைங்ககூட கிளிக்கி மொழிய கத்துக்க முடியும். இதுல இருக்கிற ஒவ்வொரு எழுத்தும் கண்ணாடிப் பிரதி பிம்பம் மாதிரிதான் இருக்கும். ஒரு மொழிய எந்த அளவு எளிமைய குடுக்க முடியுமோ, அந்த அளவு எளிமையா உருவாக்கியிருக்கேன். இப்போதைக்கு கிளிக்கி மொழி அகராதியில நாம தினமும் அதிகமா பயன்படுத்துற 3000 வார்த்தைகள் சேர்த்திருக்கேன். இன்னும் 10,000 வார்த்தைகள் சேர்க்கிற ஐடியா இருக்கு” என்றார்.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

இதை எப்படி மற்றவர்கள் பயன்படுத்துற மாதிரி கொண்டு போகப் போறீங்க என்ற கேள்விக்கு, “இந்த மாதக் கடைசியில ராஜமௌலி சார வச்சு கிளிக்கி மொழிய வெளியிடப் போறோம். அது மட்டுமல்ல, இப்போ நிறைய மொழிகள் அழிஞ்சிட்டு இருக்கு. அதுக்கு காரணம் காலத்துக்கு ஏத்த மாதிரி தன்னை அது மாத்திக்காததுதான். இப்போ இருக்க டிஜிட்டல் யுகத்துல கம்ப்யூட்டர்லயும் ஒரு மொழிய பதிவு பண்றது முக்கியம். கிளிக்கி மொழிய கம்ப்யூட்டர்லயும் டைப் பண்ண முடியும். அதுக்கான கம்ப்யூட்டர் ஃபான்ட்ஸ் எல்லாம் ரெடி. கிளிக்கி மொழிக்குன்னு தனியா வெப் சைட் ஒண்ணு உருவாக்கி யிருக்கோம். அதுல போனா கிளிக்கி மொழிய முழுசாக் கத்துக்க முடியும்.

இந்த மொழிய குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் நிறைய பேரைத் தேர்ந்தெடுத்து சொல்லிக் கொடுத்து டெஸ்ட் பண்ணினோம். எல்லோராலும் ஒரு மணி நேரத்துல இந்த மொழிய முழுசாக் கத்துக்க முடிஞ்சது. இந்த மொழிய கத்துக்கணும்னு ஆர்வமா வரவங்க எந்த இடத்துலையும் தேங்கி நிற்காத மாதிரி எல்லா வசதிகளையும் வெப்சைட்ல கொண்டு வந்திருக்கோம். கிளிக்கி மொழியில ஆண்டிரியா ஒரு பாடல் பாடியிருக்காங்க, அதுவும் இப்போ படமாக்கப்பட்டுட்டு இருக்கு” என்றவர், “பாகுபலி படம் பல மொழிகள்ல வெளியாச்சு, ஆனா எல்லா மொழி வெர்ஷன்லயும் கிளிக்கி மட்டும் கிளிக்கியாவேதான் இருந்துச்சு. இது யாருக்கும் சொந்தமான மொழியா இல்லாம எல்லாருக்குமான மொழியா இருக்கணும்.”

நிம்ட... க்க்க்... என நமக்குத்தெரிந்த கிளிக்கியில் நன்றி சொல்லிக் கிளம்பினோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism