Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர்

படிப்பறை

பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

‘பெண் மக்கட்குரிய படிப்பு, பெண்கள் சுதந்திரம், பெண்கள் கடமை, பெண்களும் குடும்ப வாழ்க்கையும், பெண்களும் தேச சேவையும்; இவைதவிர, தீண்டாமை ஒழித்தல், கதர் உடுத்தல் இவற்றைத் தீவிரமாகப் பிரசாரம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் ‘சிந்தாமணி’ என்ற இத்தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறேன்’ என்று தனது முதல் இதழில், தெளிவோடு அறிவித்தவர் பாலம்மாள். இவரே தமிழின் முதல் பெண் இதழாசிரியர். அவரைப் பற்றிய மிக அரிய தகவல்களைச் சுமந்து வந்திருக்கிறது ‘பாலம்மாள்’

பாலம்மாள், அறிவித்த நோக்கங்களை இன்று படிக்கும்போது மிக எளியதாகத் தோன்றலாம். ஆனால், இது நடந்தது 1924ஆம் ஆண்டில் எனும்போது வியப்பாக இருக்கும். ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த குடியரசு, ஜஸ்டிஸ், இந்து சாதனம் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு ஏதேனும் இயக்கம், அமைப்புடன் தொடர்பு இருந்தது. பாலம்மாளின் ‘சிந்தாமணி’யைப் போலச் சமூகத்தில் அதிகம் விவாதிக்காத கருத்தியலை முன்னிருத்தும் தனிநபரின் உழைப்பில் வந்த பத்திரிகை வேறு இருந்திருக்குமா என்பது சந்தேகமே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1924 முதல் 1930 ஆம் ஆண்டு வரை ‘சிந்தாமணி’ இதழைக் கடும் சிரமத்திற்கு இடையே நடத்திவந்திருக்கிறார். ஒவ்வோர் ஆண்டு தொடங்கும்போதும் வாசகர்களுக்குப் பாலம்மாள் முன் வைக்கும் கோரிக்கைகளே அதற்குச் சாட்சி. ஆனாலும், அவருக்கு இரண்டு கனவுகள் இருந்தன. ஒன்று, 32 பக்கங்களில் தொடங்கப்பட்ட இதழைப் பக்கங்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். அடுத்தது, சொந்த அச்சகத்தில் ‘சிந்தாமணி’யை அச்சடிக்க வேண்டும். முதல் கனவைப் பலரின் உதவியோடு அவ்வப்போது சாத்தியப்படுத்திக்கொண்டார். இரண்டாம் கனவு நிறைவேறியதாகத் தெரியவில்லை.

படிப்பறை

தொழிலாளர்களின் உழைப்பு; தாழ்த்தப்பட்டோரின் நிலை குறித்துக் கட்டுரை, கதைகளில் பேசுகிறார் பாலம்மாள். ஆனபோதும் பெண் சுதந்திரம் எனும்போது அவரின் நிலைப்பாடு சற்றே முரணாக இருக்கிறது. அவர் பல இடங்களில் இரு விதமான பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று, முன் காலத்தில் பெண்கள் சுந்திரமாக இருந்தார்கள் என்றும், ஆங்கிலேய ஆட்சியில் வந்த நாகரிகப் பெண் சுதந்திரம் பற்றியும். இவற்றில், இரண்டாம் விதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலே பெண்களுக்குத் திருமண வயது நிர்ணயம், பெண்கள் கல்வி ஆகியவற்றில் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறார். 1920-களில் எழுதியதை இன்றிருந்து விமர்சிக்க முடியாது என்றபோதும், அந்தக் காலகட்டத்திலேயே இவை குறித்த முற்போக்குச் சிந்தனைகள் சுயமரியாதை இயக்கத்தார் போன்றவர்களால் பேசப்பட்டன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர்

தொகுப்பாசிரியர்: கோ.ரகுபதி

வெளியீடு, தடாகம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை - 600041

தொடர்புக்கு: 8939967179

விலை: ரூ. 160

பக்கங்கள்: 98

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism