Published:Updated:

`மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தைத் தகர்க்கக்கூடியவை புத்தகங்கள்!' - நாஞ்சில் நாடன்

ச.கிருத்திகா
ரூத் ஜான் சு

நல்ல குழந்தைகளை உருவாக்க நல்ல பெற்றோர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்குப் புத்தகங்கள் வழிவகை செய்யும்

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்

நாளுக்கு நாள் டிஜிட்டல் யுகம் வளர்ந்து வருகிறது. புத்தகங்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவிலேயே கிடைக்கின்றன. இருப்பினும் இன்றும் புது புத்தகத்தின் அச்சு வாசனையை நுகர்ந்தபடி புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். புத்தக வாசிப்பாளர்களுக்குப் புத்தகக் கண்காட்சி என்பது திருவிழா போன்றது. கோவை கொடிசியா வளாகத்தில் ஆண்டுதோறும் 10 நாள்கள் தொடர்ந்து நடக்கும் கோவை புத்தகக் கண்காட்சி. பல்வேறு பதிப்பகங்கள் பலநூறு புத்தகங்களோடு களம் இறங்கியுள்ளன.

 கோவை புத்தகக் கண்காட்சி
கோவை புத்தகக் கண்காட்சி

காலை 10.00 - இரவு 8.00 மணி வரை நடக்கும் புத்தகக் கண்காட்சியில் தினமும் தமிழ் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் எனப் பார்வையாளர்களை கொள்ளை கொள்ளும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடிசியாவுக்கு ஒரு விசிட் அடித்தோம். குழந்தைகள் இலக்கியப் பிரிவில் வனம்போல காட்சியளித்தது 'தும்பி' அரங்கம். அங்கிருந்த 'குக்கூ' சிவராஜுடன் பேசினோம்.

``பால்ய காலம் மட்டும்தான் வாழ்வதற்கான நம்பிக்கையையும் அறிவையும் கொடுக்கும். வாண்டு மாமாவின் பூந்தழில் புத்தகம் கொண்டே உறவுகளின் நிராகரிப்பில் இருந்து என் பால்ய காலத்தை மீட்டேன். உலகின் தர்க்கங்களை உடைக்கும் ஒன்றாக குழந்தைகள் மாயாஜால உலகம் உருவாக்கப்படுகிறது.

சிவராஜ்
சிவராஜ்

உலகின் தர்க்கங்களை உடைக்கும் ஒன்றாகக் குழந்தைகள் மாயாஜால உலகம் உருவாக்கப்படுகிறது. அன்றாட வாழ்க்கையோடும் பாட்டி கதைகளோடும் வாழ்வை ரசிக்கும் கிராமப்புற குழந்தைகளின் அனுபவத்தை, புத்தகம் வழி நகர்ப்புற குழந்தைகள் பெறுகின்றனர். குழந்தைகளின் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்டெடுக்கக்கூடிய ஒன்றாக 'தும்பி' இருக்குமென நம்புகிறோம்” எனப் புன்னகைத்தார் 'குக்கூ' சிவராஜ்.       

``மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள். நல்ல குழந்தைகளை உருவாக்க நல்ல பெற்றோர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்குப் புத்தகங்கள் வழிவகை செய்யும். புத்தகக் கண்காட்சிக்கு குழந்தைகளைக் கூட்டி வந்து திருக்குறளும் பாரதியார் கவிதைகளும் வாங்கித்தருவது மட்டும் அல்ல.

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்

பல்வகை நூல்களையும் அறிமுகம் செய்தல் இன்றியமையாதது. புதிய சொற்களை மக்களிடையே பழக்கப்படுத்த புத்தகங்கள் உதவுகின்றன. டிஜிட்டல் என்பது காலத்தின் கட்டாயம். புத்தகம் வாசிப்பதென்பது அழகிய பாடல் கேட்டுச் சுவைப்பது போன்றது" என்றார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.