பத்து ரூபாய் நாணயம் - #MyVikatan
ஆயிரம் விழிப்புணர்வு ஏற்பட்டபோதிலும், மக்களாகிய நாம் இன்னமும் இவ்வாறான சில விஷயங்களைப் புரிந்துக்கொள்ள முயலாமல் புறந்தள்ளவேபார்க்கிறோம்.

இன்று வலம் வரும் பத்து ரூபாய் நாணயம்போல பல நடைமுறைகள் சில இடங்களில் மதிப்புள்ளதாகவும், பல இடங்களில் செல்லாக்காசாகவும்தான் இருக்கின்றன. அவற்றுள் சில...

1. பொறியியல் படிப்பு: சில இடங்களில் மனித மூளையை ஆச்சர்யமடையச்செய்கிறது. பல இடங்களில், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையை மாற்றியமைக்க முடியாமல்போகிறது.
2. பெண் சுதந்திரம்: சில இடங்களில் அண்டத்தையே அண்ணாந்து பார்க்கவைக்கும் எல்லையற்ற உரிமை பெறுகிறது. பல இடங்களில், வாய்பேச முடியா மௌனத்தையே சூடிக்கொண்டு செல்லாக்காசாகிப்போகிறது.

3. ஏழையின் திறமை: சில இடங்களில் மோதி வென்று, விடியலுக்கு வந்துவிடுகிறது... பல இடங்களில் இருளடிக்கப்பட்டு கிடங்கில் வீசப்படுகிறது.
4. காதல்: சில இடங்களில் சாதி, மதம் தாண்டி வென்று விடுகிறது... பல இடங்களில் உற்றார், ஊரார் மானம் மரியாதைக்காகப் புதைக்கப்படுகிறது.
5. சுய ஒழுக்கம்: பெருமை என்ற பழைமை கட்டுக்குள்வைக்கிறது... பல இடங்களில் நவீனம் என்ற மடைமை அதைத் தொலைக்கச்செய்கிறது.
6. குழந்தை தத்தெடுப்பு: சில இடங்களில் பேராதரவு பெறுகிறது... பல இடங்களில் பைத்தியக்காரத்தனம் என்றே ஏளனப்படுத்தப்படுகிறது.

7. தாய் மொழி வழிக்கல்வி: சில இடங்களில் மனத்தில் புகுந்து மாபெரும் அறிவெழுச்சி அடையச்செய்கிறது. ஆனால் பல இடங்களில், 'கதைக்கு ஆவதில்லை' என்று உதாசீனப்படுத்தப்படுகிறது.
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஆயிரம் விழிப்புணர்வு ஏற்பட்டபோதிலும், மக்களாகிய நாம் இன்னமும் இவ்வாறான சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முயல்வதைவிட, புறந்தள்ளவே பார்க்கிறோம் பத்து ரூபாய் நாணயம் போல.
-நாகசரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/