Published:Updated:

தஞ்சை எழுத்தாளர் சி.எம்.முத்து: "இந்தியாவின் சிறந்த 25 நூல்கள்ல என் நூலும் இருக்கு!"

தஞ்சை எழுத்தாளர் சி.எம்.முத்து
தஞ்சை எழுத்தாளர் சி.எம்.முத்து

முத்துவின் எழுத்தையும் வாழ்க்கையையும் முழுமையாக அறிய கீழேயிருக்கும் வீடியோவைப் பாருங்கள்!

தற்கால தமிழ் எழுத்துச்சூழலில் தஞ்சை மண்சார்ந்த வட்டார இலக்கியத்துக்காக போற்றப்படுபவர் சி.எம்.முத்து. 'நெஞ்சின் நடுவே', 'கறிச்சோறு', 'பொறுப்பு', 'இவர்களும் ஜட்கா வண்டியும்', 'வேரடி மண்', 'அப்பா என்றொரு மனிதர்', 'ஐந்து பெண்மக்களும் அஹ்காரத்து வீடும்' உள்ளிட்ட நாவல்கள் முத்துவின் இலக்கியத் தன்மைக்குச் சான்று. 'ஏழுமுனிக்கும் இளைய முனி', 'மழை', 'அந்திமம்', 'சி.எம்.முத்து சிறுகதைகள்' போன்ற சிறுகதை நூல்கள் மூலம் தஞ்சை மண்ணின் வாழ்வியலை மேல்பூச்சின்றி, இயல்பு மேலிடபதிவு செய்தவர். அழுக்கு வேட்டியும், கிழிந்த பனியனுமாக கிராமத்து மண்ணழுக்கு ஓட்டிவாழும் முத்துவின் பேச்சில் எழுத்தாளனுக்கு உரிய இறுமாப்பும், தலைக்கனமும் ஈர்க்கிறது. கதா, இலக்கிய சிந்தனை என இவரது எழுத்து சூடிய மகுடங்கள் ஏராளம். சமீபத்தில் இவர் எழுதிய மிராசு நாவல் தஞ்சை மண்டலத்தின் 70 கால பச்சைய வரலாற்றைப் பேசும் மிகச்சிறந்த புனைவு ஆவணம்.

மேல்பூச்சு பூசா நிலையில் இடைநிற்கும் வீடு. ஓரறையில் விவசாய சாதனங்களும் இன்னொரு அறையில் புத்தகங்களும் குவிந்துகிடக்க, நிலக்கிழாராகவும், வேடிக்கையான அரட்டல் மனிதராகவுமே கிராமத்துக்கு அறிமுகமாகியிருக்கிறார் முத்து. முத்துவின் எழுத்தையும் வாழ்க்கையையும் முழுமையாக அறிய கீழேயிருக்கும் வீடியோவைப் பாருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு