Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை - டி.தருமராஜ்

படிப்பறை

அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை - டி.தருமராஜ்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

‘தமிழர்’, ‘திராவிடர்’ என்னும் கருத்தாக்கங்களை முதன்முதலில் முன்வைத்த முன்னோடிச் சிந்தனையாளர், சாதியத்தின் வரலாற்றைத் தமிழ்ப்பௌத்த அடிப்படையில் விளக்கியவர் அயோத்திதாசர். அவருடைய சிந்தனைகள் குறித்த நூல் டி.தருமராஜின் ‘அயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர் வரை.’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அயோத்திதாசரின் வரலாற்றுப்பின்னணி மற்றும் சிந்தனைகள் குறித்துச் சமகால வாசகர்களுக்கும் விளக்கும் வகையிலான அறிமுகம், அவருடைய சிந்தனைகளை நவீனக் கோட்பாடுகளின் மூலம் விளக்குவது, அவருடைய கருத்துகளில் உள்ள பிரச்னைகளை விளக்குவது என்ற மூன்றுவிதமான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

அயோத்திதாசர்
அயோத்திதாசர்

எளிமையான நடை, ஆய்வாளருக்கே உரிய கச்சிதமான நடை, கவித்துவமான நடை என மூன்றையும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் தருமராஜ். ஆனால் அயோத்திதாசரின் கட்டுரைகளைத் ‘திரும்ப எழுதுதல்’ என்ற உத்தியில் அவர் எழுதும் கட்டுரைகளின் மொழி மட்டும் மற்ற நடையின் உயரத்தை எட்டமுடியாமல் நிற்கின்றன. ‘தீபாவளி என்பது கண்ணன் மாவலியை வதம் செய்ததன் ஞாபகார்த்தப் பண்டிகை’ என்று தருமராஜ் குறிப்பிடும் ஓரிடத்தைத் தவிர, பெரும்பாலான இடங்களில் தகவல்பிழையோ எழுத்துப்பிழையோ இல்லாமலிருப்பது சிறப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அயோத்திதாசரின் ‘வேஷ பிராமணர் - எதார்த்த பிராமணர்’ என்னும் கருத்தாக்கங்களை அம்பேத்கரின் ‘கதவடைப்பு’ கோட்பாட்டுடன் தருமராஜ் ஒப்பிடுவது பொருத்தமற்றது. ‘பிராமணம்’ என்னும் கருத்தியல் புனிதத்தை ஏற்றுக்கொண்டு அதை வேஷ பிராமணர்கள் அபகரித்துக்கொண்டதாகச் சொல்கிறார் அயோத்திதாசர். ஆனால் அம்பேத்கரோ ‘சாதி என்பது தனக்குத்தானே கதவடைத்துக்கொண்ட வர்க்கம்’ என்பதுடன் ‘பிராமண வர்க்கம்தான் முதன்முதலில் கதவடைத்துக்கொண்டது. மற்ற வர்க்கங்கள் அதைப் பார்த்து ‘போலச் செய்தலை’ மேற்கொண்டன’ என்கிறார். அம்பேத்கர் அயோத்திதாசரைப்போல் ‘பிராமணம்’ என்னும் கருத்தியல் புனிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் சாதியின் தோற்றம் குறித்த அயோத்திதாசரின் கருத்துகள் சதிக்கோட்பாடு என்பதுடன் நின்றுவிடுகின்றன. ஆனால் அம்பேத்கர் சாதியத்தின் தோற்றத்தை ஆராய்வதுடன் குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற ஆணாதிக்கச் செயற்பாடுகளுக்கு சாதியத்துடன் உள்ள தொடர்பையும் ஆராய்கிறார்.

தமிழ்ச்சமூகத்தின் பெருமைக்குரிய கருத்தியல் முன்னோடியான அயோத்திதாசரைப் புரிந்துகொள்ளவும் அவருடைய மூல எழுத்துகளையும் அவர் குறித்த பிறநூல்களையும் தேடிப்படிக்க உந்துசக்தியாக இருக்கும் டி.தருமராஜின் இந்நூல்.

அயோத்திதாசர்

பார்ப்பனர் முதல் பறையர் வரை - டி.தருமராஜ்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 600 014. தொலைபேசி: 044- 42009603

பக்கங்கள்: 328

விலை: 300 ரூபாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism