Published:Updated:

நாகப்பட்டினம்: முதல் முறையாக நடக்கும் புத்தகத் திருவிழா!

நாகப்பட்டினம் புத்தக கண்காட்சி | Nagapattinam Book Fair

ஜூன் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த புத்தக திருவிழா ஜூலை 4 அன்று நிறைவடைகிறது.

நாகப்பட்டினம்: முதல் முறையாக நடக்கும் புத்தகத் திருவிழா!

ஜூன் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த புத்தக திருவிழா ஜூலை 4 அன்று நிறைவடைகிறது.

Published:Updated:
நாகப்பட்டினம் புத்தக கண்காட்சி | Nagapattinam Book Fair
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நடத்தும் புத்தகக் கண்காட்சி நாகப்பட்டினம் நகரில் முதன்முறையாக தொடங்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பாக நடத்தப்படும் இத்திருவிழா மாவட்ட ஆட்சியரகம் அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் அமைக்கபட்டுள்ளது.
புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சி

100-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில் மக்களை ஈர்க்கும் வண்ணம் FOOD COURT, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம், அரசு திட்டங்கள் சார்ந்த அரங்கங்கள் போன்றவையும் அமைக்கபட்டுள்ளன. இதுதவிர மாலை வேளைகளில் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் மற்றும் பட்டிமன்றங்களும் நடத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூன் 24-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த புத்தக திருவிழா ஜூலை 4 அன்று நிறைவடைகிறது. முதல் நாள் அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு. அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜவஹர், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் ஷா நவாஸ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் திரு. மதிவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் திரு. கௌதமன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஷகீலா மற்றும் பல்வேறு அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் இக்கண்காட்சிக்கு வருகை புரிந்தனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.