கல்பனா ரத்தன்

பொலபொலவென்று கைகளில் சொட்டிய மழைத் துளிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். கணவர் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.

பின்னே... கன்னியாகுமரி கடற்கரையோரம் ஒரு கையில் குச்சி ஐஸ் வைத்துக்கொண்டு, மறுகையில் மழைத்துளிகளை ஏந்திக்கொண்டு மெல்லிய காற்றின் கடலோசையில் ஒரு குழந்தையாக மாறியிருந்த என்னை, எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

நான் என்றால்... நானேதான். ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தால் என்ன? தனக்கென எந்தவொரு அடையாளமும் இல்லாத குடும்பத் தலைவிகளுள் நானும் ஒருத்தி. கணவர் பேங்க் மேனேஜர். வேலைதான் அவரின் முதல் மனைவி. எங்களுக்கு ஒரே பெண். அவளை என்னை மாதிரியில்லாமல் அவளுக்குப் பிடித்ததைச் செய்வதுபோல சுதந்திரமாக வளர்க்கிறோம். பெங்களூரில் அவளுக்குப் பிடித்த கல்லூரியில் அவள் விரும்பிய ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை ஒரே நேர்க்கோட்டில் போகிறது. தனிமையின் மாயக்கரங்கள் மனத்தை இறுக்கியதால் கணவருடன் ஒரு வாரம் கன்னியாகுமரிப் பயணம்.

“செகண்டு ஹனிமூனா... என்ஜாய் மம்மி” - மகள் போனில் கிண்டலடித்தாள்.

`கிழிஞ்சுதுபோ...' - இத்தனை வருடத் திருமண வாழ்வில் இப்போதுதான் தனியாக வந்திருக்கிறோம். இது முதல் `தனி மூன்’ என நினைத்துக்கொண்டேன்.

கடற்கரைக்கு எதிரே கடலை நோக்கி காட்டேஜ். இவர் இங்கு வந்தும் லேப்டாப்பில் வேலைபார்க்க, நான் அலைகளை ரசித்தபடி புத்தகம், பாடல், வாக்கிங் என இருக்க... பொழுதுகள் சுவாரஸ்யமாகவே கழிந்து கொண்டிருந்தன.

கடல் என்றாலே சிலிர்ப்புதான். மூன்று கடல்கள், மூன்று வண்ணங்களில் சங்கமிக்கிற அற்புதம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதைவிட இரண்டு மனங்கள் சங்கமிப்பதுதான் இன்றைய உலகில் மாபெரும் சவால். சூன்யத்தின் உள்ளே நிரம்பிய சூன்யமாக, தனிமைக்குள் வெறுமையை நுழையவிடாமல் அலைகள் மாறிமாறி ரீங்கரித்துக்கொண்டிருக்கின்றன.

எத்தனை மனிதர்களின் அஸ்தியை உள்வாங்கிய கடல்... எத்தனை ஆன்மாக்களைத் தாலாட்டும் கடல்... உடலை வருடும் காற்றின் துளிகளில்கூட எவ்வளவு உயிர்களின் மூச்சுக்காற்று நிரம்பியிருக்கும்? நினைத்தவுடன் மறுபடி உடல் சிலிர்த்தது.

கடற்கரையில் திடீரென ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு, மூன்று பேர் இறங்கி, காரிலிருந்து கைத்தாங்கலாக ஒரு முதியவரை கீழே இறக்கினர். ஒரு நாற்காலியில் மெதுவாக அமர வைத்தனர். அவர் மனைவி போல இருந்தவர் குனிந்து பணிவாக ஏதோ கேட்டார். அதற்கு அவர் கோபத்தில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணியின் முகம் அவமானத்தில் சிவந்து குன்றிப்போனது. தெரிந்த முகமாக இருந்தது. சட்டென்று ஞாபகம் வரவில்லை. யோசித்தபடி இருந்தேன்.

`ஆ! அமலி அக்கா!'

காரணங்கள் என்னென்னவோ சொல்லலாம், கனவை மெய்ப்படுத்தாததற்கு. கனவு ஓரிடத்தில் பிசகி நழுவிச்சென்றுவிட்டால், தேடிப்பிடிப்பது பெரும்பாடாகிவிடுகிறது.

யாரை வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்று நினைத்திருந்தேனோ, யாரிடம் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருந்தேனோ, யாரிடம் உலகத்திலேயே அதிக அளவு கோபம் கொண்டிருந்தேனோ... அந்த அமலி அக்காவை இங்கே இப்படிப் பார்ப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. கணவரிடம் சொல்லிவிட்டு, தயக்கத்துடன் அவரிடம் சென்றேன்.

“அமலி அக்கா...”

திடுக்கிட்டுத் திரும்பிய அமலி அக்காவுக்கு என்னை அடையாளம் கண்டுபிடிக்கச் சில நிமிடங்களாகின.

வாழ்க்கையில் சில பொழுதுகள் வெற்றுக் கணங்களாக கனக்கும். `என்ன கேட்க?' என்று எனக்கும் புரியவில்லை. `என்ன பேசுவது?' என்று அவருக்கும் தெரியவில்லை. உள்ளோடிய மெளனங்களே ஓராயிரம் கதைகள் பேசின.

தன்னுடன் வந்தவரிடம் மெல்லிய குரலில் ஏதோ கூறிவிட்டு வந்தார். இருவரும் மெதுவாக நடந்து கடற்கரை மணலில் அமர்ந்தோம்.

என் மனம் சரசரவென்று பால்யத்துக்குத் தாவியது.

தெருவில் எங்கள் வளவிலிருந்து ஐந்து வளவு தள்ளி அமலி அக்கா வீடு இருந்தது. ஒரே பெண். அப்பா கிடையாது. அம்மா முனிசிபல் ஆபீஸில் வேலை பார்த்து வந்தார். அமலி அக்கா பி.காம் முடித்து வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அம்மா துபாயில் வேலைபார்க்கும் தன் தம்பிக்கு அமலி அக்காவைக் கல்யாணம் செய்ய நினைத்தார். அக்காவுக்கு அதில் இஷ்டம் இல்லை. அதனால், வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அமலி அக்காவிடம்தான் டியூஷன் படித்தேன். என்னுடன் எங்கள் வளவிலிருந்த குழந்தைகள் பலரும் படித்தார்கள். வகுப்பில் முதல் ரேங்க் வாங்கினாலும் அங்கே எல்லோரு டனும் சேர்ந்து படிக்க ரொம்பப் பிடிக்கும்.

எல்லோரும் அவரை `அமலி டீச்சர்' என்று அழைத்தாலும், எனக்கு `அமலி அக்கா’தான்.

அமலி ஒல்லியாக, பொன்வண்ணத்தில் இருப்பார். நீண்ட கூந்தல். ஒற்றைப்பின்னல் பாம்பு மாதிரி கீழிறங்கும். பெரிய கண்கள். சிரித்த முகம். இனிமையான குரல். எங்களுக்கு அப்போதிருந்த தேவி, ப்ரியா, மாதவியை விட அமலி அக்காதான் பேரழகி.

வாழ்க்கையை அதன் வேரிலிருந்து துளித் துளியாக ரசித்து வாழச் சொல்லிக்கொடுத்தவர் அமலி அக்காதான்.

அக்காவுடன் சேர்ந்து கமல், ரஜினி தாண்டி மம்மூட்டி, ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர் போன்றோரையும் ரசிக்கக் கற்றுக் கொண்டோம். இளையராஜா பாடல்கள் தேவ கானங்களாக இருந்தன. காலையிலிருந்து மாலை வரை இலங்கை வானொலி கேட்டோம். ரூபவாஹினி பார்த்தோம். இந்தி விவிதபாரதி, பிபிசி, ரேடியோ மாஸ்கோ, ரேடியோ சீனா எல்லாம் கேட்க ஆரம்பித்தோம். ரசனை என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த காலம் அது.

அக்கா சொன்னபடி லைப்ரரி போய் நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தோம். அவருக்கு விளையாட்டு என்றால் இஷ்டம். `ஸ்போர்ட்ஸ் ஸ்டார்' பார்த்து நிறைய விளையாட்டு வீரர்களைப்பற்றிச் சொல்லிக் கொடுப்பது அமலி அக்காவின் வழக்கம். கலரில் வரும் ஸ்கிரீன் பேப்பர், பிலிம்ஃபேர், ஸ்டார் டஸ்ட் வாங்கி, பிடித்த ஹீரோக்களின் படங்களை அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைப்போம்.

`நம்ம உடம்பையும் மனசையும் எப்பவும் இளமையா வெச்சிருக்கணும்’ என்று சொல்வார். நாங்கள் புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டுவோம்.

போட்டித் தேர்வு, பொதுத் தேர்வு, வங்கித் தேர்வு போன்றவற்றுக்கு அவர் படிக்கும் புத்தகங்களையெல்லாம் எங்களுக்கும் சொல்லிக் கொடுப்பார். நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் வாசிக்கச் சொல்வார். டியூஷன் முடிந்ததும் வீட்டுக்குப்போய் சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் வந்தால் இதெல்லாம் நடக்கும்.

ஒருநாள் எல்லோரிடமும் வருங்காலத்தில் நீங்கள் யாராக ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டதற்கு ஒவ்வொருவரும் டாக்டர், இன்ஜினீயர், டீச்சர், வக்கீல் என்று சொன்னார்கள்.

“எனக்குக் குழப்பமா இருக்குக்கா. என்னைப் பற்றியே எனக்குத் தெரியல. ஒண்ணும் புரியல” என்று தழுதழுத்தபடி கூறினேன். தோளோடு சேர்த்து என்னை அணைத்த அக்காவின் கண் கலங்கியிருந்தது.

சில நேரங்களில் அக்காவுக்கும் அம்மாவுக் கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் நடக்கும். எதுவும் பேசாமல் என் உள்ளங்கையை இறுகப் பற்றி என் ஆள்காட்டி விரலை அழுத்துவார் அக்கா. வலி உயிர் போகும். தன் வலிகளை, வேதனைகளை ஓர் அழுத்தலில் அடக்கிவிடுகிறார் என்று புரியவே பல வருடங்களானது எனக்கு.

மாலை ஆறு மணிக்கு தினமும் பக்கத்துத் தெரு ரகுண்ணா அக்கா வீட்டு வழியாகப் போவார். இருவர் கண்களும் ஆனந்தமாகி ஒரு நொடி சங்கமிக்கும். ஆயிரம் கதைகள் பேசும் இருவரின் கண்களை எங்கள் கண்கள் திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அக்காவுடன் சேர்ந்து ஆற்றுக்குக் குளிக்கப் போவோம். லைஃப்பாய் சோப் மணக்கும் படித்துறையில் காலைக் கடிக்க வரும் மீன்களுக்கு பயந்து அமர்ந்திருப்போம்.

தூரத்தில் ரகுண்ணா தன் ஃபிரெண்ட் ஸுடன் பாடிக்கொண்டே குளிப்பார்...

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

காதல் நாடகம் அரங்கில் ஏறலாம்

ஓ ஓ ஓ ஓ ஜூலி ஐ லவ் யூ...

இந்தப் பாட்டு ஆற்றில் மிதந்து வரும். `ஐ லவ் யூ' என்று பாடுகையில், ரகுண்ணா மெதுவாக அமலி அக்கா முகத்தைப் பார்ப்பார். சடசடவென்று நூறு மீன்கள் அக்காவின் கண்களிலிருந்து குதித்து வெளியேறும்.

ஒருநாள் வீட்டில் அனைவரும் சாயங்கால ஷோ சினிமா பார்த்துவிட்டு திரும்பி வருகையில் அம்மாவிடம் சொல்லிவிட்டு அக்காவைப் பார்க்க வந்தேன். வீடு பூட்டியிருந்தது. `தூங்கியிருப்பாங்க' என்று கிளம்புகையில் சாவித் துவாரத்தின் வழியே வெளிச்சம் வெளியே தெரிந்தது. ஆர்வமிகுதியில் உள்ளே உற்றுப்பார்த்தேன். உள்பாவாடையும் ஆம்பளைச் சட்டையும் போட்டு, `விழிகள் மேடையாம்' பாடலுக்கு அமலி அக்கா டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தார். ஒருவரின் அந்தரங்கத்தைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பது தவறு என்று அந்த வயதில் தெரியவில்லை.

அமலி அக்கா அந்தச் சட்டையில் இன்னும் சின்னப்பெண்ணாக இருந்தார். கரை ஒதுங்காமல் அலைகளில் மிதந்துகொண்டே இருக்கும் ஒற்றைச் செருப்பைப் போல, அந்தச் சட்டை யாருடையது என்கிற கேள்வி என் மனத்தை இம்சித்துக்கொண்டே இருந்தது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் பெரிய பெண்ணாக ஆனதைக்கூட முதலில் அமலி அக்காவிடம்தான் சொன்னேன். திடீரென ஆச்சி, தாத்தா என்னை ஸ்கூலை விட்டு நிறுத்தி, `கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும்' என்று சொன்னதும் அமலி அக்காவிடம் ஓடிச்சென்று அவர் மடியில் படுத்துக் கதறி அழுதேன். அவர்தான் எங்கள் வீட்டில் சண்டைபோட்டு, எடுத்துச்சொல்லி என் படிப்பைத் தொடர அனுமதி வாங்கிக் கொடுத்தார்.

உலகத்தில் உள்ள தெய்வங்களுக்கு மேலாக, ஓர் அழகிய தேவதையாக எனக்கு அமலி அக்கா தெரிந்தார். அவர்மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் இன்னும் அதிகமானது.

`உங்களை மாதிரி பேங்க் எக்ஸாமுக்குப் படிச்சு பேங்கில் வேலை பார்க்கணும்கா' என்று என் ஆசையை ஒருநாள் தயங்கியபடியே சொன்னேன். அவர் முகம் முழுக்க சந்தோஷம்.

ஒருவழியாக டென்த் வந்தாச்சு. அக்கா சொன்னபடி ஒரு வருஷம் சினிமா பார்க்காமல் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். அதேமாதிரி அவர் வீட்டிலும் சண்டைகள் தீவிரமாகின. அக்காவிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. `ரகுண்ணா மனசுல இருப்பதால்தான் திருமணத்துக்கு ஒப்புக்க மாட்டேங்கிறாங்க... அதேநேரம் தன் காதலையும் அம்மாகிட்ட சொல்லத் தயங்கறாங்க' என்பது புரிந்தது.

பரீட்சைகள் முடிந்ததும் விடுமுறையில் அக்கா வீட்டில்தான் கிடந்தோம். அவருக்கு வேலை இன்னும் கிடைத்தபாடில்லை. நாளுக்குநாள் சோர்வாகிக்கொண்டே இருந்தார்.

ரிசல்ட் வந்த நாள். 435 மார்க் எடுத்திருந்தேன். கணக்கில் 99. சந்தோஷம் தாங்கவில்லை. அக்காவிடம் சொல்ல மூச்சிறைக்க ஓடி வந்தேன். கலங்கிய கண் களுடன் இருந்த அக்கா, `வெரிகுட்' என்று தோளைத்தட்டிக்கொடுத்தார். எனக்கோ உற்சாகமெல்லாம் வடிந்து ஏமாற்றமாக இருந்தது. கண்களில் நீர் வடிய வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

அடுத்த இரண்டு நாள்களில் அவர்கள் வீட்டைக் காலி செய்துவிட்டார்கள். எங்கே சென்றார்கள் என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. சொல்லாமல் சென்றதில் அக்கா மேல் கோபம் பொங்கியது. இனிமேல் எந்தக் காலத்திலும் அவர் முகத்தில் முழிக்கக் கூடாது என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.

அந்த அதிர்ச்சியிலிருந்து அடுத்த இரண்டு வருடங்களுக்கு மீளவே முடியவில்லை. ரகுண்ணா தாடி வளர்த்துத் திரிந்தார். பாவமாக இருந்தது.

என்னால் ப்ளஸ் டூவில் சுமாரான மார்க் தான் எடுக்க முடிந்தது. அமலி டீச்சரை மனத்திலிருந்து தூக்கி எறிந்தேன். காலேஜில் சேர்ந்து படித்து `பெரிய ஆள்' ஆக வேண்டும்; அமலி டீச்சருக்குக் கிடைக்காத பேங்க் வேலையைப் பெற வேண்டும் என்று என் மனம் உறுதியெடுத்தது.

ஒரு நிகழ்ச்சிக்கான பின்னூட்டம் தவறாகக் கருதப்படும்போது, அதற்கான எதிர்வினைகளும் எவ்வளவு அபத்தம் என்று பின்னால் புரிந்தது.

நிறைய பெண்களைப்போல என் கல்லூரி செல்லும் லட்சியமும் நிராசை ஆகிவிட்டது. வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடம் போராடி என்னை காலேஜ் சேர்த்துவிட அமலி டீச்சரும் இல்லை. என் ஆசையைக்கூறி, படிக்கப் போகிறேன் என்று கேட்கும் தைரியம் எனக்கும் இல்லை. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டாயிற்று.

காலம்போட்ட கோலத்தில் என் கனவுப் புள்ளிகள் தடமற்று அழிந்தன. யதார்த்த நதியில் ஆசைக் கப்பல் தடுமாறி மூழ்கியது. தொலைத்த என்னை மீட்டெடுக்காத குற்ற வுணர்ச்சி மட்டும் நங்கூரமாக நிலைத்தது.

காலை பள்ளிக்குக் கிளம்பும்போது வழுவழுவென்று மடித்துக் கட்டிய இரட்டை ஜடை, மாலை வீடு வரும் வரை கலையாமல் இருப்பதுபோல வாழ்க்கையும் வருடக்கணக்கில் எந்த மாறுதலுமின்றிச் சென்றுகொண்டிருந்தது.

காரணங்கள் என்னென்னவோ சொல்ல லாம், கனவை மெய்ப்படுத்தாததற்கு. கனவு ஓரிடத்தில் பிசகி நழுவிச்சென்றுவிட்டால், தேடிப்பிடிப்பது பெரும்பாடாகிவிடுகிறது.

எல்லா அம்மாக்களும் அவர்களின் கனவுகளை தங்கள் குழந்தைகளின்மேல் திணிப்பதை நான் விரும்பவில்லை. என் மகள் அவள் ஆசைகளை, கனவுகளை அடைவதில் குறுக்கிடாமல் இருந்தேன்.

முன்னிர்ணயிக்கப்பட்ட எல்லா உணர்வுகளும் அமலி அக்காவைப் பார்த்ததும் சோப்புக் குமிழ்களாக உடைய ஆரம்பித்தன.

டியூஷன், பாய்ஸ் ஷர்ட், டான்ஸ், படித்துறை, ஜூலி ஐ லவ் யூ, ரகுண்ணா... எல்லாம் அலை மடிப்புகளில் சுழன்று கொண்டிருந்தன. ரகுண்ணா இப்போது எங்கே எப்படி இருப்பார் என்ற சிந்தனைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

என்னைப்போலவே அவரும் இளமைக் கால நினைவுகளில் மூழ்கியிருப்பது புரிந்தது. எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு கேள்விகூட அக்காவை நிலைகுலைய வைத்துவிடுமோ என்று பயமாக இருந்தது.

பால்ய கால நானும், பால்ய கால அமலி அக்காவுமாக இப்போது மாறியிருந்தோம். மழைத்துளி ஒன்று, புல் நுனியில் உதிரக் காத்திருப்பதைப்போல மெளனத்தை யார் கலைப்பது என்று அமர்ந்திருந்தோம்.

“அமலி அக்கா... எப்படி இருக்கீங்க?” - அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன்.

புல்லை விட்டு ஓடிய பனித்துளியாக சரசர வென்று அவர் கன்னங்களில் நீர்த்தாரைகள் வடிய ஆரம்பித்து அலைகளில் தெறித்தன.

“ப்ச்... என்னத்தைச் சொல்ல?” என்றபடி அலைகளை வெறித்துப்பார்க்க ஆரம்பித்தார்.

அவர் முகத்தைப் பார்க்கும் திராணியற்று, தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். எங்கள் இருவருக்குமிடையில் பால்யகாலம் நுரைத்து ஓடிக்கொண்டிருந்தது.

நான் நினைப்பதையே அவரும் நினைத்துக் கொண்டிருப்பார் என்று தோன்றியது. எனக்குள் நிகழ்ந்ததைப்போல ஏதோ ஒன்று அவருக்குள்ளும் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கும் என்று நினைத்தேன்.

மெளன அலைகளுக்குள் பேச்சு மூழ்கிக் கொண்டிருந்தது. தழுதழுத்த முகத்துடன் எப்போதும்போல என் விரல்களை இறுக்கப் பற்றினார்.

கடந்தகாலக் கதைகளை அந்த விரல் அழுத்தம் அழுத்தமாகச் சொல்லிவிட்டது.ஆனால், விரலைவிட அதிகமாய் மனது வலித்தது.

இறந்தவர்களின் அஸ்தியை மட்டுமல்ல, உயிரற்ற வாழ்வு வாழும் எத்தனையோ பெண்களின் கண்ணீரையும் உள்வாங்கிய கடல் முன்னெப்போதையும்விட அன்று சற்று அதிகமாக உப்புக் கரித்தது.