Published:Updated:

``31 வருட உழைப்பு, 300 புத்தகங்களின் மேற்கோள்கள்" ஆர்.பாலகிருஷ்ணனின் நூல் வௌியீட்டு விழா தருணங்கள்!

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

விழா அரங்கில் ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயகின் மணற் சிற்பம் விழா அரங்கில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

`இந்திய பண்பாடு ஒரு மழைக்காடு. மழைக்காடு மண்ணில் முளைப்பது, மண்ணில் செழிப்பது, மண்ணில் நிலைப்பது. தரையிலிருந்து கூரைவரை இன்னும் அடுக்கடுக்காய் நிற்கின்றன' என, தனது புத்தக வெளியீட்டு விழாவில் உணர்ச்சி பொங்கப் பேசினார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான ஆர்.பாலகிருஷ்ணன். சிந்து சமவெளி குறித்த அவரது மிக முக்கியமான ஆய்வு நூலான சிந்து சமவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் பல புதிய திறப்புகளுக்கு அடித்தளமாய் அமைந்தது.

ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய 'Journey Of A Civilization: Indus To Vaigai' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. ரோஜா முத்தையா நூலகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் இதை விநியோகிக்கிறது . புத்தகத்தை ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் வெளியிட, `Early Indians' நூலின் ஆசிரியரும் பிரபல பத்திரிகையாளருமான டோனி ஜோசப் பெற்றுக்கொண்டார்.

புத்தக வெளியீட்டு விழா
புத்தக வெளியீட்டு விழா

விழாவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்.கோபால்சாமி , உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், கே.ராஜன், பி.ஜே.செரியன், தொழிலதிபர் சுப்ரோடோ பாக்சி, நடிகர் சிவகுமார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஆனந்த விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கே.ராஜன் பேசுகையில், ``பாலகிருஷ்ணன் தொல்லியல் துறையின் மூத்த மாணவர். அவர் இன்றும் படித்துக்கொண்டே இருக்கிறார் அதுதான் அவரது பலம். நீங்கள் கடந்த காலத்தோடு பொருந்திப்போய் , அதைக் கொண்டாடி, அதைப் பற்றி ஆய்வு செய்து அதை பிறருக்கும் புகட்ட வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``சிந்து சமவௌி புதிருக்கு விடைதேட பலரும் முயன்றிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் ஆர்.பாலகிருஷ்ணன். தொல்லியல் கண்டுபிடிப்புகளை மானுடவியல் நோக்கிலும், சமூகவியல் நோக்கிலும் அணுக வேண்டும். இந்தப் புத்தகத்தை முழுவதுமாக நான் படித்துவிட்டேன். தொல்லியல்துறைக்குப் பெருமை சேர்க்கக்கூடிய ஒரு படைப்பு. பாலகிருஷ்ணனின் 30 வருட உழைப்பு இந்த நூல். இந்தப் புத்தகத்தில் 300 புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட மேற்கோள்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பல பேராசிரியர்களைப் பணியமர்த்திச் செய்யவேண்டிய பணியை ஒருவரே செய்திருக்கிறார்" எனப் பெருமையுடன் கூறினார்.

இந்திய பண்பாடு ஒரு மழைக்காடு. மழைக்காடு மண்ணில் முளைப்பது, மண்ணில் செழிப்பது, மண்ணில் நிலைப்பது. தரையிலிருந்து கூரைவரை இன்னும் அடுக்கடுக்காய் நிற்கின்றன

``சென்ற இடம் பலநூறு திசையெல்லாம் உன் பாதை பார்த்துவரத்தானா பணித்துவிட்டாய் என்னை" என மொழிக்கும், சிறப்பு அழைப்பாளர்களோடு சேர்ந்து நன்றி தெரிவித்துப் பேசினார் ஆர். பாலகிருஷ்ணன். விழா அரங்கில் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயகின் மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு