Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

நீர்வளரி- கோணங்கி

படிப்பறை

நீர்வளரி- கோணங்கி

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

கடந்த நாற்பது ஆண்டுகளாகப் புனைவுலகில் தனித்துவத்துடன் இயங்கிவரும் கோணங்கியின் நான்காவது நாவல் ‘நீர்வளரி.’ ’பாழி’, ‘பிதிரா’, ‘த’ எனும் மூன்று நாவல்களின் வழி மொழி, வடிவம், பேசுபொருள் எனச் செய்த பரிசோதனைகளின் தொடர்ச்சியே இந்நாவலும்.

படிப்பறை

எங்கு தொடங்கி எங்கும் முடிக்கலாம். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொண்டு வாசகனே புதிதாக ஒரு தனிப்பிரதியை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது கோணங்கி வரையும் புதிர்ப்பாதைகளில் கேள்விகளற்றுப் புனைவு மயக்கத்தில் கிறங்கித் திரியலாம். ‘நீர்வளரி’ ஒரு சுதந்திரப் பிரதி. ஆனாலும், அது உலகளாவிய பழங்குடித்தொன்ம மாந்திரீக நாடகத்தன்மை கொண்டு, சமகால அரசியலைப் பகடிசெய்யும் புனைவாகவும் உருக்கொள்கிறது. புகைச்சுருட்டு இலைகளில் ரகசியக் குருதியால் கிறுக்கிய பாத்திரங்கள், புகைந்து எழுந்துவந்து முடிவற்ற நாடகங்களை அரங்கேற்றுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓவியன் வான்கா, கதைசொல்லி தஸ்தாயெவ்ஸ்கி, வெடிமருந்து வாசமடிக்கும் ஈழ அகதிகள், சோழர்கள், யவனர்கள், அடிமைகள், பொம்மலாட்டக்காரர்கள், நிலக்கரித் தொழிலாளர்கள், காடுகளிலிருந்து துரத்தப்பட்ட பழங்குடிப் போராளிகள், நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேலெழுந்துவரும் முத்துக்குளிப்பாளிகள், சர்க்கஸ்காரர்கள், கைதிகள், திருடர்கள், ஷேக்ஸ்பியர், நகுலன் என ஆயிரக்கணக்கான பாத்திரங்களோடு காலமற்ற காலத்தில் பயணிக்கும் ‘முட்டாள்களின் கப்பலில்’ ஓயாக் கதைநாடகம். அதில் கிளைக்கும் பல நூறு உப கதைநாடகங்கள். பலியான பிள்ளைகளை நினைத்துக் குலவையிட்டபடி இந்தப் புனைவுக் கப்பலைச் செலுத்துகிறாள் இருளாயிக் கிழவி.

நீர்வளரி- கோணங்கி
நீர்வளரி- கோணங்கி

தொன்மத்தின் புதிர், நவீனத்தின் கோபம், நாட்டாரியலின் பகடி எனப் பல்குரல் கதைசொல்லலும் விநோதம் பெருகும் காட்சிப்படிமங்களும் நாவலின் பெரும்பலம். கனவுநிலையில் எழுதப்பட்ட அல்லது வாசிக்க வேண்டிய புத்தகமான நீர்வளரி, சுழன்று சுழன்று கதை சொல்லும்போது அது தரும் புனைவுக் கிறுகிறுப்பு போதையூட்டுகிறது.

வான்காவின் பித்துநீல வானில் தமிழ் மூதாய் எறியும் வளரி, பிறையாக வளர்கிறது கதையில்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீர்வளரி கோணங்கி வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, திருச்சி. பக்கம்: 780, விலை: 660

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism