தேவதாசிகளைப் பற்றி நம்மிடையே ஏராளமான கற்பிதங்கள் உள்ளன. உண்மையில் தேவதாசிகள் யார், அவர்கள் நம் கோயில்களுக்குள் எப்படி வந்தார்கள், அவர்களின் பணி என்ன என்பது பற்றிக் கல்வெட்டு ஆதாரங்களோடு விரிவாக எழுதியிருக்கிறார், உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் சாந்தினிபீ.

கோயில் திருப்பணிகள், சேவைகளுக்காகத் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட தேவரடியார்களைப் பற்றி சோழர் கல்வெட்டுகள் நிறைய பதிவுசெய்து வைத்திருக்கின்றன. தானியங்களை இருப்பு வைத்தல், தேவைப்படும் நேரத்தில் நெல் குத்தி இறைவனுக்கான தளிகைகளைத் தயாரித்தல், உற்சவர் உலாவின்போது விளக்குகளை ஏந்தி வருதல், இறைவனுக்கு முன்பு யாழ், குழல் இசைத்துத் திருப்பாவை, திருவெம்பாவை பாடுதல், கூத்தாடுதல் என தேவரடியார்களுக்கு அன்றாடப் பணிகள் வகுக்கப்பட்டிருந்தன. வசைக்கூத்து, புகழ்க்கூத்து, வரிக்கூத்து, வரிசாந்திக்கூத்து என தேவரடியார்கள் நிகழ்த்திய பலவகையான கூத்துகள் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன.

தேவரடியார்களைப்போல, ரிசபதளியிலார், பதியிலார் என்ற இருவகைப் பெண் ஊழியர்களும் கோயில்களில் பணியாற்றியுள்ளார்கள். இந்த மூன்று பெண் பணியாளர்களிடையே ஏற்பட்ட பூசல்கள், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வேலைநிறுத்தங்கள் பற்றிய, சென்னைத் திருவொற்றியூரில் உள்ள ஒரு கல்வெட்டுச் செய்தியைக் குறிப்பிடுகிறார் சாந்தினிபீ. ‘அடிமைகளைப்போல இல்லாமல் தேவரடியார்கள், மிகுந்த மரியாதையோடும் சுதந்திரமாகவும் நடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றைய சமூகச்சூழலில் பெண்கள் பொருளீட்டும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தங்கள் விருப்பம்போலச் செலவிடும் உரிமை எல்லோருக்கும் இருப்பதில்லை. தேவரடியார்கள் தாங்கள் ஈட்டிய செல்வத்தைத் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் தானமாக அளித்துள்ளார்கள். அந்த வகையில் அவர்கள் புதுமைப்பெண்கள்’ என்கிறார் சாந்தினிபீ.

ஆங்கிலேய காலனியாட்சியில் தேவரடியார்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதைக் கர்நாடகத்தைச் சேர்ந்த நாகரத்தினம்மாள், சீதவ்வா இருவரின் வாழ்க்கையை முன்வைத்து விவரிக்கும் பகுதி ஒரு சிறுகதைபோல நீள்கிறது. தேவரடியார்களின் வாழ்க்கை குறித்து வரலாற்றுப்பூர்வமாகப் பேசும் இந்த நூல், பெண்களின் உடல்மீது இழைக்கப்பட்ட, இன்றளவும் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிற காயங்களின் வேரகழ்ந்து ஆராய்கிறது!

கல்வெட்டுகளில் தேவதாசி

முனைவர் எஸ்.சாந்தினிபீ

வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்- 641001

மின்னஞ்சல்: vijayapathippagam2007@gmail.com

விலை: ரூ.100/-

பக்கங்கள்: 104