Published:Updated:

அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!

நன்மாறன் ஓவியம்
பிரீமியம் ஸ்டோரி
நன்மாறன் ஓவியம்

சுவர் ஓவியர்களுக்கு சீசன் வாழ்க்கைதான். தேர்தல், மாநாடு, பொதுக்கூட்டங்கள்னு ஏதாவது நடந்தாத்தான் உண்டு. குடும்பத்துல ரெண்டு பேர் இந்தத் தொழிலை நம்பிக்கிட்டிருக்க வேண்டாம்னு தோணுச்சு.

அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!

சுவர் ஓவியர்களுக்கு சீசன் வாழ்க்கைதான். தேர்தல், மாநாடு, பொதுக்கூட்டங்கள்னு ஏதாவது நடந்தாத்தான் உண்டு. குடும்பத்துல ரெண்டு பேர் இந்தத் தொழிலை நம்பிக்கிட்டிருக்க வேண்டாம்னு தோணுச்சு.

Published:Updated:
நன்மாறன் ஓவியம்
பிரீமியம் ஸ்டோரி
நன்மாறன் ஓவியம்
அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!

நன்மாறனின் டிஜிட்டல் இழைகளில் முகமற்ற பெண்கள் கரம் விரித்து இந்த உலகத்தைத் தம்மோடு இணைத்துக்கொள்கிறார்கள். வெக்டார் சித்திரங்களில் பெரியாரும் அம்பேத்கரும் மார்க்ஸும் அவ்வளவு உயிர்ப்பாக தத்தமது தனித்துவத்தோடு இணைந்து நிற்கிறார்கள். அடையாளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தன் பார்வையில் நன்மாறன் வரையும் மினிமல் ஓவியங்கள் தனித்துவமாக இருக்கின்றன.

சின்டிக் ஸ்கிரீனில் ஆர்ட்பென் தூரிகை கொண்டு தொழில்நுட்ப வழிநடக்கும் இளம் தலைமுறை ஓவியர்களில் நன்மாறன் முக்கியமானவர். டிஜிட்டல் போர்ட்ரைட், வெக்டார் ஆர்ட், கான்செப்ட் ஆர்ட், மினிமல் கேரிக்கேச்சர், போஸ்டர் இல்லஸ்ட்ரேஷன், டைட்டில் கிரியேஷன் என நவீனச் சித்திர வடிவங்களில் கவனம் ஈர்க்கும் நன்மாறன், சுவர் ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். தட்டுத்தடுமாறி சென்னை கவின்கலைக் கல்லூரியை எட்டிப்பிடித்து, விஷூவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு, தற்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டிசைனராகப் பணியாற்றுகிறார்.

அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!
அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!

``மயிலாடுதுறை மாவட்டத்துல சீதை சிந்தாமணின்னு ஒரு கிராமம். அப்பா இடதுசாரி. நாங்க ஏழுபேர் அண்ணன் தம்பிகள். அண்ணன் சாரதி, சுவர் ஓவியரா இருக்கார். பிளஸ் டூ வரைக்கும் தட்டுத்தடுமாறிப் படிச்சேன். பெயிலானதும் அண்ணன்கூடப் போய் பெயின்ட் எடுத்துத் தர்றது, பிரஷ் கழுவித் தர்றதுன்னு சின்னச்சின்ன உதவிகள் செய்ய ஆரம்பிச்சேன். அப்படியே எழுதுற ஆர்வமும் வந்துச்சு. படிப்படியா வரைஞ்சும் பழகினேன். சுவர்ல தலைவர்கள் ஓவியங்கள் வரைவேன். இதழ்கள்ல வர்ற அட்டைப்படங்களை வரைஞ்சு பாப்பேன்.

சுவர் ஓவியர்களுக்கு சீசன் வாழ்க்கைதான். தேர்தல், மாநாடு, பொதுக்கூட்டங்கள்னு ஏதாவது நடந்தாத்தான் உண்டு. குடும்பத்துல ரெண்டு பேர் இந்தத் தொழிலை நம்பிக்கிட்டிருக்க வேண்டாம்னு தோணுச்சு. கோயம்புத்தூருக்குப் பிழைப்புத் தேடிப் போயிட்டேன். பெட்ரோல் பங்குல கல் பதிக்கிற வேலை, ஆபீஸ் பாய்ன்னு கிடைக்கிற எல்லா வேலைகளையும் செஞ்சேன். ஒரு கட்டத்துல திரும்பவும் ஊருக்கே போய் கம்யூட்டர் கத்துக்க ஆரம்பிச்சேன். டைப்பிங், கோரல் டிரா, போட்டோஷாப் மாதிரி பப்ளிஷிங் சார்ந்த விஷயங்களைக் கத்துக்கிட்டு ஒரு கிறிஸ்தவ மாத இதழ்ல லே அவுட் ஆர்ட்டிஸ்டா சேர்ந்தேன். பார்க்கிற காட்சிகளை அப்படியே பிரதியெடுக்காம என் பார்வையில வித்தியாசமா வரைவேன்.

அந்தத் தருணத்துலதான் ஆனந்த விகடன்ல ‘வட்டியும் முதலும்' தொடர் வந்துச்சு. அதுல ஹாசிப்கான் சார் வரைஞ்ச இல்லஸ்ட்ரேஷன்ஸ் எனக்குப் பெரிய வியப்பை உருவாக்குச்சு. முதல்ல அது பேஸ்டல் ஓவியம்னு நினைச்சேன். அதுக்கப்புறம் அதுல இருக்கிற சைனிங்கெல்லாம் பார்த்தபிறகு டிஜிட்டல்ல வரையிற ஓவியம்னு புரிஞ்சுச்சு. அதுபத்தி தீவிரமா தேட ஆரம்பிச்சேன்.

அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!
அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!
அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!

விளம்பரக் கம்பெனிக்கு வேலைக்குப் போனா சம்பளம் அதிகமா கிடைக்கும்னு சொன்னாங்க. ஒரு கம்பெனிக்குப் போய் வேலை கேட்டேன். சிற்றரசன்னு ஒரு அண்ணா இன்டர்வியூ பண்ணினார். நான் வரைஞ்ச படங்களையெல்லாம் பார்த்துட்டு ‘இதையெல்லாம் வச்சுக்கிட்டு விளம்பரக் கம்பெனிக்கு வர முடியாது'ன்னு சொல்லி நிராகரிச்சுட்டார். அவமானமும் வருத்தமுமா அந்த நிறுவனத்துக்கு எதிர்ல இருந்த டீக்கடையில டீ குடிச்சுக்கிட்டிருந்தேன். அப்போ சிற்றரசன் அண்ணா அந்தக் கடைக்கு வந்தார். ‘எந்த ஊரு'ன்னு விசாரிச்சார். அவர் எங்க பக்கத்து ஊர்க்காரர். நெருக்கமாகி உரையாடல் வளர்ந்துச்சு.

என்னைப் பத்தி முழுசா விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டவர், `பிளஸ் டூ அட்டெம்ட் எழுதி பாஸ் பண்ணிடு. கவின் கலைக்கல்லூரின்னு ஒன்னு இருக்கு. அங்கே சேர்ந்தா உன் வாழ்க்கை மாறிடும். தினமும் என் வீட்டுக்கு வா... உனக்கு அடிப்படையான சில பயிற்சிகள் தர்றேன்'னு சொன்னார். அவர் காட்டின வழியிலதான் சென்னை கவின்கலைக் கல்லூரியில விஷூவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன்.

பகுதிநேரமா கல்யாண வீடுகள்ல போய் வரைவேன். விளம்பர நிறுவனங்கள்ல வேலை செய்வேன். அப்படித்தான் படிப்பை முடிச்சேன்.

ஹாசிப்கான் மாதிரி ஒரு பொலிட்டிக்கல் கார்ட்டூனிஸ்டா மாறணும்கிறதுதான் என் கனவு. ஆனந்த விகடன்ல அவர்கிட்டயே இன்டர்ன்ஷிப் பண்ற வாய்ப்பு கிடைச்சுச்சு. அவர்தான் டிஜிட்டல் ஆர்ட் மேல பெரிய மதிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கினார். எதுவா இருந்தாலும் அஞ்சுவிதமான ஸ்கெட்ச் பண்ணச் சொல்வார். அதுல பெஸ்ட்டைத் தேர்வு பண்ணுவார்.

அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!
அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!
அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!

நான் சென்னை கவின்கலைக்கல்லூரியில சேர்றதுக்கு முன்னாடியே என் தம்பி ஜீவா கும்பகோணம் கவின்கலைக்கல்லூரியில சேந்துட்டான். படிப்பு முடிஞ்சதும் அவனையும் அழைச்சுக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். இதழ்கள்ல நிறைய வரைஞ்சேன். தொலைக்காட்சியில வேலை செஞ்சேன். படிப்படியா சினிமா வாய்ப்புகளும் கிடைச்சுச்சு...’’ என்கிறார் நன்மாறன்.

போஸ்டர் இல்லஸ்ட்ரேஷன், டைட்டில் கிரியேஷன் என சினிமாவில் நிறைய செய்திருக்கிறார் நன்மாறன். காளிதாஸ், மாவீரன் கிட்டு, ராட்சசன், பைரவா படங்களின் டைட்டில்கள் இவர் உருவாக்கியவைதான்.

அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!
அப்போ சுவர் ஓவியர்... இப்போ மினிமல் ஆர்ட்டிஸ்ட்!

கேரிகேச்சராகவும் இல்லாத, போர்ட்ரைட்டாகவும் இல்லாத மினிமல் ஆர்ட்டே நன்மாறனின் அடையாளமாக இருக்கிறது. இசையிலும் பரிச்சயம் கொண்ட இவர், அந்தோணிதாசன், அறிவு, லேடி காஷ், ஷான் வின்சென்ட், கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல பாடகர்களை மினிமல் போர்ட்ரைட் சித்திரங்களாக உருவாக்கியிருக்கிறார்.

தொழில்நுட்பத்தை உயிர்ப்போடு வயப்படுத்தும் இளம் தலைமுறை ஓவியர்களின் நம்பிக்கை முகம், நன்மாறன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism